தாய்மொழி தமிழெனும் அரும்பேறு – – கவிஞர் செ.சீனி நைனா முகம்மது

தாய்மொழி என்பது தாயின்மொழி – அது தாயும் நீயும் பேசும்மொழி ஆயிரம் மொழிகள் நீயறிந் தாலும் ஆன்மா உணர்மொழி அந்தமொழி – அது அன்னையின் கருவில் வந்தமொழி! அன்னையின் மடியில் கிடக்கையிலே – அவள் அன்பினைப் பாலாய்க் குடிக்கையிலே சின்னவுன் செவியில் சில்லெனப் பாய்ந்து தேனாய் இனித்திடக் கேட்டமொழி – உன் சிந்தையில் விதைகள் போட்டமொழி! தோளிலும், மார்பிலும் சாய்கையிலே – நீ தொட்டிலில் ஆடி ஓய்கையிலே ஏழிசை மிஞ்சிடும் தாயிசை கேட்டே இதமாய்த் தூங்கிய பாட்டுமொழி – அது இதயங்கள் பேசிடும் வீட்டுமொழி! அன்னையை…

நிலைபெறநீ வாழியவே! – கவிஞர் சீனி நைனா முகம்மது

  காப்பியனை ஈன்றவளே!      காப்பியங்கள் கண்டவளே!    கலைவளர்த்த தமிழகத்தின்      தலைநிலத்தில் ஆள்பவளே! தாய்ப்புலமை யாற்புவியில்      தனிப்பெருமை கொண்டவளே!   தமிழரொடு புலம்பெயர்ந்து      தரணியெங்கும் வாழ்பவளே! எங்களெழில் மலைசியத்தில்         சிங்கைதனில் ஈழமண்ணில்    இலக்கியமாய் வழக்கியலாய்         இனக்காவல் தருபவளே! பொங்கிவளர் அறிவியலின்         புத்தாக்கம் அத்தனைக்கும்    பொருந்தியின்று மின்னுலகில்         புரட்சிவலம்…

சீர்மிகு புலவர் சீனி நைனாமுகம்மது புகழ் ஓங்குக!

 மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தகுந்தவரான சீர்மிகு புலவர் செ. சீனி நைனா முகம்மது, கரும்பன், அபூபரீதா, இபுனுசைய்யிது, இல்லார்க்கினியன், நல்லார்க்கினியன் ஆகிய புனை பெயர்களிலும் படைப்புகளை வழங்கிய அறிஞர்.  தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரில் கீழாயூர் என்னும் ஊரில் ஆவணி 26, 1978 – செப்டம்பர் 11 1947வியாழக்கிழமையன்றுபிறந்தவர்; தம் பன்னிரண்டாம் அகவையில் மலேசியா சென்ற தந்தையுடன் உடன் சென்றார். அங்கேயே கல்வி கற்றார். பள்ளி சார்ந்த கல்வியில் பயிலாமல் தனிப்பட்ட முறையில் பயின்று அறிஞராகத் திகழ்பவர்களைப் ‘படிக்காத மேதைகள்’ என்பர். அத்தகைய…

மியன்மா-மலேசியா-சிங்கப்பூர் தமிழ் உறவுப்பாலம் மாநாடு – 2014

அன்பார்ந்த தமிழ் உறவுகளே… வணக்கம். மியன்மா-மலேசியா-சிங்கப்பூர் தமிழ் உறவுப்பாலம் மாநாடு (2014) என்ற தமிழ் உறவுகள் ஒன்று கூடி மொழி, இனம், கல்வி, பண்பாடு போன்ற சிறப்பியல்புகளைப் பரிமாற்றம் செய்யும் மாபெரும் நிகழ்வுகள், மியன்மா நாட்டின் வணிக நகராம் யாங்கோன் நகரில் 2014 சூன் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் சிறப்புடன் நடைபெறும். உலகத் தமிழ் உறவுகள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். மலேசியா-சிங்கப்பூர் தவிர மற்ற நாடுகளில் வாழும் தமிழ் உறவுகள் பதிவு செய்ய – தொடர்பு கொள்ள வேண்டுபவர் & மியன்மா ஒருங்கிணைப்பாளர்…

மலேசிய அமைச்சர் பி.வேதமூர்த்தி பதவி விலகல்

கோலாலம்பூர்: மலேசியாவில்  தலைமையாளர் அலுவலகத்தில் துணை அமைச்சராக இருக்கும் பெர்சாத்துவான்  இண்டுராப்பு மலேசியா (பிஎச்எம்) தலைவர் பி. வேதமூர்த்திபதவி விலகியுள்ளார். நாடாளுமன்ற மேலவைப் பதவி, துணை அமைச்சர் பதவி ஆகிய இரண்டிலும் இருந்து நேற்று வேதமூர்த்தி விலகியதாக அறியப்படுகிறது. ‘சியு டெய்லி’ என்னும் செய்தியமைப்பின் கூற்றுப்படி, வேதமூர்த்தி அவரதுதவிலகல் மடலைத் தலைமைளார் நசிப்பிடம் நேரடியாக 10.02.14 அன்று அளித்துள்ளார்..