மாவீரர்களை வணங்குவது நம் நலத்திற்காகவே! ஈழமலர்ச்சிக்காகவே! – இலக்குவனார் திருவள்ளுவன்
மாவீரர்களை வணங்குவது நம் நலத்திற்காகவே! ஈழமலர்ச்சிக்காகவே! தமிழீழத்தை மனக்கண்களில் கண்டவர்கள்! தங்கள் நெஞ்சில் சுமந்தவர்கள்! மனக்கண்களில் கண்ட தமிழீழம் உருவாகும்; அங்கே ஈழத்தமிழ் மக்கள் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் தன்னுரிமையுடனும் தன்மதிப்புடனும் வாழ்வார்கள்; அடிமைத்தளையறுந்து, பட்ட துயரங்கள் மறைந்து, இன்னல்கள் நீங்கி, இன்பவாழ்வு வாழ்வர்; தமிழும் தனக்குரிய இடத்தை நாட்டிலும் உலகத்திலும் பெறும்; என்னும் நம்பிக்கையில், தங்கள் இன்னுயிரை நீத்தவர்கள் மாவீரர்கள்! இவர்களை வணங்குவது நமக்காகத்தான்! ஆம்! நமக்காக மறைந்தவர்களை – புகழால் வாழ்பவர்களை – நாம் வணங்குவது அவர்கள் கனவுகளை நாம்…
தமிழின ஏட்டில் தலைப்பென வாழ்பவர் ! – நா.இராசா இரகுநாதன்
விடுதலைக் கருவை கழுத்தில் சுமந்தனர் ! துயிலும் இல்லம் உரைப்பது ஓன்று ஆணும் பெண்ணும் ஓர் நிறை என்று! ஆயிரம் தாய் சுமந்த உயிர்கள் அன்னை பூமியில் ஆழ(ள)ப் புதைந்தன!. பனிக்குடம் உடைத்து புவிமுகம் கண்டவர் தாயகம் காக்க நீர்க்குடம் விண்டனர் !. தாய்முகம் காண மாரைச் சப்பியோர் தாய்நிலம் பேண மரணத்தைச் சப்பினர்!. விடுதலை வெடியை மண்ணில் புதைத்தவர் வெடியின் திரியாய் தம்முயிர் தந்தனர் ! ஆயிரமாண்டு விலங்கினை உடைத்திட ஆலகால விடத்தினைக் கடித்தனர் ! சிங்கள இனவெறி கொடுமையை விரட்டிட…
சந்தனப்பேழைகளே! திருமுகம் காட்டுங்கள்! – கண்ணன் நாகராசு
சந்தனப்பேழைகளே! திருமுகம் காட்டுங்கள்! தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே! தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே! இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே! இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே! எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்! எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்! ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்! ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்! கண்ணன் நாகராசு
உடைத்தெறி வேலிகளை! – கார் முகிலன்
நாம் புதைந்த இடத்தில் இன்னும் புழுதி அடங்கவில்லை நீங்கள் தூக்கிச் சென்ற எம்முடல் ஈரம் காயவில்லை இன்னும் கொதிக்கிறது என் குருதி எழுந்து போராட உடலுடைந்து பிணமாய்க் கிடக்கிறேன் கல்லறையில் மனம் உடையாமல் முடிந்தால் எனக்கோர் புது உடல் தாருங்கள்! ஈழம் அமைக்கிறேன் பாருங்கள்! என் இனிய ஈழ உறவுகளே என் கல்லறையில் – பூ வைக்கும் பெண்டுகளே உம் மானம் காக்க வருகிறேன் சிங்களவன் வாலை அடக்க எழுகிறேன் தீயில் நீராடிய என் சகோதரன் பக்கத்தில் உறங்குகிறான் பாருங்கள் கரும்புலியாய் வெடித்தவன் அவன்…