தமிழுடன் வாழப் பொங்கல் நாளில் வாழ்த்துகிறோம்!

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தமிழர் திருநாள் வாழ்த்து திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்து உழவர் திருநாள் வாழ்த்து                                        வணக்கத்துடன் அகரமுதல தமிழ்க்காப்புக் கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம்

பொங்கல், புத்தாண்டு வாழ்த்து – மு.பொன்னவைக்கோ

பொங்கல் புத்தாண்டு வாழ்த்து பூத்தது புத்தாண்டு பொங்கல் திருநாளில் போயிற்று ஓராண்டு                                         பொன்னான வாழ்நாளில் சென்ற ஓராண்டில் செய்தோமா நற்பணிகள் என்றே சிந்திப்போம் ஏற்போம் தவறுகளை இன்றிந்த புத்தாண்டில் ஏற்றமுடன் நற்பணிகள் சாதிக்கச் சிந்திப்போம் சாதனைகள் செய்திடுவோம் பொங்கல் திருநாளில் அகமெனும் பானையில் அன்பெனும் நீரூற்றி அறிவெனும் அரிசியிட்டு பாசமெனும் பாலூற்றி நேசக் கரங்களினால் நேர்மை நெருப்பேற்றி தீந்தமிழ்த் தேனூற்றி தித்திக்கும் பொங்கலிட்டு ஒற்றுமை உணர்வுபொங்க உற்ற உறவினராய் நற்றமிழ்ப் பற்றோடு பொங்கலோ பொங்கலெனப் பொங்கலிட்டு வாழியவே! முனைவர் பொறி.மு.பொன்னவைக்கோ

தமிழெனப் பொங்கிடு! – ப.கண்ணன்சேகர்

தமிழெனப் பொங்கிடு!   உழைத்திடப் பொங்கிடு!  உரிமைக்குப் பொங்கிடு உதவிடப் பொங்கிடு  ஊருக்குப் பொங்கிடு தழைத்திடப் பொங்கிடு  தமிழெனப் பொங்கிடு தருமத்தைப் பொங்கிடு  தளராது பொங்கிடு பிழையறப் பொங்கிடு  பெருமையாய்ப் பொங்கிடு பிணக்கிலாப் பொங்கிடு  பார்போற்றப் பொங்கிடு மழையெனப் பொங்கிடு  மலரெனப் பொங்கிடு மதமிலாப் பொங்கிடு  மனிதனாய்ப் பொங்கிடு இயற்கையோடு பொங்கிடு இரக்கதோடு பொங்கிடு இணக்கமெனப் பொங்கிடு  எழிலாகப் பொங்கிடு தயங்காமல் பொங்கிடு  தவறாது பொங்கிடு தடுக்காமல் பொங்கிடு  தணிந்திடப் பொங்கிடு வியந்திடப் பொங்கிடு  விடுதலைக்குப் பொங்கிடு வேளாண்மை பொங்கிடு  வெற்றியால் பொங்கிடு சுயமாகப்…

‘அகரமுதல’ இதழின் பொங்கல் வாழ்த்துகள்!-இலக்குவனார் திருவள்ளுவன்

‘அகரமுதல’ இதழின் படைப்பாளர்களுக்கும் செய்தியாளர்களுக்கும் படிப்பாளர்களுக்கும் பகிர்வாளர்களுக்கும் கருத்தாளர்களுக்கும் பரப்பாளர்களுக்கும்   அல்லன தொலையவும் நல்லன பெருகவும் இன்பமும் மகிழ்ச்சியும்  பொங்கிடவும் அன்பு வாழ்த்துகள்!   அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் ஆசிரியர்  ‘அகரமுதல’ < www.akaramuthala >

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 28: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 27 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 28  1.3 பொங்கல் வாழ்த்து   பொங்கல் வாழ்த்துக் கவிதைகள் மூலம் பாடியுள்ளார். ‘மங்கலம் விளங்கும் பொங்கல் வாழ்த்து’ என்னும் கவிதை முப்பது அடிகளைத் கொண்டது. 1964 ஆம் ஆண்டு பாடிய பொங்கல் வாழ்த்து என்னும் கவிதை பதினோரு அடிகளையும், 1965 ஆம் ஆண்டு பாடிய பொங்கல் வாழ்த்துக் கவிதை ஏழு அடிகளையும் கொண்டுள்ளது. ‘மங்கலம் விளங்கும் பொங்கல் வாழ்த்து’ புலப்படுத்தும் கருத்துகள் போற்றத்தக்கன. உழவையும் தொழிலையும்…

வளந்தரும் வாழ்த்து

வளந்தரும் வாழ்த்து சுண்ணச் சுவர்கள் மின்னலிட வண்ணக் கோலம் பலவகையாக மாவிலைத் தோரணம் காற்றாட மல்லிகைச் சரங்கள் மணந்தாட கொஞ்சும் புத்தாடை குதுகலமாக மஞ்சள் இஞ்சி மங்கலமாக பச்சரிசி பொங்கல் பளபளக்க கட்டிக் கரும்பு நாவினிக்க தந்தையும் தாயும் வாழ்த்திட சிந்தைசீர் மகன்மகள் வணங்கிட இல்ல மகளிர் யாவருமே விளக்கேற்றி வருகதிரைத் துதிக்க உற்றார் உறவினர் ஒன்றுகூடி பற்றுடன் பொங்கலோ பொங்கலென தமிழர் திருநாளில் குடும்பமுடன் தழைத்து வாழ்கநீர் பல்லாண்டே. . . . தமிழகத்தாய்க்குழு . . . பொன் தங்கவேலன்

தமிழ்ப்பொங்கல் – ப.கண்ணன்சேகர்

தமிழ்ப்பொங்கல் – ப.கண்ணன்சேகர் மண்ணில் பசுமை நிலவிட மணக்கும் தமிழால் குலவிட மாநிலம் மாறிட நல்லது! நல்லது நினைத்து வேண்டிட நாளைய உலகை தூண்டிட நன்மை செய்வாய் இக்கணம்! இக்கணம் எழுதும் வரிகளே இயம்பும் வாழ்வின் நெறிகளாய் இனிமைக் காணச் செய்திடும்! செய்திடும் ஒற்றுமை நட்பாக சேர்ந்தே வாழ்வீர் வளமாக செழித்தே ஓங்கும் வையகம்! வையகம் முழுமை தமிழாக வைத்திடு தாய்மொழி அமுதாக வந்திடும் தமிழ்தைப் பொங்கல்! பொங்கல் இல்லா நல்மனமே புழுங்கல் இல்லா ஒருகுணமே போற்றும் தமிழர் பன்பாடு! பன்பாடு காக்கும் நன்நாளே…

சமத்துவப் பொங்கல் பொங்கிடுவோம்! – பாவலர் கருமலைத்தமிழாழன்

சமத்துவப் பொங்கல் பொங்கிடுவோம்! கழிக்கின்றோம் பழையவற்றைக் காணவாரீர் எனவழைத்தே விழியெரிய நேயத்தை விளையன்பை எரியவைத்தே கழிவென்றே மனிதத்தைக் கருகவைத்துக் கணியன்தன் வழியடைத்துக் கொளுத்துகின்ற வன்முறையா போகியிங்கே ! சாதிமணி உலையிலிட்டுச் சதிவெறியாம் பாலையூற்றி மோதிபகை வளர்வெல்லம் மொத்தமுமாய் அதிலிட்டு வீதிகளில் குருதிவாடை வீசிடவே மனக்குடத்தில் ஆதிக்கம் பொங்வைத்தே ஆடுவதா பொங்கலிங்கே ! காடுகளில் உழைப்பவரை கழனிசேற்றில் புரள்பவரை ஆடுகளின் மந்தையாக அடித்தட்டில் தாழ்ந்தவராய் மாடுகளைப் போல்விரட்டி மனிதகுலம் தலைகுனிய கேடுகளை விளைவிக்கும் கேளிக்கையா காணும்பொங்கல் ! தெருவெல்லாம் அன்பென்னும் தோரணங்கள் கட்டிவைப்போம் கரும்புசுவை மனமேற்றிக்…

பொங்கலோ பொங்கல்! – தமிழ நம்பி

பொங்கலோ பொங்கல்! – தமிழ நம்பி இற்றைக்குப் பொங்கல்நாள் ஏற்றமிகு திருநாளே எழுந்தே வாநீ! கற்கின்ற வேற்றுமொழி கரிப்பானை அதன்கழுத்தில் கட்டி வைக்கும் சுற்றிமுடி நூல்சோம்பல் தோயுமில வயம்மஞ்சள் தூய பால்தான் எற்றைக்கும் இரண்டகத்தால் இனமிழக்கும் குருதியதை எடுத்துள் ஊற்று! ஏனலுறு அரிசியென ஏற்றிருக்கும் அடிமைநிலை இடுபா னைக்குள்! மானமெனும் விறகெரித்து மலிந்தகடை அரசுதரும் மதுக்கு டித்தே கூனலுற மயக்கத்தே கூவிடுவாய் தமிழ்மகனே குரைநா யாக வானத்துங் கேட்டிடவே வல்லொலியில் ‘பொங்கலோ பொங்கல்’ என்றே!  – தமிழ நம்பி  

புரட்சி மிக்க பொங்கல்! – பா சங்கிலியன்

புரட்சி மிக்க பொங்கல்! – பா சங்கிலியன் கசப்பான இழப்புகள் நடக்கும் களத்தினிலும் எங்கள் வரிப்புலிகள் இனிப்பான பொங்கல் பொங்கித் தமிழரின் பண்பாட்டை தரணி எங்கும் பரப்பினர் தமிழர்கள் நாம் தமிழே மூச்சு தமிழ் மொழியே பேச்சென தலைநிமிர்ந்து வாழ்வோம் அடிமை நிலையை எதிர்ப்போம் அடுத்தவன் காலில் அண்டி வாழ்வதைத் தவிர்ப்போம் அறநெறி கற்க மறவோம் அம்மை அப்பரைத் தொழுவோம் எமக்கென ஓர் இடம் பிடிப்போம் எம்மவரை அங்கு ஆளவைப்போம் எளிமையை என்றும் மறவோம் எதற்கும் துணிந்து நிற்போம் பொங்கு தமிழாய் எழுவோம் புவியெங்கும்…

பொங்கல் திருநாள் வாழ்த்து! – கா.வேழவேந்தன்

இன்பங்கள் கோடி குவித்திட வாழ்த்து கின்றேன்! உள்ளத்தில் ஆட்சி செய்யும் உயரிய சுடரே! ஓயா வெள்ளங்கள் ஓய்ந்த பின்னால் விழாப் பொங்கல் வந்ததீங்கே! கள்ளமில் தங்கள் நெஞ்சக் கனவெலாம் வெல்க! தாங்கள் கொள்ளைஇன் பங்கள் கோடி குவித்திட வாழ்த்து கின்றேன்! வாடாத அன்பால், என்றும் வற்றாத பற்றால், பேதம் நாடாத பண்பால் நெஞ்சில் நங்கூரம் இட்டோர் தாங்கள்! தேடாமல் தேடிப் பெற்ற செல்வமே! அறிவே! அன்பே! நீடூழித் தாங்கள் வாழ நெஞ்சார வாழ்த்து கின்றேன்!   கவிவேந்தர் கா.வேழவேந்தன் 94444 50167