கலைச்சொல் தெளிவோம்! 77. கொண்மூ-Cirrus
77. கொண்மூ-Cirrus கொண்மூ ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூ (புறநானூறு : 35.17) நிரை செலல் நிவப்பின் கொண்மூ மயங்கி, (குறிஞ்சிப்பாட்டு : 50) மா மலை அணைந்த கொண்மூப் போலவும், (பட்டினப்பாலை : 95) இமிழ் பெயல்தலைஇய இனப்பலக் கொண்மூ (அகநானூறு : 68.15) பெய்துவறி தாகிய பொங்குசெலற் கொண்மூ (அகநானூறு : 125.9) உருவப் பல் கொண்மூக் குழீஇயவை போல (கலித்தொகை : 104.16) முதலிய அடிகளில் வருவதுபோல் 17 இடங்களில் கொண்மூ குறிக்கப்படுகிறது. முதலில் இச்சொல் பொதுவான பெயராக…
கலைச்சொல் தெளிவோம்! 68. எழிலி-nimbostratus
68. எழிலி-nimbostratus முகிலியல் (science of clouds) முகில் கூட்டங்களை முகில் (அல்லது மேகம்) என்றே நாம் வேறுபாடு அறியாமல் கூறுகிறோம். கிளெடு (cloud) எனில் முகில் என மனையறிவியலிலும், முகில், மேகம் எனப் பொறிநுட்பவியல் புவியறிவியல் ஆகிய துறைகளிலும் கொண்டல், மேகம் என வேளாணியலிலும் தெரிவிக்கப்பட்டுள்ளன. வான் மழை பெய்யும் முகில் கூட்டம் பல வகையாய் உள்ளது என 19ஆம் நூற்றாண்டில் அறிவியலாளர்கள் கண்டறிந்தனர். ஆவர்டு (Luke Howard 1772-1864) என்னும் பிரித்தானிய அறிஞர் வெவ்வேறு வகை முகில் கூட்டம்…