பிறக்காத தமிழ்க் குழந்தைக்கு   அளவிலாத காலமென்னும் அலையின் மீது அலைகளாய் அழிவிலாது தோன்ற நிற்கும் அமரனான பாலனே உரிமை கேட்டு உடைமை கோரி உலகமெங்கும் போற்றவே தருமமென்ற நெறியின் போரில் தமது மண்டை யுடையவே ஒழுகி வந்த இரத்த ஆற்றில் உதய மாகிக் கன்னியர் பழகு பாடற் கருவிலாகும் பாலனே என் செல்வமே கட்டு மீறி உரிமை நாதக் கனல் பிறக்கும் குரலிலும் சொட்டு கின்ற வியர்வை மீதும் தோன்று கின்ற பாலனே மனது தோறும் எழுதி வைத்த மான மென்னும் முத்திரை…