(தோழர் தியாகு எழுதுகிறார் 247 : குறைபாடுள்ள குடியுரிமைச் சட்டமும் பிறவும் – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! உயிரற்ற உடலும் உண்மைக்குப் போராடும் – பெரியகுளம்! 2023 ஆகத்து 5 காரிக் கிழமை காலை 7 மணியளவில் தேனி மாவட்டம் பெரியகுளம் கும்பக்கரை சாலையில் ஒரு மாந்தோப்பில் உயிரற்ற உடல்களாகத் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த சாதிமீறிய காதலர்கள் மகாலட்சுமி – மாரிமுத்து… இருவரில் ஒருவரின் உடல் சடலக் கூறாய்வு முடித்து அவசரமாக எரியூட்டப்பட்டு விட்டது. அந்த எரிமேடையில் மகாலட்சிமியின் காதலோடும் உடலோடும் சேர்ந்து எத்தனை…