நல்லுணர்வாளர் இணைப்பு – சுமதிசுடர்

  வல்லுணர்ச்சி கொண்டசிலர் இணைந்து கொண்டு    வழிநடத்த உருவாகும் கேட்டை நீக்க, நல்லுணர்வு கொண்டோர்க்குள் இணைப்பு வேண்டும்;    நாள்தோறும் உளம்பகிர்ந்து நெருங்க வேண்டும்; நல்லுணர்ந்தோர் கண்டதெல்லாம் நன்மை நல்கும்;    நட்புடனே உறவுமுறை போற்றி வாழ்வோம்; மெல்லுணர்வு கொண்டோரும் வாழ வேண்டும்;    மேன்மையான வாழ்வுகாண இணைந்து நிற்போம்.   அன்புடன்  சுமதிசுடர்

நாள்தோறும் நினைவில் 11 : ஆதாரங்களைப் பயன்கொள் – சுமதி சுடர்

ஆதாரங்களைப் பயன்கொள் இடத்தைச் சுருக்கு ஆற்றலைச் சேகரி பொருட்களை பாதுகாக்க கருவிகளைக் கையாள் இயந்திரங்களை இயக்கு கட்டுப்பாட்டை வடிவமை மென்பொருள் எழுது செயல்முறையை நிறுவு உயிர்களுக்கு உதவு செய்திகளைப் பரிமாறு  – சுமதி சுடர், பூனா

நாள்தோறும் நினைவில் 10 : உடலைப் பேணு – சுமதி சுடர்

உடலைப் பேணு உடற்பயிற்சி செய் தூய்மையாக இரு அளவோடு உண் தட்பவெப்ப பாதுகாப்பு பெறு பொருள்படைக்க உழை உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வை இயற்கையொடு இணைந்து வாழ் நோய்க் குறிகளை அறி மருத்துவத்தின் துணைகொள் ஆழ்ந்து உறங்கு  – சுமதி சுடர், பூனா