மறை சொல்லும் மறுப்பும் மறைப்பும் – இரா. திருமாவளவன், மலேசியா

மறை சொல்லும் மறுப்பும் மறைப்பும் எதிர்மறை நேர்மறை என மறையைச் சேர்த்து எழுதும் சொல்லும் வழக்கைச் சிலர் ஆள்கின்றனர்.  இவற்றுள் நேர்மறை எனச் சொல்வது சரியா? சரியா பிழையா என அறிய, மறையில் மறைந்துள்ள நுட்பப் பொருளை அறிந்தால் கட்டாயம் தெளிவுறும்.. எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வு வேர்ச்சொல் விளக்கமேயாகும்… உல் எனும் ஊகாரச் சுட்டு ஆணிவேர், பல்வகைக் கருத்துகளைத் தந்து சொற்களைப் பிறப்பிக்கும் என்பது பாவாணரின் கோட்பாட்டு விளக்கமாகும். அக்கருத்துகளில் ஒன்றே வளைவுக் கருத்தாகும். பாவாணர் வித்தினின்று முளைவிட்டு கிளம்பிய ஆணிவேரின் நகர்ச்சியை அடிப்படையாகக்…

தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ? – கவிவாணர் ஐ.உலகநாதன்

தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ? வஞ்ச மனத்துடன் வந்து புகுந்தவர் வாலை யறுத்திட வாராயோ-வரும் வெஞ்ச மருக்கிது வேளை பொருட்குவை மேலும் குவித்துடன் தாராயோ சேரு மலேசிய சீர்மிகு நாட்டினை சேரு மிடைப்பகை தீராயோ-உனை வாரியணைத்தவள் வாழ்வு சிறந்திட வாரி நிதிக் குவை தாராயோ ஆறு மலைத்தொடர் அன்பு மனத்தொடர் ஆர்ந்த கலைத்தொடர் தாய்நிலமே-உனை வேறு நிலத்தவர் வெல்ல முனைந்திடின் வேட்டி லவர்தலை போய்விழுமே! வீடு விளங்கிட பெற்ற குழந்தையை நாடு விளங்கிடத் தாராயோ-அவர் பீடு விளங்கிடக் கேடு களாந்திடப் பிள்ளையைப் பெற்றவர் வாரீரோ! தங்க…

மலேசியாவில் உலகத் திருக்குறள் மாநாடு – கருத்தாடல் கூட்டம், சென்னை

  ஐப்பசி 24, 2049 சனிக்கிழமை 10.11.2018 காலை 10.00 முதல் நண்பகல் 1.00 வரை ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம், தரமணி (M.S.Swaminathan Research Centre) மலேசியாவில் உலகத் திருக்குறள் மாநாடு – கருத்தாடல் கூட்டம் மலேசியாவில் 2019 ஆம் ஆண்டு பிப்பிரவரி 22,23,24 இல் உலகத் திருக்குறள் மாநாடு நடைபெற உள்ளது. தொடர்பான ஆதரவிற்காகவும் கருத்துரை தெரிவிக்கவும் நடைபெறும் கூட்டம்.  தலைமை:  தமிழ்ச்செம்மல் ப.முத்துக்குமாரசுவாமி(வ.உ.சி.பெயரனார்) ஆர்வலர்கள் வருக. இங்ஙனம் மநாநாட்டுக்குழுவினர் கவிஞர் உடையார்கோயில் குணா தமிழ்த்தாய் அறக்கட்டளை,மாரியம்மன் கோயில், தஞ்சாவூர் 613501 பேசி 75300…

மலேசிய ஆசிரியர்களுக்கான சிறுகதைப் போட்டி – யாழ் பதிப்பகம்

மலேசியக் கல்விப் பரப்பில் மாணவர்களுக்கான பல்வேறு பயிற்சி நூல்களைப் பதிப்பித்து வருவதோடு அரசாங்கத்  தேர்வுகள் தொடர்பான பயிலரங்குகளையும் நடத்திவரும் ‘யாழ் பதிப்பகம்’ 2018 ஆண்டுக்கான சிறப்புத் திட்டமாக இந்நாட்டில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான தமிழ்ச் சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்த உள்ளது. இப்போட்டியில் மலேசியத் தமிழ்/தேசிய/இடைநிலைப்பள்ளிகளில்  தற்சமயம் பணிபுரியும் எல்லா ஆசிரியர்களும் கலந்து கொள்ளலாம். ஆசிரியர் பயிற்சிக் கழகங்களிலும் உயர்கல்விக் கூடங்களிலும் பயிலும் பயிற்சி ஆசிரியர்களும் கலந்து கொள்ளலாம். பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் கலந்து கொள்ள முடியாது. அதேபோல இதுவரை தனித்த சிறுகதை தொகுப்பு…

தெரிந்து கொள்வோம் : கருவியம்  – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்

(தெரிந்து கொள்வோம் : கருவியம்  – hardware  1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம் : கருவியம்  – hardware 2/2 ware என்பது பொருள் அல்லது பண்டம் என்பதைக் குறிக்கும் என்பது உண்மைதான். எனவே, ஆட்சியியலில்   warehouse –  கிடங்கு, பொருளறை, பண்டக மனை என்றும்  வேளாணியலில் பொருளைத தேக்கி அல்லது சேமித்து வைக்குமிடம் என்னும் பொருளில்  warehouse   –  தேக்ககம், கிட்டங்கி வங்கியியலில் காப்பகம், பண்டகச்சாலை  என்றும் பொறியியலிலும் மனையியலிலும்  glassware – கண்ணாடிப் பொருட்கள்  என்றும் குறிக்கின்றனர். மேசையில் வைக்கப்படும்…

தெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 1/2 : இலக்குவனார் திருவள்ளுவன்

  தெரிந்து கொள்வோம் : கருவியம்  – hardware 1/2  எந்த ஒரு சொல்லுக்குமான பொருளும் அச்சொல் பயன்படும் இடத்தைப் பொருத்தே அமையும். எனவே, வெவ்வேறு பயன்பாட்டுத்தளங்களில்  அல்லது இடங்களில் ஒரே சொல்லுக்கு வெவ்வேறு பொருள்  அமைவதும்  இயற்கை. நமக்கு அறிமுகமான சொற்கள்  நாம் கருதக்கூடிய பொருள்களிலேயே பிற இடங்களிலும் வருவதாகத் தவறாக எண்ணும் பழக்கம் நம்மிடம் உள்ளது. இப்போக்கால் கலைச்சொல் பெருக்கம் தடைப்படுகிறது; அறிவியல் துறையின் வளர்ச்சியும் இடர்ப்படுகின்றது.     இங்கு நாம் ஆங்கிலத்தில்  ஆர்டுவேர் / hardware எனச் சொல்வதைத்…

இளைஞர் கைகளில் இணையத்தமிழ் – இலக்குவனார் திருவள்ளுவன்

இளைஞர் கைகளில் இணையத்தமிழ்    தமிழ்நாட்டில் எந்த ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றாலும் அனைவரும் எதிரொலிக்கும் கவலை முதியோர் அவையாக இருக்கிறதே என்பதுதான். எந்தத் தமிழ்க்கூட்டம் என்றாலும், இளைஞர்களைக் காண முடிவதில்லை. ஒருவேளை உரையாளர்களின் குடும்பத்தினர் யாரும் வந்திருந்தாலும் அவர்கள் ஒருவர் அல்லது இருவராகத்தான் இருப்பர். கூட்டம் இறுதிவரை இருப்பார்கள் என்பதும் ஐயமே. இதற்காகவே நான் கல்லூரிகளில் நிகழ்ச்சிகள் நடத்தினேன். அங்கும் தமிழ் பயிலும் ஏதோ ஓர் ஆண்டின் மாணாக்கர்கள் மட்டும் அமர்ந்திருப்பார்கள். வருபவர்கள் ஆர்வமாகத்தான் இருப்பர். ஆனால், கல்லூரியில் இந்த நிகழ்ச்சிக்கு இத்தனாம் ஆண்டு…

1 2 4