பேரறிஞர் அண்ணாவின் ஏ, தாழ்ந்த தமிழகமே!: 2/8

(ஏ, தாழ்ந்த தமிழகமே!1/8 தொடர்ச்சி) ஏ, தாழ்ந்த தமிழகமே!: 2/8 [1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவு.] சங்க இலக்கியம் கவிஞர்களையும், மற்றவர்களையும் அன்று போற்றாததற்கும், இன்று போற்றுதற்கும் இன்னுமொரு காரணமுண்டு. சங்க இலக்கியங்களிலே, நமது கண்ணும் கருத்தும் படாதபடி திரையிட்டு வந்தார்கள். உங்களில் பலர் சங்க இலக்கியங்களைப் படித்திருக்கலாம். சிலர் புரிந்து கொண்டிருக்கலாம்; சிலர் புரிந்தது போல் பாவனை…

பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் – 7

(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் 6 இன் தொடர்ச்சி) குமரிக் கோட்டம் அத்தியாயம் 2 தொடர்ச்சி “யாரை நிறுத்தினாலும் நிறுத்தி விடுவார், குமரியை மட்டும் நிறுத்தவே மாட்டார். “ “ஏன்? என்னா விசயம்?” “செட்டியாருக்கு அவளைப்பார்க்காவிட்டா உசிரே போயிடும்.” ” அம்மா, அவ்வளவு சொக்குப்பொடி போட்டு விட்டாளா அந்தச் சிறுக்கி.” “பொடியுமில்லை, மந்திரமுமில்லை ! அவளைக் கண்டவன் எவன் தான், தேனில் விழுந்த ஈபோல் ஆகாமலிருக்கிறான் அவகூடக் கிடக்கட்டும்; கொஞ்சம் மூக்கும் முழியும் சுத்தமா ஒரு பெண் இருந்தா, எந்த ஆம்பிள்ளை, விறைக்க விறைக்கப்…

பேரறிஞர் அண்ணாவின் ஏ, தாழ்ந்த தமிழகமே!

ஏ, தாழ்ந்த தமிழகமே! 1/8 [1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவு.] புரட்சியின் சிகரம் தலைவர் அவர்களே! அருமைத் தோழர்களே!! மிக உற்சாகத்துடன் ஒரு கவிக்கும் (பாரதிதாசன்) ஒரு பேராசிரியருக்கும் (பேராசிரியர் கா. சு. பிள்ளை) சிறந்த முறையிலே பாராட்டுதல் நடத்துகிற இந்த உங்கள் சம்பவத்திலே, நான் கலந்துகொண்டு பேசுவதற்கும், இதில் பங்கு எடுத்துக் கொள்ள வாய்ப்பு அளித்தமைக்கும் எனது…

பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் – 6

(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் 5 இன் தொடர்ச்சி) குமரிக் கோட்டம் அத்தியாயம் 2 தொடர்ச்சி “ஏண்டி ! என்னமோ காணாததைக் கண்டவங்க மாதிரி முழிச்சிட்டு இருக்கறிங்க.” “ஒண்ணுமில்லையே, அக்கா.” ” அக்காவா நானு? இவ கொழந்தை ! வயசு பதினாறு.” இவ்விதம் வேடிக்கையாகப் பேசுவாள் மற்றப் பெண்களிடம், சிறுகல், தலையில் கட்டிய பாகை, வெத்திலைப்பை, இவை அடிக்கடி மீனா மீது தான் விழும். மேசுதிரி இவற்றை அடிக்கடி வீசுவார், அவள் ஏச மாட்டாள். அவளுக்கு அவன் கொடுத்து வந்த எட்டணா கூலி, இந்த…

பேரறிஞர் அண்ணாவின் குமரிக்கோட்டம் – முன்னுரை

குமரிக்கோட்டம் முன்னுரை காலம் மாறுகிறது என்பதை அறிய மறுக்கும் வைதீகர்களில் சிலருக்குத் தமது சொந்த வாழ்க்கை யிலேயே, நேரிடும் சிலபல சம்பவங்கள், மனமாற்றத்தை ஆச்சரியகரமான விதத்திலும் வேகத்துடனும் தந்து விடுகின்றன. ‘குமரிக்கோட்டம் ‘ இக் கருத்தை விளக்கும் ஓர் கற்பனை ஓவியம். இதிலே காணப்படும் சீறும் தந்தை, வாதிடும் மகன், வசீகர மங்கை, உரோசம்  நிரம்பிய அண்ணன், இவர்களை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் காணலாம். பெயர்கள், குழந்தைவேலர் என்றிராது; குமரி என்று இருக்காது. ஆனால், இவ்விதமான நிலைமையிலுள்ளவர்களை, நாட்டிலே காண முடியும். மகன் தலைகால்…

தமிழ் வெற்றி உறுதி – பேரறிஞர் அண்ணா

தமிழ் வெற்றி உறுதி “தமிழ் மொழிக்கு நல்லதோர் எதிர்காலம் ஏற்படவிருக்கிறது என்பதையறிந்து அதற்கு உறுதுணையாக இந்த விழா மிகச் சிறப்பான முறையிலே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. “தமிழ் ஆட்சி மொழியாக்கப்பட்டுவிட்டது என்னும்போது, ஐயப்பாடு கொண்டவர்களும், அச்சப்பட்டவர்களும்கூட இருப்பதால், தமிழ்மொழி ஆட்சிமொழியாவதற்குத் துணைதேடும் பெரும் பொறுப்பினைத் தங்கள் கடமையைக் கொண்டு நூல் எழுதி வெளியிடும் இந்த விழாக் குழுவினர் பாராட்டுக்குரியவராவார்கள். மற்ற வணிகத்தைப் போல இதுவும் ஒரு வணிகமோ என்று கருதவேண்டா. வெற்றி பெற வேண்டும் “தமிழ் மொழி ஆட்சி மொழியாவதற்கு இடையூறாக இருந்து வந்த இரண்டு…

புலவர் குழந்தையின் இராவண காவியம் – பேரறிஞர் அண்ணாவின் முன்னுரை

இராவண காவியம் திராவிடத் தளபதி, திரு, சி. என். அண்ணாத்துரை எம்.ஏ.அவர்களின் முன்னுரை   இராவண காவியம்- திடுக்கிடுகிறீர்களா? அப்படித்தான் இருக்கும், பன்னெடுங் காலமாக இராமாயணம் படித்தும், படிக்கப் பக்க நின்று கேட்டும் வந்த மக்களல்லவா! அவர்களின் செவிக்கு. இராவணகாவியம் என்ற ஒலியே சற்றுக் கிலி தருவதாகத்தான் இருக்கும், எனினும், இந்நூல், எதிர் பாராததல்ல. காலத்தின் விளைவு, ஆராய்ச்சியின் அறிகுறி, புரட்சிப்பொறி, என்று பல கூறலாம் இதற்குக் காரணமாக, இது போல் ஒரு நூல் வெளி வந்தே தீரும் என்பதை, நாட்டு மக்களின் உள்ளத்தின்…

பேரறிஞர் அண்ணாவின் கனவுகள் நனவாக…! இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

பேரறிஞர் அண்ணாவின் கனவுகள் நனவாக…!  கட்சி உறுப்பினர்களைக் குடும்ப உறுப்பினர்கள்போல் நடத்திய மாபெரும் தலைவர் பேரறிஞர் அண்ணா. அண்ணாதுரை என்னும் அவரின் பெயரின் சுருக்கம்போல் அண்ணா என்பது திகழலாம். ஆனால், உண்மையில் கோடிக்கணக்கான தம்பியர் அவரைப் பாசமுடன் அழைத்த சொல்லே அண்ணா என்பது. தம்பிக்கு என மடல் எழுதி விழிப்புணர்வு ஊட்டிமையால் வயது வேறுபாடின்றி அனைவருக்குமே அவர் அண்ணா ஆனார். எனவேதான் அவர் மறைவின் பொழுது  திரண்டிருந்த மக்கள் கூட்டம் உலகிலேய மிகுதியான இறுதி அஞ்சலி எனக் கின்னசு உலக ஆவணப்பதிவு அறிவித்தது. தமிழ்…

பாடுவேன் இவரை! – பேரறிஞர் அண்ணா

பாடுவேன் இவரை! எவரைப் பாடமாட்டேன்? வாழ்வின் சுவை தன்னை வகையாய்ப் பல்லாண்டு உண்டு, உடல் பெருத்து ஊழியர் புடை சூழ தண்டு தளவாடமுடன் தார் அணிந்து தேர் ஏறும் அரசகுமாரர் அருளாலய அதிபர் தமைக் குறித்து அல்ல. பாடுவேன் இவரை குடிமகனாய் உள்ளோன் ஊர்சுற்றும் உழைப்பாளி தோள்குத்தும் முட்கள் நிறை மூட்டைதனைச் சுமப்போன் தாங்கொணாப் பாரந்தன்னைத் தூக்கித் தத்தளிப்போன் களத்தில் பணிபுரிவோன் உலைக் கூடத்து உழல்வோன் ஏரடிப்போன் தூக்கம் தொட்டிழுக்கும் துயர் கக்கும் கண் கொண்டோன் குளிர் கொட்ட மழை வாட்ட குமுறிக் கிடந்தோர்…

இராவணகாவியச் சொற்பொழிவு & பேரறிஞர் அண்ணா , தந்தை பெரியார் படத்திறப்பு, புதுவை

புரட்டாசி 14, 2049 ஞாயிறு 30.09.2018 மாலை 5.00 முதல் இரவு 8.00 வரை புதுவைத் தமிழ்ச்சங்கம் படத்திறப்பு :பேரறிஞர் அண்ணா & தந்தை பெரியார் இராவணகாவியச் சொற்பொழிவு 10 : பொழிவாளர்:  முனைவர் க.தமிழமல்லன்   – பகுத்தறிவாளர் கழகம்,  புதுவை தமிழ்நாடு

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙூ) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙு) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙூ) பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்குப்பின், ஆட்சியாளரின் பதவியை நிலைப்படுத்திக் கொள்வதற்கான விட்டுக் கொடுத்தல்களும் ஒத்துப்போதல்களும் எதிர்பார்த்த தமிழ்ப் பயன்களைத் தரவில்லை. இதனால் பேராசிரியர் இலக்குவனார் வேதனை உற்றார். உசுமானியாப் பல்கலைக்கழகத்திலோ, தமிழில் இருந்து பிறந்தனவே தெலுங்கு முதலான தமிழ்க்குடும்ப மொழிகள் என்னும் உண்மையை ஏற்காத தெலுங்குத் துறையினர் தெலுங்கின் மகள் தமிழ் என்றும் தெலுங்கின் தங்கை தமிழ் என்றும் உண்மைக்கு மாறான கருத்துகளைப் பரப்பி வந்தனர். அவர்களிடம் தமிழின் தொன்மையையும் தாய்மையையும் விளக்கினார்….