‘அகரமுதல’ இதழின் பொங்கல் வாழ்த்து!
தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்து! திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்து! இனப்படுகொலையாளன் பக்சே வீழ்ந்தான் என்ற மகிழ்ச்சியில் கொண்டாடுவோம் இப்பொங்கலை! வரும் புத்தாண்டில் தமிழ் ஈழத் தனி நாட்டிலும் கொண்டாடுவோம் திருவள்ளுவர் புத்தாண்டை என்னும் நம்பிக்கையில் கொண்டாடுவோம் இப் பொங்கலை! அகரமுதல இதழின் படைப்பாளர்களுக்கும் செய்தியாளர்களுக்கும் படிப்பாளர்களுக்கும் எல்லாரும் எண்ணியவாறு நல்லன எல்லாம் எய்தி இன்புற்றிருக்க வாழ்த்துகள்! பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரந்து வாழிய! வையகம் வாழ்க! வான் தமிழ் வெல்க! (-தமிழ்ப்போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனார்) அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்…
பொங்கலோ பொங்கல்! – புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
பொங்கலோ பொங்கல் என்றுபா டுங்கள் மன்றிலா டுங்கள் எங்கள்நா டெங்கள் அன்புநா டென்று நன்றுபா டுங்கள் பொங்கியா டுங்கள் பொங்கலோ பொங்கல் பொங்கிற்றுப் பாலே! தங்கமே தங்கம் மண்டுநீ ரெங்கும் இங்கும்வா னெங்கும் நன்றுகா ணுங்கள் மிஞ்சியா டுங்கள் சிந்துபா டுங்கள் பொங்கலோ பொங்கல் பொங்கிற்றுப் பாலே! எங்கும் ஆதந்து லந்தபா லுங்க ரும்பினோ டும்க லந்துமே பொங்க நைந்தவா கும்ப ழங்கள் தே னுங்க லந்துவா னுங்க மகிழ்ந்தவா றுண்ட பொங்கலோ பொங்கல் பொங்கிற்றுப் பாலே! இங்குநா மின்று கண்டபே ரின்பம் என்றுமே…
பொங்கல் திருநாள்- திருக்குறள் பாவலன் தமிழ்மகிழ்நன்
ஆண்டுப் பிறப்பில் அறுவடைத் திருவிழா! மாண்புடை மண்ணில் மக்கள் பெருவிழா! கரும்பு மஞ்சள் காய்கறி கிழங்கு விரும்பும் விளைபொருள் எல்லாம் தந்த உழவர் ஆவினம் ஒளிமிகு ஞாயிறு கழனி உழுபடைக் கருவிகள் காளை உயர்வைப் போற்ற ஊரெலாம் கூடி வயலில் வீட்டில் நாட்டில் எங்கும் புத்துயிர் பரவிட பொங்கல் திருநாள் இத்தரை யெங்கும் இன்பமே எனினும் வெற்பினை எறிந்து வீரம் விளைத்த அற்புதத் தாயின் ஆரயிர்த் திருமகன் இற்றை நாளிலும் இந்தியச் சிறையில் இருந்திட இனிக்குமோ இன்சுவைக் கரும்பும்? 00000 ஆரிருள் கவிந்த அழகிய…
பொங்கல் வாழ்த்து
பாரினில் எங்கும் மக்கள் பலநலம் பெற்று வாழ சீரிய வழியில் எல்லாம் சிறப்புகள் மேன்மே லோங்க மார்கழித் திங்கள் சென்று மலர்ந்த தைத்திங்கள் நாளில் ஆர்வமோ டளித்தேன் இந்த அணிமிகு பொங்கல் வாழ்த்தை! – புலவர் பு.சீ.கிருட்டிணமூர்த்தி புள்ளியியல் அலுவலர்(ஓய்வு) தலைவர், இந்திய அரசின் மக்கள் கல்விநிறுவனம் திருவொற்றியூர் பாரதிப்பாசறை துணைத்தலைவர், சோழர் கலாலயம், இணைச்செயலர், ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்
அகரமுதல இணைய இதழின் நல்வாழ்த்துகள்!
தமிழர்திருநாளாம் பொங்கல் நன்னாளில் அனைவருக்கும் அகரமுதல இணைய இதழின் நல்வாழ்த்துகள்! இனப்படுகொலைகளு்க்கும் நிலப்பறிப்பிற்கும் பிற துயரங்களுக்கும் ஆளாகி வரும் தமிழ் ஈழ மக்கள், 01.01.1600 இல் பெற்றிருந்த நிலப்பரப்பைப் பெற்றுத் தனியரசாய்த்திகழும் நாளே நமக்கு மகிழ்வு தரும் நாள் என்பதில் ஐயமில்லை. எனினும் துயரத்தை வென்றெடுக்க, ஊக்க உணர்ச்சி பெற, இன எழுச்சி பெற, இடையிடையே வரும் பொங்கற் புது நாள் போன்றன உந்துதலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே உலகத் தமிழர்கள் உவக்கும் வண்ணம் தமிழ் ஈழ விடுதலை விரைவில் அமைய…
என்றைக்குமே இன்பம் நிலைகொள்ள வேண்டும்
செங்கதிர் எழுந்ததடி எங்கும் ஒளி ஆனதடி பொங்கல்திரு நாளடியே என்னருந் தோழி — அதோ பொன்னரிவாள் ஏந்திவிட்டார் என்னருந்தோழி தெங்கில்இளம் பாளையைப் போல் செந்நெல்அறுத் தார் உழவர் அங்குக்களம் கொண்டடித்தார் என்னருந் தோழி — அவர் சங்கத் தமிழ் பாடிப்பாடி என்னருந்தோழி. கட்டடித்தே நெல்லளந்தே கட்டை வண்டி ஏற்றுகின்றார் தொட்டளித்தார் தைப்புதுநெல் என்னருந் தோழி — அவர் தோளை வையம் வாழ்த்திற்றடி என்னருந்தோழி. கொட்டு முழக் கோடு நெல்லைக் குற்றுகின்ற மாத ரெல்லாம் பட்டுடை இழுத்துக் கட்டி என்னருந் தோழி — பாடும் பாட்டெல்லாம்…
எங்கும் இன்பம் இனிதே பொலிகவே!
குறள்நெறி ஓங்கி குடியர சுயர்ந்து பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரந்து வாழியர் வையகம் வாழ்க; வான்தமிழ் வெல்க உழைப்பே உயிரென உலகுக் குணர்த்தும் பொங்கற் புதுநாள் பொலிவுடன் சிறக்க எங்கும் இன்பம் இனிதே பொலிகவே. – செம்மொழிச்சுடர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (குறள் நெறி பொங்கல் ஆண்டு மலர் 15-01-1965)
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து !
உலகின் வடிவம் உருண்டை என்பதை உருபெரும் அறிவியலாளர் கலிலியோ கூறினார் கலிலியோ கூற்றை கண்கண்ட நாடுகளுக்கு கருத்துரையாகப் பரப்புரை செய்தார் ஆனால் ஈராயிரத்து ஐநூறுக்குமுன்னே சீராயிரம் படைத்த இருவரிமறை ஆசான் திருவள்ளுவப் பெருமகன் உருவான உலகம் உருண்டை என்றே இருவரியிலே உலகிற்கு இயம்பினார் அன்றே ! ” சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் ; அதனால் உழந்தும் உழவே தலை ” என்றாரே படித்தனர் ஆயினும் பரப்புரை செய்தனரா ? பிறநாட்டார் சொல்லையே போற்றிப் புகழ்ந்தனரே ! சுழலும் உலகம்கூட உழவரின் பின்செல்லும் நிழலாக இருக்கிறதென …
