2018-1 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்
2018-1 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்னூல் வெளியீட்டுப் பணி ஊடாக “மதுவை விரட்டினால் கோடி நன்மை!” என்ற மின்னூல் வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். இம்மின்நூலுக்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடம் இருந்து 31/12/2017 இற்கு முன்னதாக எதிர்பார்க்கின்றோம். ஏற்கெனவே, இம்மின்நூல் வெளியீடுபற்றிக் கீழ்வரும் இணைப்புகளில் அறிவித்துவிட்டோம். கவிதைகள் வந்த வண்ணம் உள்ளன. https://www.facebook.com/yarlpavanan/posts/1780289532013328 https://yarlpavanan.wordpress.com/2017/12/02/உங்களுக்குக்-கவிதை-எழுத/ http://www.ypvnpubs.com/2017/12/blog-post.html மதுவினால் உடல் நலம், மக்கள் நலம், நாட்டு நலம் கெடுமென்றும் மதுவினால் சீர்கெட்ட நிலைமைகளைச்…
ஐம்பது ஆண்டுகளில் திராவிடக் கட்சிகள் செய்யாததை ஐந்து ஆண்டுகளில் செய்வேன்! – அன்புமணி
ஐம்பது ஆண்டுகளில் திராவிடக் கட்சிகள் செய்யாததை ஐந்து ஆண்டுகளில் செய்வேன்! – அன்புமணி உறுதிமொழி! “ஐம்பது ஆண்டுகளில் திராவிடக் கட்சிகள் செய்யாததை – எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் – ஐந்து ஆண்டுகளில் செய்து முடிப்பேன்” என்று அன்புமணி இராமதாசு கூறினார். சென்னை வண்டலூரில் மாசி 15, 2047 / பிப்பிரவரி 27 ஆம் நாள் அன்று நடைபெற்ற பா.ம.க மாநில மாநாட்டில் மக்களவை உறுப்பினரும், பா.ம.க முதல்வர் வேட்பாளருமான அன்புமணி இராமதாசு பேசியதாவது: “இது வரலாறு படைக்கின்ற மாநாடு….
மதுவைத் தொடாதே ! – கவிஞர் முத்துச்சாமி
மதுவைத் தொடாதே !- மனிதா! மதுவைத் தொடாதே !- மனிதா மதுவைத் தொடாதே ! மனதும்கெடும் உடலும்கெடும் மறந்து விடாதே ! போதைதரும் மதுவினையே குடிக்கத் தொடங்கினால் -உந்தன் பாதைமாறிப் போய்விடுமே பயணம் தடுமாறிடுமே ! மட்டையாக்கும் மதுவை – நீயும் சட்டைசெய்யாதே ! கட்டையாகிப் போகுமுடல் பட்டை யடிப்பதாலே ! (மதுவைத் தொடாதே) பாடுபட்ட உழைப்பை -நீயும் பார்க்கத் தவறினால் கேடுகெட்ட மதுவுமுன்னைக் கைதி ஆக்குமே ! குடும்பம் தெருவில் நிற்பதற்குக் குடியும் காரணம் – உன்னை மடியேந்த வைத்திடுமே !…
மதுபானச்சாலையாக மாறிவரும் குள்ளப்புரம் சாலை
மதுபானச்சாலையாக மாறிவரும் குள்ளப்புரம் சாலை தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரம், பொம்மிநாயக்கன்பட்டி சாலைகள் மதுபானச்சாலையாக மாறிவருகின்றன. குள்ளப்புரம், பொம்மிநாயக்கன்பட்டி, அ.வாடிப்பட்டி போன்ற ஊராட்சிகளில் மதுபானக்கடைகள் இல்லை. எனவே இப்பகுதியில் உள்ள மக்கள் செயமங்கலத்தில் உள்ள மதுபானக்கடைகளில் மதுபானங்களை வாங்கி மது அருந்துகின்றனர். செயமங்கலத்தில் உள்ள மதுபானக்கடையில் குடிப்பக வசதி இல்லை. இதனால் மதுப்பிரியர்கள் மதுபானங்களை வாங்கிக் குள்ளப்புரம், பொம்மிநாயக்கன்பட்டி சாலைகளில் இருபுறமும் கூட்டம், கூட்டமாக உட்கார்ந்து மதுபானங்களை அருந்துகின்றனர். இப்பகுதியில் போதிய பேருந்து வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் நடந்து செல்லும்போது அவர்களைத்…
கலைச்சொல் தெளிவோம் 48 : மது வகைகள்
48 : மது வகைகள் பழந்தமிழகத்தில், நுங்கு, கரும்புச்சாறு, இளநீர் ஆகியவற்றைப் பருகி மகிழ்ந்து வாழ்ந்துள்ளனர் என்பது இரும் பனையின் குரும்பை நீரும், பூங் கரும்பின் தீஞ் சாறும் ஓங்கு மணற் குலவுத் தாழைத் தீ நீரோடு உடன் விராஅய், என வரும் புறநானூற்று(24) அடிகளால் தெரியவருகின்றது. இருப்பினும் உற்சாகத்திற்காகவும் களிப்பிற்காகவும் பல்வகையிலான சாறுநீர்களை உட்கொண்டுள்ளனர். மதுவகைகள் உடலுக்குத் தீது என்ற வகையில் அறவே நீக்கப்பட வேண்டியவைதாம். எனினும், இப்போது விற்பனையில் பல்வகை மதுவகைகள் உள்ளன என்பதால் அவற்றைத் தமிழில் குறிக்க வேண்டி…
கடைநிலை மாறுமா ? – சிலேடைச் சித்தர் சேதுசுப்பிரமணியம்
கடைநிலை மாறுமா ? மது கொடுக்கும் மயக்கத்தால் மதியிழக்கும் மாக்களெல்லாம் நிதியிழப்பார் , மன நிம் – -மதியிழப்பார் , குடல் கெட்டு , உடல் கெட்டு உயிரிழப்பார் .குடும்பத்தார் கதியிழப்பார் , மங்கலப் பெண்டிரெல்லாம் மங்களம் இழப்பார் , மண் கலமாய் உடைந்திடுவார் மகன்கள் கல்வியிழப்பார் , மகள்கள் மணமிழப்பார் . சந்தடி ஏதுமின்றி சந்ததியே மறைந்துவிடும். இரக்கமின்றி அழிக்கும் அரக்கன் என்பதனால்தான் ஆங்கிலத்தில் ‘ ARRACK ‘ என்றழைத்தாரோ . ‘குடி குடி கெடுக்கும் ‘ என்று பொடி எழுத்தில்…
பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில் என்புமுறிவு நோய் (Dengue fever) பரவும் பேரிடர்
தேனிஅருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில் என்புமுறிவு நோய் (Dengue fever) பரவும் பேரிடர் உள்ளது. பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில் ஏறத்தாழ 5,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பெரும்பாலும் வணிக நிமித்தம் காரணமாகப் பெங்களுர், மைசூர், மும்பை போன்ற இடங்களுக்குச் சென்றுவிடுவார்கள். அதே போல அண்டை மாநிலமான கேரளாவிற்கும் வேலைக்காகச் சென்றுவிடுவார்கள். வருடத்தில் பொங்கல், இரம்சான், ஈகைத்திருநாள் (பக்கிரீத்து), தீபாவளி முதலான பண்டிகையின்போது மட்டும் அனைவரும் ஒன்று கூடுவார்கள். இந்நிலையில் பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில் பணியாளர்கள் பற்றாக்குறைவு உள்ளது. இதனால் பொதுமக்களின் அடிப்படைச்சிக்கல்களான குடிநீர், சாக்கடை வசதி,…
செய்திக் குறிப்புகள் சில
அமெரிக்காவின் இலாங்வுட்டு பல்கலையில் நடந்த அறிவியல் உச்சி மாநாட்டில், தமிழகத்தை சேர்ந்த மாணவர் டெனித் ஆதித்யாவின் வாழையிலையைப் பதப்படுத்திக் குவளை, கிண்ணம் உருவாக்கிச் சுற்றுச் சூழலை மாசின்றி அமைக்கும் கண்டுபிடிப்பு குறித்துக் கலந்துரையாடல் நடந்தது. பிரிட்டனைச் சேர்ந்த ஃபெயித்து என்ற 9 அகவைச் சிறுமி புத்தகங்கள் படிப்பதில் உள்ள கழிமிகு விருப்பத்தின் காரணமாக 7 மாதங்களில் 364 புத்தகங்களைப் படித்து முடித்துள்ளார். மது ஒழிப்புக்கு ஆதரவாகப் போராட மாணவர்கள் முன்வர வேண்டும் – தமிழருவி மணியன் மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களின் செலவு …
மதுமயக்கத்தில் மலைப்பாம்பிற்கு இரையானார்
கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டத்திலுள்ள அட்டப்பாடி வனப்பகுதியில் குடிபோதையில் உறங்கி கொண்டிருந்த ஒருவரை மலைப்பாம்பு ஒன்று விழுங்கி விட்டது. வனப்பகுதி அருகே உள்ள இடத்தில் மது அருந்திவிட்டு மயக்கத்தில் அயர்ந்துவிட்டவரையே மலைப்பாம்பு விழுங்கியுள்ளதாக ஊரினர் தெரிவித்துள்ளனர். பாம்பின் வயிற்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டதாகவிம் தெரிவிக்கப்படுகிறது.