சிறப்புக் கட்டுரை: சதுரங்கப் பெருவிழாவில் வெட்டப்படும் தமிழ்! – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

சிறப்புக் கட்டுரை: சதுரங்கப் பெருவிழாவில் வெட்டப்படும் தமிழ்! அரசியல் சிறப்புக் கட்டுரை Jul 24, 2022 08:49AMJul 24, 2022 IST : –இலக்குவனார் திருவள்ளுவன் சதுரங்க ஞாலப் போட்டி 2022 இற்கு வாழ்த்துகள்! 44 ஆவது சதுரங்க ஞாலப்போட்டி ஆடி 12, 2053 / 28.07.2022 -ஆடி 25, 2053/ 10.08.2022 நாட்களில் நடைபெறுகிறது. சதுரங்க ஞாலப்போட்டிக்கான ஏற்பாடுகளைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது. நேப்பியர் பாலத்தைச் சதுரங்கக் கட்டங்களாக வண்ணந்தீட்டி விளம்பரப்படுத்துவதிலிருந்து எல்லா வகையிலும் முதல்வர் அவர்கள் அறிவுரைக்கிணங்க அதிகாரிகளும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள்….

நாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்!- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

நாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்! கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப் பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் – மணங்கொண்டீண்டு உண்டுண்டுண் டென்னும் உணர்வினால் சாற்றுமே டொண்டொண்டொ டென்னும் பறை. (நாலடியார் பாடல் 25) பொருள்: உறவினர் கூட்டமாகக் கூடிநின்று கூவி அழ, பிணத்தைத் தூக்கிக்கொண்டு சுடுகாட்டில் இடுபவரைப் பார்த்தும், திருமணம் செய்துகொண்டு, இவ்வுலகில் உறுமுயதய் ‘இன்பம் உண்டு, இன்பம் உண்டு’ என்று மயங்குபவனுக்கு, ‘டொண் டொண் டொண்’ என ஒலிக்கும் சாப்பறையானது, இவ்வுலக வாழ்க்கையில் இத்தகைய இன்பம் இல்லை (யாக்கை நிலையில்லை)…

நாலடி இன்பம்! -15 ஒரு பறை: ஈர் இசை! – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

நாலடி இன்பம்! -15 ஒரு பறை: ஈர் இசை! மன்றம் கறங்க மணப்பறை யாயின அன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப் – பின்றை யொலித்தலு முண்டாமென் றுய்ந்துபோ மாறே வலிக்குமாம் மாண்டார் மனம். (நாலடியார் பாடல் 23) பொருள்: திருமண மன்றத்தில் முழங்கிய மணப்பறைகளே அன்றைக்கே மணமக்களில் ஒருவருக்குப் பிணப்பறையாய் ஒலிக்கவும் கூடும். இதனை உணர்ந்த பெரியோர்கள் மனம் தீமைகளில் இருந்து பிழைத்துப்போகும் வழியை எண்ணும். சொல் விளக்கம்: மன்றம்=பொதுவெளியில் அல்லது அவையில்; கறங்க=முழங்க; மணப்பறை ஆயின= மணக்கோலத்திற்கான பறைகள்; அன்று=அன்றைக்கே; அவர்க்கு=அம்மணமக்களுக்கு; ஆங்கே= அவ்விடத்திலேயே,…

நாலடி இன்பம் – 14: சூரியன் சொல்லும் செய்தி! – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

நாலடி இன்பம் – 14: சூரியன் சொல்லும் செய்தி! வாழ்நாட் கலகா வயங்கொளி மண்டிலம் வீழ்நாள் படாஅ தெழுதலால் – வாழ்நா ளுலவாமுனொப்புர வாற்றுமின் யாரு நிலவார் நிலமிசை மேல். (நாலடியார் பாடல் 22) பொருள்: வாழும் காலத்தை அளக்கும் கருவியாக விளங்கும் சூரியன், நாள் தவறாமல் தோன்றுவதால், ஆயுள் முடியும் முன்னர், பிறருக்கு உதவி செய்யுங்கள். யாருமே உலகில் சாகாமல் நிலைத்து இருக்க மாட்டார்கள். சொற்பொருள்: [வாழ்நாட்கு அலகுஆ வயங்கொளி மண்டிலம் வீழ்நாள் படாஅது எழுதலால் – வாழ்நாள் உலவாமுன் ஒப்புர வாற்றுமின்; யாரும்…

திருக்குறள் மாநாட்டுக்குத் தமிழக அரசு உதவியா?- தமிழறிஞர்கள் ஓசனை!

திருக்குறள் மாநாட்டுக்குத் தமிழக அரசு உதவியா?- தமிழறிஞர்கள் ஓசனை! தில்லியில் கடந்த 23,24 ஆம் நாள்களில் மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய, தமிழ் ஆட்சி மொழி பண்பாட்டுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராசன் நிறைவு விழாவிலும் தன்னார்வத்துடன் பங்கேற்றார். அப்போது அவர் “பிரான்சில் 06., 07.08.2020 இல் நடைபெற உள்ள திருக்குறள் மாநாட்டிற்கு அரசு நிதி யுதவி செய்யும். இந்த மாநாடு முடிந்து விட்டாலும் சிறிய அளவு உதவியேனும் செய்வோம். அமெரிக்காவில் நடைபெற்ற உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு…

நாலடி இன்பம்!- 12 பற்கள் மூலம் சில சொற்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

நாலடி இன்பம்!- 12 பற்கள் மூலம் சில சொற்கள்! பருவம் எனைத்துள பல்லின்பால் ஏனை இருசிகையும் உண்டீரோ என்று – வரிசையால் உண்ணாட்டம் கொள்ளப் படுதலால் யாக்கைக்கோள் எண்ணார் அறிவுடை யார். (நாலடியார், பாடல் 18) பொருள்: வயது எவ்வளவு கடந்துள்ளது? பற்களின் வலிமை எவ்வாறுள்ளது? வலிமையான உணவையும் உண்ண முடியுமா? என்று கருதப்படும் மறைந்துவரும் இளமையை அறிவுடையவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள். சொல் விளக்கம்: பருவம்=அகவை; எனைத்து=எத்தனை; உள=ஆகியுள்ளன; பல்லின்=பற்களினுடைய; பால்=வலிமைத்தன்மை; ஏனை=எவ்வளவு; இருசிகையும்= இரண்டு பிடியளவேனும் அல்லது வன்மை மென்மை ஆகிய இருவகை…

நாலடி இன்பம் – 11: வாழ்க்கைப் பயணத்தின் கட்டுச்சோறு! – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

நாலடி இன்பம் – 11: வாழ்க்கைப் பயணத்தின் கட்டுச்சோறு! ஆட்பார்த் துழலு மருளில்கூற் றுண்மையால் தோட்கோப்புக் காலத்திற் கொண்டுய்ம்மின் – பீள் பிதுக்கிப் பிள்ளையைத் தாயலறக் கோடலான் மற்றதன் கள்ளங் கடைப்பிடித்த னன்று. (நாலடியார், பாடல் 20) பொருள்: தான் கொண்டு போகவேண்டிய உயிரைத் தேடித் தேடி அலைந்து கொண்டுபோகும் அருளற்றவன் யமன். கருவில் இருந்தாலும் அல்லது பிறந்த குழந்தையாய் இருந்தாலும் தாய் அழ அக்குழந்தையின் உயிரை எடுத்துச் செல்லும் இரக்கம் அற்றவன் அவன். அவன் வஞ்சகத்தைப் புரிந்துகொண்டு, வழிப்பயணத்தில் உதவும் கட்டுச்சோறு போன்ற…

நாலடி இன்பம்!- 10. காற்றில் காய்களும் விழும்! – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

நாலடி இன்பம்!- 10. காற்றில் காய்களும் விழும்! மற்றறிவா நல்வினை யாமிளைய மென்னாது கைத்துண்டாம் போழ்தே கரவா – தறஞ்செய்ம்மின் முற்றி யிருந்த கனியொழியத் தீவளியா னற்கா யுதிர்தலு முண்டு. (நாலடியார், பாடல் 19) பொருள்: கொடுங்காற்றால் கனி மட்டும் அல்ல, கனியாத காய்களும் வீழ்வதுண்டு. எனவே, இளமையாகத்தான் உள்ளோம், பின்னர் நல்வினை புரியலாம் என எண்ணாது உள்ளதை மறைக்காது அறம் செய்க! சொல் விளக்கம்: முற்றி=முதிர்ந்து; இருந்த= இருந்த; கனி=பழங்கள்; ஒழிய= மட்டுமல்லாமல்; தீவளியால்= வலிய காற்றால்; நல்= நல்ல; காய்=காய்கள்; உதிர்தலும்=விழுதலும்;…