புற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்
இதழ்களின் மேல் கருவண்டு – அபிநயா, துபாய்
இதழ்களின் மேல் கருவண்டு வீட்டினுள் விழுந்தன வளர்பிறை வெண்மதிகள் வெட்டிய நகங்கள்’. பூச்சிக்கொல்லி மருந்தையும் குடிப்போம் அயல்நாட்டுப்பானம்! கோயிலுக்குக் குந்தகமென்றால் கருவறையும் அகற்றலாம் கருப்பை! இறைவனும் இறைவியும் இணக்கத்துடன் இணைந்தார்கள் அரவாணிகள்! நாத்திகனுக்குக் கோவிலிலென்ன வேலை? அன்னதானம்! இதழ்களின் மேல் கருவண்டு மச்சம்! அறைந்தாள் முத்தம் கொடுத்தான் அப்பா! இயற்கையும் உறைகூழ் கொடுத்தது நுங்கு! கூட்டமாய் வந்து உள்ளாடை திருடினார்கள் மணல் கொள்ளை! – அபிநயா, துபாய். தரவு : முதுவை இதயத்து
இன்பவுலா இனித்தொடங்கப் போகிறது! – மெல்பேண் செயராமர்
இன்பவுலா இனித்தொடங்கப் போகிறது! கருங்கூந்தல் நிறைந்திருக்க கன்னமதில் குழிகள்விழ விளியிரண்டும் மீனெனவே வெண்மைநிற முகத்தினிலே மருண்டோடி பார்த்திருக்க வட்டநிலா வருவதுபோல் இடைஇருந்தும் தெரியாமல் அவள்வருவாள் நடைபயின்று அதைக்காண ஆவலுடன் அன்றாடம் காத்திருப்பேன் ! பலபேர்கள் வந்தாலும் பார்த்துவிடா என்பார்வை இவள்மட்டும் வந்தவுடன் எனைமீறிச் சென்றுவிடும் நினைவெல்லாம் அவளாக நிறைந்திருக்கும் காரணத்தால் அவள்வருகை மட்டுமெந்தன் அகத்தினுள்ளே புகுந்துவிடும் ! சிலவேளை அவள்பார்ப்பாள் பலவேளை நான்பார்ப்பேன் …
இனிய நந்தவனம் – மலேசியா சிறப்பிதழ்: அறிவிப்பு
சந்திரசேகர்<nandavanam10@gmail.com> முதுவை இதயத்து (MUDUVAI HIDAYATH) துபாய் 00971 50 51 96 433
உலகளாவிய இரு போட்டிகளுக்கு ஒவ்வோர் இலட்சம் உரூபாய்ப் பரிசு
ஒவ்வோர் இலட்சம் உரூபாய் இரு போட்டிகளுக்குப் பரிசு புதினம் 20 ஆவது ஆண்டில் நடத்தும் சிறுகதை, கட்டுரைப் போட்டிகள் இலங்கை மக்களிள் வாழ்வியல் பற்றிய உலகச் சிறுகதைப்போட்டி – பரிசுத்தொகை உரூபா நூறாயிரம் அமரர் சின்னத்தங்கம் இரத்தினம் நினைவாக, நெஞ்சைத்தொட்ட தாயின் நிலைையை எழுதுவோருக்கும் மொத்தப் பரிசு உரூபா நூறாயிரம். இரு போட்டிகளும் உலகளாவியது. படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: ஆசிரியர், புதினம், 38, மொபட்டு சாலை, இலண்டன் [ Editor, PUTHINAM 38, Moffat Road, London, SW 17 7EZ UK…
உலகாள்வோம் உயிர்த் தமிழால்! – குறள்நதி
உலகாள்வோம் உயிர்த் தமிழால்! பாரெங்கும் நிலைத்திட்ட பொங்குதமிழ் -அன்று சங்கம்பல கண்டிட்ட மதுரத்தமிழ் அகத்துடன் புறம்தந்த தீந்தமிழ் -என்றும் அணியாக நிலைத்திட்ட பைந்தமிழ் இன்பமுடன் நாம் தமிழைப் படித்திட்டால் -இனி உலகாள்வோம் உயிர்த்தமிழால் எந்நாளுமே ! காவியம்பல தந்திட்ட முத்தமிழ் -நமக்குள் கவிகள்பல புகுத்திட்ட பூந்தமிழ் கவிபாட இனித்திட்ட தேன்தமிழ் -நம்மையெல்லாம் கவிஞனாய் இங்குப் பாடவைத்த அருந்தமிழ் இன்பமுடன் நாம் தமிழைப் படித்திட்டால் -இனி உலகாள்வோம் உயிர்த்தமிழால் எந்நாளுமே ! தமிழ்த்தாயைத் தாலாட்டும் பத்துப்பாட்டு-எங்கும் தமிழ்மொழியை வளர்க்கின்ற எட்டுத்தொகை…
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் ! – எம். செயராம(சர்மா) … மெல்பேண்
இறைவனிடம் கையேந்துங்கள் – அவன் இல்லையென்று சொல்லுவதில்லை கருணையுடன் கேட்டுப்பாருங்கள் – அவன் காட்சிதர மறுப்பதுமில்லை ஆணவத்தை அகற்றிப்பாருங்கள் – அவன் அரவணைக்கக் கரத்தைநீட்டுவான் நாணயாமாய் நடந்துபாருங்கள் – அவன் நாளுமெங்கள் அருகில்வந்திடுவான் உணர்வுகொண்டு பாடிப்பாருங்கள் – அவன் உள்ளமதில் வந்துநின்றிடுவான் தெளிவுடனே நாளும்தேடுங்கள் –…
சிரீஇராமகிருட்டிண விசயம் – சிறுகதைப் போட்டி
சிரீஇராமகிருட்டிண மடத்தில் இருந்து வெளியாகும் சிரீஇராமகிருட்டிண விசயம் பத்திரிகை நூற்றாண்டை நோக்கி நடைபோடுகிறது. இதனை முன்னிட்டு, இந்த இதழ், சிறுகதைப் போட்டியை நடத்துகிறது. மொத்தப் பரிசுத் தொகையாக ரூ.34,000 அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த இதழின் சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பகவான் சிரீஇராமகிருட்டிணர், அன்னை சிரீசாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் மற்றும் எண்ணற்ற மகான்கள், உலகளாவிய மனிதநேய அருளாளர்களின் வரலாறுகள், அவர்களது அறிவுரைகள் மற்றும் நமது சாத்திரங்களின் அடிப்படையில் கரு உண்மை; உரு கற்பனை என்ற வடிவில் சிரீஇராமகிருட்டிண விசயத்தில்…
கவிஞர் மு.முருகேசிற்கு இரண்டு இலக்கிய விருதுகள்
வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு. இவர், புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகருணத்தில் பிறந்தவர். இவருக்கு, புதுச்சேரியில் நடைபெற்ற விழாவில் (மார்ச்சு 2014)கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிதை விருது வழங்கினார். இவ்விழாவிற்கு, தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பன் தலைமையேற்றார். விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் தி.அமிர்தகணேசன் அனைவரையும் வரவேற்றார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் முதன்மைச் சீடர்களில் ஒருவரும், சென்னை புதுக்கல்லூரி மேனாள் தமிழ்ப் பேராசிரியரும், தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருமான கவிஞர் ஈரோடு தமிழன்பனின் 80-ஆவது பிறந்த நாள் விழா புதுச்சேரியிலுள்ள விவேகானந்தா மேனிலைப்பள்ளியில்…