ஐவருக்குச் செம்மொழி வேள் விருது –  பாராட்டு  விழா  2022, சென்னை

மும்பை இலெமுரியா அறக்கட்டளை, தமிழ் அறக்கட்டளை, பெங்களூரு ஆகியன சார்பில் “செம்மொழி  வேள்”  விருது  –  பாராட்டு  விழா  2022 தலைமை : முனைவர் மு.ஆறுமுகம் அமெரிக்காவின்  ஆர்வர்டுபல்கலைக்  கழகத்  தமிழ்இருக்கை      ஆட்சிக்குழு உறுப்பினர் வரவேற்புரை : மும்பை சு.குமணராசன் மும்பை  இலெமுரியாஅறக்கட்டளை  நிறுவனத்தலைவர்  நிகழ்விடம் : சென்னை இராசாஅண்ணாமலைபுரம், முத்தமிழ்ப்  பேரவை இராசரத்தினம்  கலையரங்கம் நாள் :   வைகாசி 29, 2053 /12.6.2022   ஞாயிறு மாலை 5.30 மணி       செம்மொழிவேள்  விருது,  பாராட்டுவிழா  –  2022,  நிகழ்ச்சிக்கு    நிகழ்த்துகிறார். முதன்மை   விருந்தினர்…

புகழுடல் எய்தினார் முத்துச்செல்வன் (எ) மீனாட்சிசுந்தரம்

பகுத்தறிவு முத்து முத்துச்செல்வன் (எ) மீனாட்சிசுந்தரம் மறைந்தார் பெங்களுர் தமிழ்ச் சங்கத்தின் மேனாள் தலைவர், அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவர், 2009ஆம் ஆண்டு மேனாள் தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் பெங்களுரில் திருவள்ளுவர் சிலையைத் திறப்பதற்குக் காரணமானவர்களில் முதன்மையானவர்களுள் ஒருவர், கன்னியாகுமரி மாவட்டம் காப்பியக் காட்டில் தொல்காப்பியர் சிலை நிறுவித், திறக்கப்படுவதற்கு முதன்மையானவர்களுள் ஒருவராக இருந்து பணியாற்றியவர், பெங்களுரு இந்தியன் தொலைபேசி தொழிலகத்தில் முதுநிலைப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர், பெங்களுரில் வசிக்கும் திருச்சிராப்பள்ளியைச் சார்ந்தவர், பெரியார் அன்பர், சொற்பொழிவாளர், தமிழ்த்தொண்டர், தமிழறிஞர், மு….

பெங்களூரு திருவள்ளுவர் மன்ற நூலகம் சூறையாடல் – குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்!

பெங்களூரு திருவள்ளுவர் மன்ற நூலகம் சூறையாடல் –  குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்!   அறிவுப் போராட்டத்துக்கான படைக்கலன்கள் செய்யும் படைவீடு நூலகம்(இங்கர்சால்). நூலகம் இருக்குமிடத்தின் ஒளிவிளக்கு. உலகில் வலிமையான ஆயுதம் எழுதுகோல்; அத்தகைய எழுதுகோலைப் பயன்படுத்துவோரைப் பட்டை தீட்டுவன நூலகங்களே!. எல்லா நிலையினருக்கும் அறிவுச் செல்வங்களை வாரி வழங்கும் வாயில்களாக விளங்குவனவும் நூலகங்கேள! நாட்டின்மீது போர்தொடுத்தாலும் நூலகங்கள்மீது கைவைக்காதவனே சிறந்த தலைவன்.    வைகாசி 18, 2012 / மே 31, 1981 அன்று யாழ்நூலகம் எரிக்கப்பட்டது!  கிடைத்தற்கரிய நூல்கள் அடங்கிய ஏறத்தாழ…

பெங்களூரு மாநகர்த்தொடரிக் கூட்டுக்கழகத்தில் வேலைவாய்ப்பு

பெங்களூரு மாநகர்த்தொடரிக் கூட்டுக்கழகத்தில் வேலைவாய்ப்பு     பெங்களூரு மாநகர்த்தொடரிக் கூட்டுக்கழக (Bangalore Metro Rail Corporation Limited) அரசு நிறுவனத்தில் 3 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 21 துணை முதன்மைப் பொறியாளர் பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன! [No. BMRCL/224/ADM/2016/PRJ நாள்: 20.01.2016] மொத்தக் காலியிடங்கள்: 21 பணி: துணை முதன்மைப் பொறியாளர் (Deputy Chief Engineer) காலியிடங்கள்: 07 ஊதியம்: உரூ.37,400 – 67,000 + தர ஊதியம் உரூ.8,700 மொத்தம் உரூ.1,22,039 வயது வரம்பு: 55-க்குள்…

எல்லாம் தமிழ்நிலமே! – இலக்குவனார் திருவள்ளுவன்

எல்லாம் தமிழ்நிலமே! குறுஞ்செய்திகள் சில.   புறநானூற்று 6ஆம் 17ஆம் பாடல்களில் தமிழகத்தின் எல்லை வடக்கே பனிமலையாம் இமயமலை என்றும் தெற்கே குமரி என்றும் குறிப்பிடுகின்றன. இந்தியத் துணைக்கண்டம் முழுமையும் தமிழ்நிலமே என்னும் பொழுது இதன் ஒரு பகுதியாகிய கருநாடக மாநிலமும் தமிழ் நிலமே.   ஊர் என்ற பின்னொட்டும் தமிழுக்குரியதே. எனவே, மைசூர், பெங்களூர், மங்களூர், பிசப்பூர், சிக்மகளூர் எனக் கருநாடகத்தில் அமைந்துள்ள பல ஊர்களும் அவை தமிழ்ப்பகுதியாக விளங்கியமைக்குச் சான்றாகும்.   எருமையூர் எனத் தமிழ் மன்னர்களால் ஆளப்பட்ட தமிழர் வாழ்ந்த…

தமிழைப் புறக்கணித்த இடத்தில் கமல்

பெங்களூரில் அண்மையில் கருநாடகச் செய்தித்துறை, கருநாடகச் சலனச்சித்திரா அகாதமி ஆகியன இணைந்து பன்னாட்டுத் திரைப்படவிழாவை நடத்தின.  இவ்விழாவில் ஒரு தமிழ்த் திரைப்படம்கூட வெளியிடப்படாமல் கருநாடகத்தினர் கவனமாகப் பார்த்துக் கொண்டனர். எனினும் முன்பு ஒரு திரைப்படத்தில் சிக்கல் எழுந்த பொழுது தான் பெங்களூர் அல்லது மைசூரில் குடியிருப்பேன்  என அறிவித்த கமலை மட்டும் அழைத்து விழாவைத் தொடக்கி வைக்கச் செய்தனர். தமிழ்க்கலை உலகைப் புறக்கணித்த கருநாடக விழாவில் கமல் பங்கேற்றது தமிழ்க்கலையுலகினரை அதிர்ச்சி யுறச் செய்துள்ளது. கலைக்கு மொழி வேறுபாடில்லை எனக் கூறி ஏமாற்றுவோர் தமிழைப்…