‘திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா? வழிமாற்றியதா?’ சென்னையில் நூல் அறிமுக விழா!

   தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் எழுதிய ‘திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா? வழிமாற்றியதா?’ – நூலின் அறிமுக விழா சென்னையில், இன்று  (ஞாயிறு /மாசி 14, 2048 /26.02.2017) மாலை 5.30 மணியளவில் நடைபெறுகின்றது. எழும்பூர் இக்சா அரங்கில் நடைபெறும் நிகழ்வுக்கு, தூயதமிழ்க்காவலர் கு.மு. அண்ணல் தங்கோ அவர்களின் பெயரன் திரு. செ. அருட்செல்வன் தலைமை தாங்குகிறார்.   சென்னை மாநிலக் கல்லூரி மேனாள் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் பி. (இ)யோகீசுவரன் நூலை வெளியிட, தென்மொழி ஆசிரியர் முனைவர்…

காவிரி வழக்கு: நீதி வழங்கவில்லை என்றால் போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும்! – பெ. மணியரசன்

காவிரி வழக்கு: உச்ச நீதிமன்றம் உரிய நீதி வழங்கவில்லை என்றால் தமிழ்நாட்டுப் போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும்! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!   உச்ச நீதிமன்றத்தில் ஐப்பசி 02,2047 / 18.10.2016 அன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட ஆணையிடக் கூடாது என்றும், நாடாளுமன்றம்தான் அது பற்றி முடிவு செய்ய வேண்டும் என்றும், காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்திட உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முடியாது என்றும் இந்திய அரசு வாதிட்டுள்ளது. இந்த வாதங்கள், தமிழ்நாட்டுக்குக் காவிரி…

தமிழ்நாட்டு உரிமைகளைக் காத்திட ஒத்துழையாமை – காவிரி உரிமை மீட்புக் குழு

  காவிரி முதலான தமிழ்நாட்டு உரிமைகளைக் காத்திட இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை தஞ்சையில் – காவிரி உரிமை மீட்புக் குழு தீர்மானம் “காவிரி முதலான தமிழ்நாட்டு உரிமைகளைக் காத்திட இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்துவது” எனத் தஞ்சையில், ஐப்பசி 03, 2047 / 19.10.2016 அன்று நடைபெற்ற காவிரி உரிமை மீட்புக் குழுவின் கலந்தாய்வில் முடிவு செய்யப்பட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.     காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கூட்டத்திற்குத், தலைமை தாங்கினார். தமிழர் தேசிய…

காவிரி மேலாண்மை வாரியம்: தமிழ்நாடு அரசுவிழிப்போடு செயல்பட வேண்டும்! – பெ. மணியரசன்

காவிரி மேலாண்மை வாரியத்தின் அதிகாரம் குறைக்கப்படாமல்    தமிழ்நாடு அரசுவிழிப்போடு செயல்பட வேண்டும் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர்  பெ. மணியரசன் வேண்டுகோள்   காவிரி வழக்கில் உச்ச நீதி மன்றம் வழங்கியுள்ள  தீர்ப்பில் (புரட்டாசி14, 2047/30.9.2016)  கருநாடக அரசின் சட்டமுரண்செயல்களையும் நீதிமன்ற அவமதிப்புச்  செயல்களையும் கடுமையாகக் கண்டித்தது ஆறுதல் தருகிறது.    நீதிபதிகள் தீபத்துமிசுரா யூ.யூ.இலலித்து அமர்வு, இது கடைசி எச்சரிக்கை என்று சொல்லிவிட்டு அட்டோபர் 1 முதல்6 வரை தமிழ்நாட்டிற்கு நொடிக்கு 6000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டுமென்று கருநாடகத்திற்குக் கட்டளை இட்டிருப்பது வரவேற்தக்கது.  நடுவண் அரசு அட்டோபர் 4 க்குள் காவிரி மேலாண்மை வாரியம், மற்றும் காவிரி ஒழுங்குமுறைக் குழுஅமைத்து அறிக்கை தரவேண்டுமென்று கட்டளை இட்டிருப்பது பாராட்டுக்குரியது. காலந் தாழ்ந்த நீதி என்றாலும் தமிழ் நாட்டிற்குப் பயன் தரும் தீர்ப்பாகும். இதற்காகப் போராடிய, வாதாடிய அனைத்து உழவர் அமைப்புகள்,அனைத்து வணிகர் அமைப்புகள், அனைத்துக் கட்சிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட  தமிழ் மக்கள் அனைவர்க்கும்இந்த வெற்றியில் பங்கிருக்கிறது. இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு தனக்கான தலைமை வழக்கறிஞராகச் சேகர் நபாதே அவர்களை அமர்த்தியதிலிருந்து நம் தரப்பு வாதம் கூர்மையாக எடுத்து வைக்கப்பட்டது. நடுவண் நீர் வளத்துறை அமைச்சர்…

காவிரித் தீர்ப்பு: நீதியை நிமிர்த்த வீதிக்கு வாருங்கள்! – பெ.மணியரசன்

காவிரித் தீர்ப்பு: வன்முறைக்கு வளைந்து கொடுக்கிறது உச்சநீதி மன்றம். நீதியை நிமிர்த்த வீதிக்கு வாருங்கள் தமிழர்களே ! காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை.  காவிரிவழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு கருநாடக அரசின் சட்ட முரண் செயல்களையும், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை அவமதிக்கும் நடவடிக்கைகளையும்  மேலும் ஊக்கப்படுத்துவதுபோல் அமைந்துள்ளது. கருநாடகச் சட்டப்பேரவை மற்றும் மேலவையைக் கூட்டி உச்ச நீதிமன்றத்தீர்ப்பை செயல்படுத்த முடியாது என்று தீர்மானம் நிறைவேற்றிய கருநாடக முதலமைச்சர் சித்தராமையா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு  உச்ச நீதிமன்றம் பதிவு செய்யும்…

அதிகாரமற்ற காவிரி மேலாண்மை வாரியம் : இந்திய அரசு அலுவலகங்களை முடக்குவோம்!

காவிரித் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு எதிராக அதிகாரமற்ற காவிரி மேலாண்மை வாரியத்தை இந்திய அரசு அமைக்க முயன்றால் தமிழ்நாட்டில் இந்திய அரசு அலுவலகங்களை முடக்குவோம்! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு!   தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், புரட்டாசி 09,2047/ 25.09.2016 காலை முதல் மாலை வரை, பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்டராமன் முன்னிலை வகித்தார். பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் குழ. பால்ராசு, தஞ்சை பழ. இராசேந்திரன்,…

காவிரித் தீர்ப்பு : காங்கிரசு – பா.ச.க. தலைமைகள் தமிழர்களுக்கு வஞ்சகம்!

காவிரித் தீர்ப்பு : காங்கிரசு – பா.ச.க. தலைமைகள் தமிழர்களுக்கு வஞ்சகம்! தமிழ்நாடு முதல்வர் உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும்! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!    உச்ச நீதிமன்றம் 20.09.2016 அன்று வழங்கியத் தீர்ப்பில், இந்திய அரசு ஒரு மாதத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்று காலவரம்பு விதித்தும், 21.09.2016 முதல் 27.09.2016 வரை நொடிக்கு 6,000 கன அடி காவிரி நீரைக் கர்நாடகம் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டுமென்றும் கட்டளையிட்டுள்ளது.  நேற்று (21.09.2016)…

தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில் 90% தமிழர்களுக்கு வேலை வழங்கிடு!

தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில் 90% தமிழர்களுக்கு வேலை வழங்கிடவும் 10% மேல் உள்ள வெளியாரை வெளியேற்றிடவும் வலியுறுத்தி தோழர் பெ. மணியரசன், தலைமை அதிகாரிகளுக்கு மடல்.     தமிழ்நாட்டில் செயல்படும் இந்திய அரசுத் தொழிற்சாலைகள், இந்திய அரசு அலுவலகங்களில் தமிழர்களுக்கு 90% வேலை வழங்க வேண்டும் என்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு 10% வேலை மட்டும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழ்த்தேசியப் பேரியக்கம் வரும் ஆவணி 27, 2047 / 12.09.2016 திங்கள் கிழமை காலை 10.00 மணிக்குத் திருச்சி தொடர்வண்டி கோட்டத் தலைமையகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளது.  10% மேல் இந்நிறுவனங்களில் வேலையில் உள்ள வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களை உடனடியாக…

உழவர் பாலனைத் தாக்கிய காவலர்களைச் சிறையில் அடை !

உழவர் பாலனைத் தாக்கிய காவலர்களைக் கைது செய்து சிறையில் அடை ! உழவர் தற்கொலைகளைத் தடுக்க தமிழ்நாட்டை தனி உணவு மண்டலமாக்கு ! தஞ்சையில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புக் குழு  ஆர்ப்பாட்டம்!    உழவர் பாலனைத் தாக்கிய காவலர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கக் கோரியும், உழவர் தற்கொலைகளைத் தடுக்கத் தமிழ்நாட்டைத் தனி உணவு மண்டலமாக்க வேண்டுமெனக் கோரியும், தஞ்சையில், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், 11.03.2047 / 24.03.2016 காலை, உழவர் ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. உழுபொறி எந்திரத்தை பறிமுதல் செய்கிறோம் என்ற பெயரில், பாப்பாநாட்டில் உழவர் பாலன் மீது கொடுந்தாக்குதல் நடத்திய…

சாதிக்குல் சன்னா (எ) புதுமொழி படத்திறப்பு – நினைவேந்தல்!

தமிழ்த் தேசியப் போராளித் தோழி சாதிக்குல் சன்னா (எ) புதுமொழி படத்திறப்பு – நினைவேந்தல்!   தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் உரிமைப் போராட்டங்கள் அனைத்திலும், தம் இரு அகவைக் குழந்தை இளம்பிறையுடன் பங்கேற்றுவந்த, தமிழ்த் தேசியப் பேரியக்கச் செயல்பாட்டாளரும், பேரியக்கச் சென்னைச் செயலாளர் தோழர் வி. கோவேந்தன் மனைவியுமான தோழி சாதிக்குல் சன்னா (எ) புதுமொழி, பேரியக்கத்தின் தலையில் இடிவிழுந்ததுபோல் கடந்த 11.03.2016 அன்று மாலை சென்னையில் காலமானார். அவருக்கு அகவை 31.   தோழி சன்னாவும் கிட்டத் தட்ட முழு நேரச் செயல்பாட்டாளராகவே…

ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்க!

“தமிழ்நாடு அரசு ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்”  சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்ற கருத்தரங்கில் கோரிக்கை!   தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் எழுதிய “ஏழு தமிழர் விடுதலை – உச்ச நீதிமன்ற மறுப்பு – தமிழ்நாடு அரசு அதிகாரம்” – நூலின் வெளியீட்டு விழா –  கருத்தரங்கம்,  மாசி 16, 2047 / 28.02.2016 மாலை, சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்றது.   சென்னை எம்ஞ்சியார் நகர் மகா மகால் அரங்கத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. தமிழ்த் தேசியப் பேரியக்கத்…