தவத்திரு ஊரன் அடிகளார்க்குப் புகழ் வணக்கம்! -பெ.மணியரசன்

தவத்திரு ஊரன் அடிகளார்க்குப் புகழ் வணக்கம்! வள்ளலார் வழி ஆன்மிகச் சான்றோராக விளங்கிய தவத்திரு ஊரன் அடிகளார் இன்று (14.7.2022) அடக்கம் ஆனார்கள் என்ற செய்தி மிகவும் துயரமளிக்கிறது. வள்ளலார் வழியில் துறவு வாழ்க்கையை மேற்கொண்டு, வடலூர் சன்மார்க்க நிலைய வளாகத்தையே தமது வாழ்விடமாக்கிக் கொண்டவர் ஊரன் அடிகளார். நான் திருச்சி தேசியக் கல்லூரியில் புகுமுக வகுப்பு (பி.யூ.சி) படிக்கும் போது, தங்கிப் படித்த திருச்சி சிந்தாமணி பாப்பம்பாள் சத்திர அறக்கட்டளை விடுதியில் ஒரு சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்றுச் சிறப்பாகச் சைவநெறி, வள்ளலார்நெறி ஆகியவை…

தமிழர் வரலாற்றுத் தடம் – 4 – தாய்மொழி காக்க நடைபெற்ற போராட்ட வரலாறுகள்

தமிழகப் பெண்கள் செயற்களம் நடத்தும் தமிழர் வரலாற்றுத் தடம் – 4 பிப்பிரவரி 21 உலகத் தாய்மொழி நாளை  முன்னிட்டு    தாய்மொழி காக்க நடைபெற்ற  போராட்ட வரலாறுகள் என்ற தலைப்பில் இணைய வழி நினைவுப் பகிர்வுகள் நாள்:  மாசி 08, 2053 20-02-2022, ஞாயிற்றுக் கிழமை மாலை 5.00 அடையாள எண்:  839 6569 6118 ; கடவுச் சொல்: 101010 கூட்டத்தில் இணைய… https://us02web.zoom.us/j/83965696118?pwd=eEVQb3ZXV3A1ZEhlUnBWNm0zY01FUT09 சான்றோர்களின் கடந்த கால ஈகத்தையும் பட்டறிவையும் அடுத்தத் தலைமுறைக்குக் கடத்திடும் நோக்கத்துடன் இந்நிகழ்வில்.. மொழிப் மீட்புப் போராட்டங்களில் களம் கண்டவர்களின் களப் பணியை பற்றி அல்லது தமது நேரடி களப் பணியைப் பற்றிய நினைவுகளை  பகிர உள்ளவர்கள் 👇👇👇 மொழிப் போர்  ஈகையர் ஐயா அ. இரவீந்திரன் என்ற இரவி வாமணன் அவர்கள் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் பேராசிரியர் சி. இலக்குவனார் பற்றி அவருடைய பெருமகனார் ஐயா இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் பற்றி அவருடைய பெயரர் முனைவர் கோ. வீரமணி அவர்கள் பாவலரேறு பெருஞ்சித்திரனார்  பற்றி அவருடைய பெருமகனார் முனைவர் மா. பூங்குன்றன் அவர்கள் திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் பற்றி அவருடைய துணைவியார் அம்மா இறை பொற்கொடி அவர்கள் இணைய வழி நடைபெறும் இக் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்பீர்! அழைக்கிறது.. தமிழகப் பெண்கள் செயற்களம் சென்னை, தமிழ்நாடு. 9884187979 ; 9094430334

மதுரையில் வேத பிராமணிய முறையில் தமிழன்னை சிலை அமைப்பதை எதிர்த்துப் போராட்டம்! பெ. மணியரசன் முதலான 200 பேர் கைது!

மதுரையில் வேத பிராமணிய முறையில் தமிழன்னை  சிலை அமைப்பதை  எதிர்த்துப் போராட்டம்!  பெ. மணியரசன் முதலான 200 பேர் கைது! போராட்டத்திற்கு முதல் கட்ட வெற்றி! மதுரையில் தமிழ்ச் சங்க வளாகத்தில் வேதகாலப் பிராமணிய முறைப்படித் தமிழன்னை சிலை அமைக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்ததை எதிர்த்து இன்று(ஆனி 02, 2050 / 17.06.2019) காலை நடைபெற்ற போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் தலைமையில் ‘தமிழர் மரபுக்கு எதிரான தமிழன்னை சிலைஎதிர்ப்புக் கூட்டமைப்பு’ சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி இன்று காலை பேரணியாக இப்போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் “தமிழக அரசே தமிழக அரசே!, நீக்கு! நீக்கு!வேதகாலப்பிராமண முறைப்படித் தமிழன்னை சிலைஅமைப்பதை…

மொழிப்போர் ஈகி திருப்பூர் பெரியசாமிக்கு உதவுங்கள்! – பெ. மணியரசன்

நோயில் துன்புறும் மொழிப்போர் ஈகி திருப்பூர் பெரியசாமி அவர்களுக்கு உதவுங்கள்!தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள் அன்பார்ந்த தமிழ்ப் பெருமக்களே !  மொழிப்போர் ஈகியர்,  திருப்பூர் ப. பெரியசாமி அவர்களைத் தமிழ் உணர்வாளர்கள் நன்கு அறிவர்.  1965 இல் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் திருப்பூரில் கலந்து கொண்டு போராடியவர் திரு. பெரியசாமி அவர்கள். அப்போது அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் கிளைச்  செயலாளராக இருந்தார். இப்போது அவருக்கு அகவை 83. இந்தித் திணிப்பை எதிர்த்து அவர் ஏற்றிய கருப்புக் கொடியை இறக்கச் சொல்லி காவல் துறை பெரியசாமிக்குக் கட்டளையிட்டது. கருப்புக் கொடியை இறக்க மறுத்துவிட்டார் பெரியசாமி. 1965 – இந்தி எதிர்ப்புப் போர் என்பது, தமிழர் வரலாற்றில் மிகப்பெரிய உரிமைப் போராட்ட நிகழ்வாகும். திருப்பூரில் ஏராளமானவர்களைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். அதேபோல், குமாரபாளையம் – பொள்ளாச்சி ஆகிய இடங்களிலும்இந்தியை எதிர்த்த தமிழர்களை சுட்டுக் கொன்று அவர்தம் பிணங்களைச் சரக்குந்தில் ஏற்றிச் சென்று காவல்துறையினர் எரித்தனர். தமிழ்நாடு முழுவதும் முந்நூறு பேருக்கு மேல் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும், கொல்லப்பட்டவர்களின் உண்மையானஎண்ணிக்கையை அரசு வெளியிடவில்லை என்றும்…

1 2 5