சங்கர மடம் வழியில் தமிழக அரசா?

   தமிழக முதல்வரின் நலத்திட்டங்களில் பாராட்டக்கூடிய ஒன்றாக அண்மையில் (ஆனி 16, 2045 / சூன் 30, 2014) திருவரங்கத்தில் திறந்த இறையன்பர்களுக்கான தங்கும் விடுதியைக் குறிப்பிடலாம். பயணச் செலவைவிடத் தங்குமிடச் செலவு மிகுதியாவதால் ஏற்படும் இடர்ப்பபாடுகளிலிலிருந்து மீள நல் வாய்ப்பாக இவ் வுறைவகம் அமைகின்றது.   இத்திட்டம் தொடங்கப்பட்டபொழுதே ஒரு சாராரிடமிருந்து எதிர்ப்பு வந்தது. இப்பொழுது அனைத்துச் சாராரின் கசப்பை இத் திட்டம் கொண்டுள்ளது.   கட்டடம் கட்டும் பொழுது, 140ஆண்டுகால வரலாறு உடைய மதுரகவி நந்தவனத்திற்குரிய நிலத்தில் கட்டப்படுவதால் அவ் வறக்கட்டளையினர்…

ஈழத்தமிழர்க்கு அனைத்து உரிமையும் வழங்குக! வேண்டா இரட்டை அளவுகோல்!

ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் உள்ள ஈழத்தமிழர்க்கான சிறப்பு முகாமில் உள்ள நந்தினி என்பவர் 12 ஆம்வகுப்பில் 1170 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மருத்துவக் கல்விக்கான தகைவுமதிப்பெண் (cut off mark) 197.50 பெற்றுள்ளார். கலந்தாய்விற்கு விண்ணப்பித்தும் இவருக்கு அழைப்பு வரவில்லை. மருத்துவக்கல்விஇயக்கக அதிகாரிகள் ”இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். ‘இலங்கை அகதிகள் முகாமில்’ வசிப்பவர்கள் மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க முடியாது” என்று தெரிவித்துள்ளனர். ஈழத்தமிழர்கள் நம்மிடம் அடைக்கலம் தேடி வந்தவர்கள். அடைக்கலமாக வந்தவர்களை நம் உயிரினும் மேலாகக் காக்க…

தலைவர் நேசமணி மணிமண்டபத்தைத் திறந்து வைத்தார் முதல்வர்

தமிழர்களின் குமுகாய, பண்பாட்டு விடுதலைக்காகவும், தமிழகத்தின் தென் எல்லையாக கன்னியாகுமரியைத்  தாய்த்தமிழகத்துடன்  நிலைத்து வைத்துக் கொள்வதற்காகவும் போராட்டங்கள் நடத்தி  ஈகம் செய்தவர் நேசமணி. இதனால் இவர்  தலைவர்(மார்சல்) நேசமணி என்றும், குமரித்தந்தை என்றும் கன்னியாகுமரி மாவட்ட மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். இப்பெருந்தகையாளரின் நினைவைப் போற்றும் வகையில், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் 48இலட்சத்து 70 ஆயிரம் உரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தலைவர் நேசமணி மணிமண்டபத்தினை, முதலமைச்சர் செல்வி செயலலிதா காணொலிக் காட்சி மூலமாக  மாசி 15, தி.பி.2045/ பிப்.27, 2014 அன்று திறந்து வைத்தார். நாகர்கோவில்…

எண்மருக்குத் தமிழக அரசின் விருதுகள் வழங்கப் பெற்றன

பண்ருட்டி ராமச்சந்திரன்  முதலான எண்மருக்குத்  தமிழக அரசின் சிறப்பு விருதுகளை முதல்வர்  செயலலிதா வழங்கினார். தமிழுக்குத் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் தமிழ்நாடு அரசால் விருதுகள் ஏற்படுத்தப்பட்டு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2014-ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது தைவான் நாட்டைச் சேர்ந்த கவிஞர் யூசி என்பவருக்கு வழங்கப்பட்டது. பிற விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 26.1.2014 அன்று தலைமைச் செயலகத்தில் முதல்– அமைச்சர் செயலலிதா  வழங்கினார்; தமிழ்நாடு அரசின் விருதுகளான தந்தை பெரியார் விருதினை-சுலோச்சனா சம்பத்துக்கும், பேரறிஞர்…

மதுக்கடைகளை மூடுமாறு முதல்வர் வீடுமுன் அறப்போர்! – நந்தினி அறிவிப்பு

“நம்மை வீழ்த்தி என்றும் அடிமைகளாக மாற்றுவதற்காகச் சூழ்ச்சிக்காரர்கள் தீட்டிய சதியால் கொண்டுவரப்பட்ட மதுக்கடைகளை முற்றிலும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற உணர்வு தமிழகம் முழுவதும் கொளுந்து விட்டு எரியத்தொடங்கிவிட்டது. இந்த நெருப்பை ஆட்சியாளர்களால் அணைத்துவிட முடியாது. அரசின் மதுக்கடைகளுக்கு முடிவுகட்டும் நேரம் நெருங்கிவிட்டது. அதற்கான இறுதிப் போர்தான் 24.12.2013 அன்று காலை 9 மணிமுதல் முதல்வர் செயலலிதா அவர்களின் போயசு தோட்டம் வீட்டின் முன்பாகத் தொடங்கவுள்ள காலவரையற்ற உண்ணா நோன்பு அறப்போர். அனைவரும் இந்த அறப்போரில் பங்கேற்க வாருங்கள்.துணிவும் வீரமும் மிக்க இளைஞர்களே! இளைய தலைமுறை…

இலங்கைக்குப் படைப்பயிற்சி – முதல்வர் எதிர்ப்பு

  இலங்கைக் கடற்படையினருக்குப் பயிற்சியளிப்பது தொடர்பான,  படைத்துறை ஒத்துழைப்புக் கொள்கையை மறு  ஆய்வு செய்யுமாறு  முதல்வர் செயலலிதா  தலைமையாளர் மன்மோகன்சிங்கிற்கு மடல் அனுப்பி உள்ளார். இந்தியக் கடற்படை சார்பில், நடத்தப்பெறும்  கடல்சார் பாதுகாப்பு தொழில் நுட்ப  நான்கு ஆண்டுகள்  பட்டப்படிப்பில் (பி.டெக்.), இலங்கைக் கடற்படை வீரர்களுக்கும்  மத்திய அரசு  இடம் அளிக்க உள்ளது.