தூததும் நினைவே அன்றோ ! – திருமதி சிமோன்

தூததும் நினைவே அன்றோ ! – திருமதி சிமோன்     காலமோ மாறி ஓடும்   கற்பனை, சுவையும் மாறும் ! ஞாலமோ சுமையை வாழ்வில்   நாளுமே ஏற்றி வைக்கும் ! பாலமாய் நின்று தாங்கும்   பாசமும் மறைந்து போகும் ! தூலகம் (விடம்) நிறைந்த போதில்   தூததும் நினைவே அன்றோ !  எண்ணும் பொழுதில் விளையாடும்   இளையோர் நினைவும் அதிலன்றோ ! வண்ணம் மின்னும் காதலதும்   வாழ்வில் மாந்தர் நினைவன்றோ ! திண்ணம் முதியோா் கனவெல்லாம்   தேடும் வம்ச வளமன்றோ ! சுண்ணம் (தூசு) போன்று மறைந்தேகி   தொடரும் கடிதோர்…

பிரான்சு கம்பன் மகளிரணியின் முத்தான கவிதை மூன்று

பள்ளிக்கு ஏன் செல்ல வேண்டும்?     மரபுக் கவிதையைச் சுவைப்போர் குறைந்து வருவதும், அதைப் புரிந்து கொள்வோர் அருகி வருவதும் கண்கூடு. தொன்று தொட்டு வரும் கவி அரங்கம் அல்லது கவி மலர் என்கிற பாணியில் மக்களைச் சலிப்புற வைப்பதற்கு மாற்றாக அவர்கள் ஊன்றிக் கவனிக்கும் வகையில் அவற்றை அளித்தால் என்ன என்ற எண்ணத்தின் வெளிப்பாடே கடந்த இரு வருட மகளிர் விழாவில் முன் வைத்தக் கவிதைகள். சென்ற வருடம் “வினா-விடை” முறையில் ஒரு கவிஞர் கேட்கவும், மற்றொருவர் விடையளிக்கவும் வைத்த உத்தி…