ஆய்வுகூடக் கட்டடம் – முன் நுழைவாயில் திறப்பு விழா, மட்டகளப்பு
வகுப்பறைகளுடன் கூடிய ஆய்வுகூடக் கட்டடம் முன் நுழைவாயில் திறப்பு விழா மட்டகளப்பு களவாஞ்சிகுடி பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசியப் பாடசாலையில் வகுப்பறைகளுடன் கூடிய ஆய்வுகூடக் கட்டடம் – முன் நுழைவாயில் திறப்பு விழா ஆனி 16, 2047 / சூன் 30, 2016 அன்று நடைபெற்றது. இந். நிகழ்விற்கு தலைமை விருந்தினராக மாநிலக்கல்வி அமைச்சர் வே. இராதாகிருட்டிணன் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாகப் பாராளுமன்ற உறுப்பினர்களான கோ. சீ.இயோகேசுவரன், ஞா.சிறிநேசன், ச.வியாழேந்திரன் மாகாணஅவை உறுப்பினர்கள். கல்வி அதிகாரிகள். கல்வி அமைச்சின் பாடசாலை…
ஞாலப்போட்டி(ஒலிம்பியாடு)களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள்
ஞாலப்போட்டி(ஒலிம்பியாடு)களில் (அறிவியல் பிரிவு) கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் கொழும்பு கல்வி அமைச்சில் ஞாலப்போட்டி(ஒலிம்பியாடு)களில் (அறிவியல் பிரிவு) கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் தலைமை விருந்தினராகக் கல்வி அமைச்சர் அகிலவிராசு காரியவசம், மாநிலக் கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன் ஆகியோர் கலந்துகொண்டனர். அமைச்சர்கள் மங்கள விளக்கேற்றுவதையும் சான்றிதழ்கள் வழங்குவதையும் கலந்து கொண்ட மாணவர்களையும் படங்களில் காணலாம். மாநிலக்கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணனின் உரையில், ஒரு நாட்டில் தேர்தல் முடிந்த பின்பு அந்த…
முத்திரை வெளியீடும் நூற்றாண்டு விழாவும்
முத்திரை வெளியீடும் நூற்றாண்டு விழாவும் யாழ்ப்பாணம் மாவட்டம் புலோலி புற்றலை மகா வித்தியாலயத்தின் (1916-2016) நூற்றூண்டு விழா வித்தியாலயத்தின் அதிபர் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் கலந்து கொண்டார். இதன் போது முத்திரை வெளியீடும், நூல் வெளியீடும், சிறப்பிப்பும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]
644 மாணவர்கள் சிறப்பிப்பு – நுவரெலியா
க.பொ.த இயல்புத்தரத் தேர்வில் 5 அ சித்திகளுக்கு மேல் பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட 644 மாணவர்கள் சிறப்பிப்பு மாநிலக்கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன் தலைமையில் நுவரெலியா மாவட்டத்தில் 2015 ஆம் ஆண்டு க.பொ.த இயல்புத்தரத் தேர்வில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொண்ட 644 மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பதக்கமும் வழங்கும் நிகழ்வு இன்று (ஆனி 19, 2047 / 25.06.2016) காலை 8.30 மணிமுதல் நடைபெற்றது. மாநிலக்கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் வாணாள்காப்புறுதிக்கழகத்தின் (எல்ஐ.சி.) காப்புறுதி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இவ்விழா நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் நடைபெற்றது….
மல்லாவியில் ஆய்வுக்கூடங்கள் திறப்பும் அமைச்சர் உரையும்
மல்லாவியில் ஆய்வுக்கூடங்கள் திறப்பும் அமைச்சர் உரையும் “கடந்த காலங்களில் கல்விக்காக நிதி ஒதுக்கப்பட்டபொழுது அதில் பாகுபாடு காட்டப்பட்டது. பெரும்பான்மைக் கல்விக்கூடங்களுக்கு ஒரு மாதிரியாகவும் சிறுபான்மைக் கல்விக்கூடங்களுக்கு வேறு மாதிரியாகவும் நிதி பகிரப்பட்டது. ஆனால், இன்று நிலைமை அப்படி இல்லை. அனைத்துக் கல்விக்கூடங்களுக்கும் ஒரே அளவான நிதி ஒதுக்கப்படுகின்றது. அதற்காகத் தமிழ் அமைச்சர் ஒருவரும் பணியமர்த்தப்பட்டுள்ளார். எனவே, எமது கல்வியின் முன்னேற்றம் வெகு தொலைவில் இல்லை. இதனை எமது மாணவர்களும் ஆசிரியர்களும் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” எனக் கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன்…
முல்லைத்தீவில் தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் திறப்பு
முல்லைத்தீவில் தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் திறப்பு [கல்வி அமைச்சின் ஊடகப்பிரிவு] முல்லைத்தீவு உடையார்கட்டு பெரும் கல்விக்கூடத்தின் (மகா வித்தியாலயத்தின்) தொழில்நுட்ப ஆய்வுக்கூடத்தைக் கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன் ஆனி 02, 2047 / 16.06.2016 அன்று காலை திறந்து வைத்தார். இதன்பொழுது நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், சிவமோகன், சாந்தி சிறிகந்தராசா ஆகியோரும் கலந்து கொண்டனர். கல்விக்கூடத் தலைவர் வி.சிறீகரன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன. விருந்தினர்கள் மாலை அணிவித்து அழைத்து வரப்படுவதையும் ஆய்வுக்கூடம் திறந்து வைக்கப்படுவதையும் கலந்து கொண்டவர்களையும் மாணவர்களுடன் அமைச்சர் கலந்துரையாடுவதையும் படங்களில்…
வெள்ளவத்தையில் பரிசளிப்பு விழா
வெள்ளவத்தையில் பரிசளிப்பு விழா வெள்ளவத்தை இராமகிருட்டிணா கல்விக்கூடத்தின் பரிசளிப்பு விழா அதன் தலைவர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்குத் தலைமை விருந்தினர்களாகத் தேசிய இணைவாழ்வு – கலந்துரையாடல் – அரசவினை மொழிகள் அமைச்சர் மனோ.கணேசன், கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன், மேல் மாகாண அவை உறுப்பினர் சண். குகவரதன், இடைநிலைக் கல்விப் பணிப்பாளர் திருவாட்டி த.இராசரத்தினம், கொழும்பு தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருவாட்டி சீ.கே.இலங்கதிலக முதலான பலர் கலந்து கொண்டார்கள். இத்துடன் மாணவர்களுக்கான பரிசளிப்பும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. [படங்களை…
சங்குவாரி தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்!
[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] சங்குவாரி தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்! சங்குவாரி தோட்ட ஐந்து காணித் தேயிலைத்தோட்டத்தைக் கம்பளை நகரவை எடுத்துக்கொண்டது. இங்கே குப்பைக் கூளக் கூடம் அமைக்க ஏற்பாடு செய்து அதன் முதற்கட்டமாக காணி அளவிடலுக்கு வந்த அதிகாரிகளுக்கு எதிராகவும் இத்திட்டத்துக்கு எதிராகவும் சங்குவாரி தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம். இது குறித்து முன்னால் உடப்பளாத்தப்பகுதி அவையின் உறுப்பினர் எசு.செல்லமுத்து அவர்களினால் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் கவனத்திற்கும் மத்திய மாகாண அமைச்சர் இராமேசுவரன் அவர்களின் கவனத்திற்கும்…
வாழ்க்கைச்செலவு கொடுப்பனவில் குழப்ப வேண்டா!
பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக 10.000உரூபா வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டுவருவதைக் குழப்ப வேண்டா! – மாநிலக்கல்வியமைச்சர் வே. இராதாகிருட்டிணன் பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு 6000.00உரூபா போதாது என்பது நான் அறிவேன் அதற்கு மாநிலக்கல்வியமைச்சர் என்ற வகையிலும் மலைய மக்களின் வாக்குபலத்தில் பாராளுமன்றம் சென்றவன் என்ற வகையிலும் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நான் முறையாகச் செய்து வருகின்றேன் அதற்கு உரிய நடவடிக்கையும் எடுத்து வருகின்றேன் இடையில் இதனைக் குழப்பும் வகையில் செயற்பட வேண்டா! அறிக்கையும்…
முன்மொழிவுப் பணத்தை வழங்க அறவழிப் போராட்டம் – பா.திருஞானம்
அறவழிப் போராட்டம் பெருந்தோட்டத் தொழிற் சங்கப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ் முற்போக்குக் கூட்டணி, வைகாசி 13, 20147 / மே 26, 2016 அன்று கொழும்பு புறக்கோட்டை தொடரிநிலையத்தின் முன்னால் அறவழிப்போராட்டம் ஒன்றினை நடாததினர். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வரவு செலவுத் திட்டதில் முன்மொழியப்பட்ட 2500.00 உரூபா வழங்கப்படாமை குறித்துப் பெருந்தோட்ட முதலாளிமார் பேரவைக்கு அழுத்தம் கொடுப்பதற்கும். சம்பளப்பேச்சினை உடனடியாக விரிவுபடுத்துமாறு கோரியும் . அறப்போராட்டம் நடைபெற்றது. இதன் போது அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அவை உறுப்பினர்கள் முதலானோர் கலந்து கொண்டார்கள். (பெரிதாகக்…
தெற்காசிய மண்டல அமைதி, கல்விக்கான ஆய்வரங்கு – பா.திருஞானம்
தெற்காசிய மண்டல அமைதி, கல்விக்கான ஆய்வரங்கு தெற்காசிய மண்டலத்தின் தொடர்ச்சியான அமைதியும் கல்வியும் : இலங்கை அரசும் பன்னாட்டுச் சிறார் நிதியமும்(யுனிசெப்) இணைந்து நடத்திய ஆய்வு அரங்கு வைகாசி 14, 2047 / மே 27, 2016 அன்று கொழும்பு இல்டன் உறைவகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலவிராசு காரியவசம், மாநிலக் கல்விஅமைச்சர் வே.இராதாகிருட்டிணன், மாநிலஅமைச்சர் பௌசி, ப.சி.நி. (யுனிசெப்) நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் முதலான பலரும் பங்தேற்றனர். பர்பிங்காம் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த கலாநிதி இலின்டேவிசு, சசெக்சு பல்கலைக்கழகத்தினைச்…
கொழும்பு இரோயல் கல்லூரிக்கு மாநிலக்கல்வி அமைச்சர் அதிரடி வருகை! – பா.திருஞானம்
கொழும்பு இரோயல் கல்லூரிக்கு மாநிலக்கல்வி அமைச்சர் அதிரடி வருகை! ஆசிரியர்களுக்கு உடனடி இடமாற்றம் மாநிலக் கல்விஅமைச்சர் வே. இராதாகிருட்டிணன் கொழும்பு அரசு(இரோயல்) கல்லூரியின் தமிழ்ப் பிரிவுற்கு வைகாசி 14, 2047 / 27.05.2016 அன்று அதிரடி வருகை ஒன்றினை மேற்கொண்டார். இதன் போது கல்லூரியின் அதிபர் தமிழ்ப் பிரிவிற்கான துணை அதிபர், தமிழ்மொழி மூலமான ஆசிரியர்களுடன் பாடசாலையின் குறைபாடுகள் குறித்துக் கலந்து உரையாடினார். இதன் போது மாநிலக்கல்வி அமைச்சரின் செயலாளர் திசஃகேவாவித்தான, மேலதிகச் செயலாளர் ஃகேவகே, கல்வி அமைச்சின் தமிழ்க்கல்வி மேம்பாட்டிற்குப் பொறுப்பான…