ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):– 8

(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 7 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 8 மருத நிலம்‌ தொடர்ச்சி  சமுத்திரம்     சில ஊர்ப் பெயர்களில் சமுத்திரம் என்ற வடசொல் இடம் பெற்றிருக்கின்றது. தமிழ்நாட்டு மன்னரும் செல்வரும் உண்டாக்கிய பெரிய ஏரிகள், கடல் என்றும், சமுத்திரம் என்றும், வாரிதி என்றும் புனைந்துரைக்கப் பெற்றன.77 இராசராச சோழன் வெட்டிய பெருங்குளம் ஒன்று சோழ சமுத்திரம் என்று சாசனத்திற் குறிக்கப்படுகின்றது.78 எனவே, தமிழ் நாட்டு ஊர்ப் பெயர்களில் உள்ள சமுத்திரம் என்னும் சொல், பெரும்பாலும் ஏரியின் பெயரென்று கொள்ளலாகும். நெல்லை…

ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):– 7

(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 6 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 7 மருத நிலம்‌ தொடர்ச்சி ஓடை     இயற்கையான நீரோட்டத்திற்கு ஓடை என்பது பெயர். மயிலோடைஎன்னும் அழகிய பெயருடைய ஊர் நெல்லை நாட்டிலும், பாலோடைஇராமநாதபுரத்திலும், செம்போடை தஞ்சை நாட்டிலும் விளங்கக் காணலாம்.  மடை     கால்வாய்களிலும், குளங்களிலும் கட்டப்பட்ட மதகுகள் மடையென்று பெயர் பெறும். மடையின் வழியாகவே, தண்ணீர் வயல்களிற் சென்று பாயும். இத் தகைய மடைகள் அருகே சில ஊர்கள் எழுந்தன. நெல்லை நாட்டிலுள்ள பத்தமடை என்னும் பத்தல்…

ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):– 6

(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 5 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 6 மருத நிலம்‌ தொடர்ச்சி பெரும்பாலும் தென்னாட்டில் உள்ள நதிகள் மலைகளிலே பிறக்கும். அவ்வாறு பிறவாமல் சமவெளியாம் முல்லை நிலத்தில்தன்னூற்றாகப் பொங்கி எழுந்து, கயமாகப் பெருகிச் சிறு ஆறாக ஓடும் சிறப்பினைக் கண்டு, அதற்குக் கயத்தாறு என்று முன்னையோர் பெயரிட்டார்கள். இந் நாளில் அப்பெயர் ஆற்றின் பெயராக வழங்காவிடினும் அவ்வாற்றங் கரையிலுள்ள கயத்தாறு என்ற ஊரின் பெயராகக் காணப்படுகின்றது.60      ஆற்றின் அருகே யமைந்த ஊர் ஆற்றூர் எனப்படும். தமிழ்…

ஊரும் பேரும்:இரா.பி.சேது(ப்பிள்ளை):– 5

(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 4 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 5 மருத நிலம்‌ ஆறு நிலவளமும்‌, நீர்வளமும்‌ உடைய தமிழ்‌ நாட்டில்‌ நினைப்பிற்கு எட்டாத காலந்‌ தொட்டுப்‌ பயிர்த்தொழில்‌ பண்புற நடந்து வருகின்றது. பண்டைத்‌ தமிழர்‌ ஆற்று நீர்‌ பாயும்‌ அவல பரப்பைப்‌ பண்படுத்திப்‌ பயிர்‌ செய்து மருத நிலமாக்கினார்கள்‌. அருமந்த பிள்ளையைப்‌ பாலூட்டி வளர்க்கும் தாய்போல் மருத நிலத்தை நீரூட்டி வளர்ப்பது நதியென்று கண்டு அதனைக் கொண்டாடினார்கள்.49 காவிரியாற்றைப்‌ பொன்னியாறென்று புகழ்ந்தார்கள்‌; வைகையாற்றைப்‌  “பொய்யாக்‌ குலக்கொடி” 50 என்று…