வள்ளுவர் விளக்கும் வன்முறைக்கு எதிரான மருந்து – பெ.அருத்தநாரீசுவரன்
வள்ளுவர் விளக்கும் வன்முறைக்கு எதிரான மருந்து சமுதாயத்தில் தாம் நினைத்தால் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாக்கக் கூடிய அளவிற்கு நிறைந்த பண்புலநலன்கள் கொண்ட பெரியோர்கள் சிலர் இருக்கின்றார்கள். அப்படிப்பட்ட பெரியோர்களை வள்ளுவர் சான்றோர் என்று குறிப்பிடுகின்றார். சான்றோர் என்ற சொல் வள்ளுவர் காலத்திற்கு முன்பு போர்க்களத்தில் போராடுகின்ற வீரர்களைக் குறித்த சொல். பிற்காலத்தில் போரிட வேண்டும் என்று தேவை இல்லாத நேரத்திலுங்கூட மனஉறுதியும் பெருந்தன்மையும் வான்குணமும் கொண்ட மனிதர்கள் உருவானார்கள். அப்படிப்பட்ட மனிதர்களை வள்ளுவர் சான்றோர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். … வன்முறைகள் வளர்ந்து சமுதாயத்தில்…
மன அமைதிக்கு மருந்து நூல்களின் பங்கு: 1/ 2 : தி.வே.விசயலட்சுமி
மன அமைதிக்கு மருந்து – நூல்களின் பங்கு 1/ 2 “நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு” (குறள் 783) நூல்களைப் படிப்பவர்களுக்கு, அதிலுள்ள நற்பொருள்கள் சிறுகச் சிறுக விளங்குவதுபோலப், பண்புள்ளவர்களுடன் செய்துகொள்ளும் நட்பு, அவருடன் பழகப்பழக இன்பம் அளிக்கும். நூல் ஒரு சிறந்த நண்பன், சிறந்த ஆசிரியர், சிறந்த அமைச்சரைப்போல் அறிவுரை கூறி வழிகாட்டும். நூல் என்பது சிறந்த இலக்கிய நூல்களை மட்டும் சுட்டவில்லை. இறைநெறி நூல்கள், வரலாற்று நூல்கள், உளவியல், தத்துவம், புதின நூல்கள்,…
திருக்குறள் அறுசொல் உரை – 095. மருந்து : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 094. சூது தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 095. மருந்து நோய்கள் வரும்முன் காக்கும், வந்தால், நீக்கும் மருத்துவம். மிகினும், குறையினும் நோய்செய்யும், நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று. உடல்சூடு, குளிர்ச்சி, காற்று, நிறையினும், குறையினும் நோயே. ”மருந்(து)”என வேண்டாஆம் யாக்கைக்(கு), அருந்திய(து), அற்றது, போற்றி உணின். “மருந்து”என, வேண்டாம், உணவு முழுதும் செரித்தபின் உண்டால். அற்[று]ஆல் அள(வு)அறிந்(து) உண்க; அஃ(து)உடம்பு பெற்றான், நெடி(து)உய்க்கும் ஆறு….
ஆரியப் பித்தலாட்டத்திற்குச் சரியான மருந்து திருக்குறள்தான்! – தந்தை பெரியார்
திருக்குறள் குறளை மெச்சுகிறார்களே ஓழிய காரியத்தில் அதை மலந்துடைக்கும் துண்டுக் காகிதமாகவே மக்கள் கருதுகிறார்கள். அதோடு அதற்கு நேர்மாறாக விரோதமான கீதையைப் போற்றுகிறார்கள். அறிவால் உய்த்துணர்ந்து ஒப்புக் கொள்ளக் கூடியனவும் இயற்கையோடு விஞ்ஞானத்துக்கு ஒப்ப இயைந்திருக்கக் கூடியனவும் ஆன கருத்துகளையே கொண்டு இயங்குகிறது வள்ளுவர் குறள். ஆரியக்கலை, பண்பு, ஒழுக்கம், நெறி முதலியவை யாவும் பெரிதும் தமிழர்களுடைய கலை, பண்பு, நெறி, ஒழுக்கம் முதலியவற்றிற்குத் தலைகீழ் மாறுபட்டதென்பதும், அம்மாறுபாடுகளைக் காட்டவே சிறப்பாகக் குறள் உண்டாக்கப்பட்டது என்பதும் எனது உறுதியான கருத்தாகும். நீங்கள் என்ன சமயத்தார்…