tomb-kallarai02

நாம் புதைந்த இடத்தில்
இன்னும்
புழுதி அடங்கவில்லை

நீங்கள் தூக்கிச் சென்ற
எம்முடல்
ஈரம் காயவில்லை

இன்னும் கொதிக்கிறது
என் குருதி
எழுந்து போராட
உடலுடைந்து பிணமாய்க்
கிடக்கிறேன் கல்லறையில்
மனம் உடையாமல்

முடிந்தால் எனக்கோர் புதுtomb-kallarai01
உடல் தாருங்கள்!
ஈழம் அமைக்கிறேன் பாருங்கள்!
என் இனிய ஈழ உறவுகளே

என் கல்லறையில் – பூ
வைக்கும் பெண்டுகளே
உம் மானம் காக்க
வருகிறேன்
சிங்களவன் வாலை அடக்க
எழுகிறேன்

தீயில் நீராடிய என்
சகோதரன்
பக்கத்தில் உறங்குகிறான்
பாருங்கள்
கரும்புலியாய் வெடித்தவன்
அவன் உடல் கண்டிருக்க
மாட்டீர்கள்
அவன் உள்ளம் அறிவீர்கள்

தாயினத்திற்காகத் துணிந்து
உயிரை ஆயுதமாகக்
கொடுத்த உங்களைப் போல்
ஓர் தாய் வயிற்றில்
ஓர் தாய் மண்ணில்
பிறந்த ஓர் தமிழன்தான்
அவன்
ஏன் உங்களால் முடியாது ..

மண்டியிட வேண்டா
நீங்கள்
மண்டியிடவா நாங்கள் மடிந்தோம்
எழுந்திடு தமிழா!tomb-kallarai03

கோழையாய்க் கொடிபிடிக்காதே
வீரனாய் வாளெடு
ஆயுதம் ஏந்து
என்னோடு தோள் கொடு

ஆவியாய் உனக்குப் பலமாய்
நானிருப்பேன்
எழுந்து வா தமிழா
ஈழம் காண்போம்!

எம் தங்கைகள் எத்தனை
பேர் கயவன் காமத்திற்கு
கற்பிழந்து மானமிழந்து
தூக்கில் தொக்குகிறார்கள்

மனத்தைத் தொட்டுச் சொல்
உன் உதிரம்
கொதிக்கவில்லையா
அயல் நாடுகளில் அகதியாய்
அடிமையாய் இருக்காதே
உடைத்தெறி வேலிகளை!
பாதை பிறக்கும்

tomb-kallarai04எங்கள் ஆவிகள் உங்கள்
தோட்டாக்களில்
எதிரியின் மார்பைத் துளைக்கும்
நீ மார்பு தட்டி எழுந்தால்

எம் இனம் காக்க வா
தமிழா!
எம் கல்லறையில்
சத்தியம் தா தமிழா!
சத்தியம் தா தமிழா!

நன்றி : ஈகரைத் தமிழ்க்களஞ்சியம்

http://www.eegarai.net/t91076-topic

 gun01