இராமாயணப் பூமி இலங்கை! – வே.இராதாகிருட்டிணன்

இராமாயணப் பூமி இலங்கை!   “சிவபெருமானின் ஐந்து திருத்தலங்களைக் கொண்டிருப்பதால் இலங்கையைச் சிவபூமி எனச் சிறப்பிக்கிறார்கள். ஆனால், இலங்கை இராமாயணத்தோடு மிக நெருங்கிய தொடர்பைக் கொண்டிருப்பதால் இராமாயண பூமி எனச் சொன்னாலும் தவறில்லை எனத் தோன்றுகிறது. இன்னும் சொல்லப் போனால், இலங்கை இராமாயண பூமியே என்பதை ஆண்டுதோறும் உலகளாவிய தமிழர்களுக்கு எடுத்துச் சொல்லவே நமது கம்பன் கழகம் ஆண்டுதோறும் கோலாகலமாகக் கம்பனுக்கு விழாவெடுத்து அதனூடாக இராமாயணத்தின் பெருமையைப் பறைசாற்றுகின்றது என என் மனதுக்குப் படுகின்றது” எனக் கூறுகின்றார் கல்வி அமைச்சரும் சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தின்…

கொழும்பு கம்பன் விழா 2016

    அகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் கொழும்பு கம்பன் விழா 2016 இரண்டாம் நாள் இரண்டாம் (26) அமர்வில் விருந்தினராகக் கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். இந் நிகழ்வில் படைத்தவனைச் சந்திக்கும் பாத்திரங்கள் என்ற இராமயண நாடகமும், மேல் முறையீட்டுப் பட்டிமன்றமும் நடைபெற்றன. பா.திருஞானம் – 0777375053

11 ஆண்டு கடந்தும் முழுமை பெறா புதுமயில் தோட்ட வீடமைப்புத் திட்டம்

வீடுகள் எரிந்து 11 ஆண்டுகள் கடந்தும் முழுமை பெறாத  புதுமயில் (New Peacock)தோட்ட  மக்களின் வீடமைப்புத் திட்டம்  நேர்ச்சிகள்(விபத்துகள்), பேரழிவுகள், எதிர்பாராமல் நேர்பவை, இவற்றால் பாதிக்கப்பட்டு வீடுகள், உடைமைகளை இழந்தவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்தாலும் ஏனைய அமைப்புகளாலும் பல்வேறு உதவிகள்,  துயரீடுகள் வழங்கப்படுகின்றன.  மலையகத்திலும் பல்வேறு  பேரழிவுகள்பேரழிவு, நேர்ச்சிகள் ஏற்படுகின்றன. எனினும் தோட்ட மக்களை  துயரீட்டுப்பொருள்கள்,  உதவிகள் உரிய வகையில் சென்றடைவதில்லை.  பேரிடர்கள், நேர்ச்சிகள் ஏற்படுகின்ற  சூழல்களில் பாதிக்கப் பட்டவர்களுக்குப் பலதரப்பட்ட உதவிகள்,  துயரீடுகள் கொடுக்கப்படுகின்றன என்பதை மறுப்பதில்லை. எனினும் பாதிக்கப்பட்டவர்கள்  நிலையாக…

மாத்தளை இந்து தேசியக் கல்லூரியில் கணிணிப் பிரிவுத் தொடக்கம்

                           கணிணிப் பிரிவுத் தொடக்கம்     மாத்தளை இந்து தேசியக் கல்லூரியில் மாணவர்களின் பயன்பாட்டிற்காக புதிதாக அமைக்கப்பட்ட கணிணிப் பிரிவினைக் கல்விஅமைச்சர்  வே. இராதாகிருட்டிணன்  திறந்து வைத்தார். இவருடன் மத்திய மாகாண சபை உறுப்பினர் சிவஞானம் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களும் கலந்து கொண்டனர். [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] பா. திருஞானம் – 0777375053 thirunewsfirst@gmail.com

மாத்தளை பாக்கியம் தேசியக்கல்லூரியின் வணிக விழா

வணிக விழாவும் மாணவர்கள் சிறப்பிப்பும்   மாத்தளை பாக்கியம் தேசியக் கல்லூரியின்  வணிக விழாவும் பாடசாலையில் இருந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களைச் சிறப்பிக்கும் நிகழ்வும் மாத்தளையில் நடைபெற்றது. இதற்குச் சிறப்பு விருந்தினராகக் கல்வி அமைச்சர் வே. இராதாகிருட்டிணன் கலந்து கொண்டார்.   இதன் போது  வணிகமன்றத்தின் கலை நிகழ்வும் இடம் பெற்றது. இச் நிகழ்விற்குக் கல்வி அதிகாரிகள், மாத்தளை அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய அறங்காவலர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் முதலிய பெரும் திரளான மாணவிகள் கலந்து கொண்டார்கள். பா.திருஞானம் – 0777375053