மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 85
(குறிஞ்சி மலர் 84 தொடர்ச்சி) குறிஞ்சி மலர், அத்தியாயம் 30 அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்கேடும் நினைக்கப் படும். சலத்தால் பொருள் செய்து ஏமார்த்தல் பசுமண்கலத்துள் நீர்பெய்து இரீஇ யற்று. — திருவள்ளுவர் மதுரைக்கே ஒரு புதிய சுறுசுறுப்புக் களை உண்டாகியிருந்தது. நகரம் முழுவதும் ஏதோ பெரிய போருக்குத் தயாராகிற மாதிரித் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. பழைய காலத்து அரசியல் வெள்ளாற்றுப் போர், தலையாலங்கானத்துப் போர் என்றெல்லாம் போர்கள் நடந்த மாதிரி அடிக்கடி போர்கள் ஏற்பட இன்றைய அரசியலில் வாய்ப்பும் இல்லை;…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 84
(குறிஞ்சி மலர் 83 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 29 தொடர்ச்சி மணிமேகலையைப் பற்றி எண்ணியபோது உடன் வந்திருப்பவர்களையெல்லாம் எங்காவது விலக்கித் துரத்தி விட்டுத் தனியாக அந்தத் தீவின் மணற்பரப்பில் அமர்ந்து கொண்டு கொந்தளிப்பின்றி அடங்கிக் கிடக்கும் கடலைப் பார்த்தவாறே தன் முகமாகத் தனக்குள்ளே நினைவுகளில் ஆழ்ந்து மௌனமாக அழவேண்டும் போலப் பைத்தியக்காரத்தனமானதொரு ஆசையும் அவளுக்கு உண்டாயிற்று. விலை மதிப்பற்றனவும், மீட்டு எடுக்க முடியாதனவுமாகிய பழைய பொற்காலத்தின் அழகிய நினைவுகள் அந்தக் கடற்கரைப் பகுதிகள் எங்கும் ஒளிந்திருப்பதை அவள் உணர்ந்தாள். மாலையில் அவர்கள் அங்கிருந்து திரும்பிவிட்டார்கள்….
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 83
(குறிஞ்சி மலர் 82 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 29 தொடர்ச்சி “நீங்களும் உடன் வந்தது எங்களுக்கு மெத்த மகிழ்ச்சியாயிருக்கிறது” என்று மங்களேசுவரி அம்மாவிடம் அன்பொழுகக் கூறினாள் கனகம்மாள் இராசநாயகம். விமான நிலையத்தில் சுங்கப் பரிசோதனை முடிந்து வெளியேற அரை மணி நேரம் பிடித்தது. கனகம்மாள் இராசநாயகமும் வேறு சில பெண்களும் மாலை மேல் மாலையாக அணிவித்துப் பூரணியைக் கழுத்து நிமிர முடியாமல் திணறச் செய்துவிட்டார்கள். யாழ்ப்பாணத்தாரின் முகங்களிலும், கனிவான பேச்சுக்களிலும், பழகுகிறவர்களைக் கவரும் ஒருவித இனிமையும் குழைவும் இருப்பதைப் பூரணி கண்டாள். யாழ்ப்பாணத்துத்…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 82
(குறிஞ்சி மலர் 81 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 29 புண்ணிய நல்வினை திரண்டனையபொன்னொளிர் பொலிவினைகண்ணிற்கரந்தானே மறுபடிகண்ணுள் கலந்தானே! விமானம் மேலே உயரச் சென்று பறந்து கொண்டிருந்தது. பக்கத்தில் உட்கார்ந்திருந்த மங்களேசுவரி அம்மாள் ஏதோ புத்தகம் பார்த்துக் கொண்டிருந்தாள். பூரணி கண்களை மெல்லத் துடைத்துக் கொண்டாள். ‘உயரத்தில் ஏறிச் செல்லும் போதெல்லாம் நானும் சேர்ந்து வரவேண்டும் என்பாய்! இப்போது என்னை மட்டும் கீழேயே விட்டுச் செல்கிறாய்’ என்று விமானம் புறப்படுமுன் நகைத்துக் கொண்டே கூறினானே அரவிந்தன். அப்போது அவன் முகம் எப்படி இருந்ததென்பதைக் கண்களை மூடிக்கொண்டு…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 81
(குறிஞ்சி மலர் 80 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 28 தொடர்ச்சி தொழிற்போட்டிகளையும், பொறாமை, பகைகளையும் கூடியவரை நியாயமாகவும், கண்ணியமாகவும் தீர்க்க முயன்றான் அரவிந்தன். அனாவசியச் சண்டைகளை முன்கூட்டியே தவிர்த்தான். தான் கிராமத்தில் நிலம் விற்றுக் கொணர்ந்த பணத்தில் அச்சகத்துக் கடன்களை அடைத்தவை போக எஞ்சிய பகுதியை தேர்தல் செலவுக்கென ஒதுக்கி வைத்தான். தன்னுடைய திறமையான நிருவாகத்தினாலும் நாணயமான நடவடிக்கைகளாலும் மீனாட்சி அச்சகத்துக்கு வந்து கொண்டிருந்த எந்த வேலைகளும் குறையாமல் பார்த்துக் கொண்டான் அரவிந்தன். பக்கத்தில் புதிதாக ஏற்பட்டிருந்த அச்சகம் அவனையோ, அவனுடைய தொழிலையோ எந்த…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 80
(குறிஞ்சி மலர் 79 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 28 தொடர்ச்சி “இது தொடங்கி எத்தனை நாளாயிற்று முருகானந்தம்?” “நாலு நாளைக்கு முன்னால்தான் திறப்பு விழா எல்லாம் பிரமாதமாகத் தடபுடல் செய்தார்கள். பருமாக்காரர்தான் திறந்து வைத்தார்.” “ஊம்! இனிமேல் இது ஒரு புது வம்பா?” என்று சொல்லிப் பெருமூச்சு விட்டவாறே அச்சகத்துக்குள் நுழைந்தான் அரவிந்தன். முருகானந்தமும் பின் தொடர்ந்தான். அன்று இரவு அரவிந்தனுக்கு உறக்கமே இல்லை. பருமாக்காரரைப் போல் வசதியுள்ளவர்கள் ஒருவர் மேல் பகைமை முற்றி வைரம் பெற்றுவிட்டால் திட்டத்தோடும், தீர்மானத்தோடும், கெடுதல் செய்து விரைவாக…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 79
(குறிஞ்சி மலர் 78 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 28 ஊரெல்லாம் கூடிஒலிக்க அழுதிட்டுப் பேரினைநீக்கிப் பிணமென்று பேரிட்டுச்சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டுநீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்கள். — திருமூலர் தன்னைப் பெற்ற தந்தை இறந்தபோது கூட அரவிந்தன் இப்படி அதிர்ந்து அலமந்து கதறியழவில்லை. அப்போது அவன் சிறுவன். இப்போதோ உணர்வுகளில் நோவும் அளவுக்கு மனம் பக்குவப்பட்ட இளைஞன். ‘தன்னை வளர்த்து உருவாக்கி வாழ்வளித்த வள்ளல் இறந்து போய்விட்டார்‘ என்று அந்தத் தந்தியில் படித்தபோது அதை உண்மையாக ஏற்றுக் கொண்டு நம்பி ஒப்புக்கொள்ளவே, அவன்…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 78
(குறிஞ்சி மலர் 77 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 27 தொடர்ச்சி “உங்களுடைய உடம்புக்கு என்ன?” “உடம்பெல்லாம் நன்றாக இருக்கிறது. மனத்துக்குத் தான் எல்லா இழவும்.” அவருடைய குரலில் இருந்த கடுமையான வறட்சியைக் கண்டு மேலே எதுவும் பேசத் தோன்றாமல் தயங்கி நின்றான் அரவிந்தன். கோபமோ, கவலையோ அதிகமாகி உணர்ச்சி வசப்பட்டால் இரத்தக்கொதிப்பு (பிளட்பிரசர்) வந்துவிடும் அவருக்கு. “எல்லாப் பயல்களும் சமயம் பார்த்துத்தான் காலை வாரி விடுகிறார்கள். குனிந்து கொள்ளச் சொல்லிப் பச்சைக் குதிரை தாவி விட்டுக் குப்புறத் தள்ளியும் விடுகிறார்கள். தேர்தல் செலவுகளுக்காக…
திருவள்ளுவர் விருதுக்கு மீனாட்சி சுந்தரம்; காமராசர் விருது குமரி அனந்தனுக்கு: முதல்வர் தாலின் அறிவிப்பு
திருவள்ளுவர் விருதுக்கு மீனாட்சி சுந்தரம்; காமராசர் விருது குமரி அனந்தனுக்கு: முதல்வர் தாலின் அறிவிப்பு சென்னை: 2022ஆம் ஆண்டிற்கான ஐயன் திருவள்ளுவர் விருது பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறக்கக் காரணமாக இருந்த மீனாட்சி சுந்தரத்திற்கும், பழம்பெரும் காங்கிரசு தலைவர் குமரி அனந்தனுக்குப் பெருந்தலைவர் காமராசர் விருதும் வழங்கப்படுவதாக முதல்வர் தாலின் தெரிவித்துள்ளார். தமிழக அரசால் ஒவ்வோர் ஆண்டும், திருக்குறள் நெறி பரப்பியும் திருவள்ளுவர் சிலை நிறுவுதல் முதலான திருக்குறள் தொடர்பான தொண்டுபுரிந்தும் வருபவர்களுக்கு ஐயன் திருவள்ளுவர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், பெங்களுர் தமிழ்ச்…
ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 7/9 : பெங்களூரு முத்துச்செல்வன்
(ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 6/9 தொடர்ச்சி) ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 7/9 2014 இல் பா.ச.க. பதவியேற்றபோது அதன் உறுப்பினர்கள் இந்தியில் உறுதிமொழி கூறியதையும் சிலர் சமற்கிருதத்தில் உறுதிமொழி கூறியதையும் காணமுடிந்தது. அப்போது மோடி, தான் பிற நாட்டுத் தலைவர்களுடன் உரையாடும்போதும் இந்தியிலேயே உரையாடப்போவதாக அறிவித்ததையும் அறிவோம். அரசு இயக்கும் சமூக வலைத்தளங்களில் இந்தியே இடம் பெற வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது. மத்திய அரசின் (CBSE) பள்ளிகளில் சமற்கிருதக் கிழமை(வாரம்) கொண்டாடப்பட வேண்டுமென ஆணை பிறப்பிக்கப்பட்டது….
சென்னையில் ‘தமிழ் உலகச் சந்திப்பு’க்கு அழைக்கிறது உலகத் தமிழர் பேரவை!
சென்னையில் ‘தமிழ் உலகச் சந்திப்பு’க்கு அழைக்கிறது உலகத் தமிழர் பேரவை! உமாபதி அரங்கம், அண்ணா சாலை, சென்னை, தமிழகம் புரட்டாசி 15, 2047 / 01-10-2016 சனிக்கிழமை , மாலை 5 மணி உலகு முழுக்க உள்ள தமிழர்களை இனத்தால் ஒருங்கிணைப்பது. தமிழரின் மொழி, வரலாறு, கலை, இலக்கியம், பண்பாடு போன்றவற்றை மேம்படுத்திப் பாதுகாப்பது. அரசியல், மதம், சாதிகளுக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகள். உலகளவில் நிகழக் கூடிய மனித நேயச் செயல்பாடுகளில் இணைந்து கொள்வது. சிறப்பு அழைப்பாளர்கள்: மேலை நாடுகளிலிருந்து தமிழ்த் தேசத்தவர்கள்:…