பன்னாட்டுக் கவிதைப் போட்டி

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி தேசியக் கல்வி அறக்கட்டளை  நடத்தும் மாணவ, மாணவியருக்கான மாபெரும் விடுதலைநாள் கவிதைப் போட்டி   தலைப்புகள் தன்னம்பிக்கை மனித நேயம் சிறந்த கவிதைகளுக்கு, முதல் மூன்று பரிசுகளும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்படும். கலந்து கொள்ளும் அனைவருக்கும் மி-சான்றிதழ் வழங்கப்படும் மாணவர்களுக்கான மாபெரும் இணையவழிக் கவிதைக் களம் கலந்துகொள்ள விரும்பும் பள்ளி,கல்லூரி மாணவர்கள் பெயரைப் பதிவு செய்யவும். கவிதைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : ஆடி 31, 2051  15.08.2020 குறிப்பு : கவிதை சொந்தப் படைப்பாக இருக்க…

அபுதாபியில் ஓட்டப் போட்டியில் முதல் இடம் பெற்ற தமிழர் செய்யது அலி

அபுதாபி : அபுதாபியில்  ஆக்குடிவேட்டு நிறுவனத்தின் ஓட்டப்போட்டி கடந்த  தை 27, 2020 / 10.02.2020 அன்று நடைபெற்றது.  இந்த ஓட்டப்போட்டியில் தமிழகத்தின் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த செய்யது அலி என்ற இளைஞர் முதல் இடத்தை பெற்றார்.  இவர் 5 புதுக்கல்(கிலோ) தொலைவுப் போட்டியில் முதல் இடத்தைப் பெற்றார்.  அவருக்கு விளையாட்டுக் குழு அதிகாரி பதக்கம் வழங்கிச் சிறப்பித்தார்.   இந்த ஓட்டப் போட்டியில் 300-க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.  முதல் இடத்தை பெற்ற செய்யது அலிக்கு பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள்  வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  செய்தி – முதுவை…

ஆர்சாவில் தமிழக இளைஞருக்கு விருது

ஆர்சாவில் தமிழக இளைஞர் சே.ஆசிக்கு அகமது விருது பெற்றார்! ஆர்சா இந்தியச் சங்கத்தில் நடந்த ஓணம் பண்டிகை சிறப்பு நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணத்தைச் சேர்ந்த இளைஞர் சே.ஆசிக்கு அகமது பொது நலச் சேவைக்கான விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். சே.ஆசிக்கு அகமது திருச்சி சமால் முகம்மது கல்லூரியில் இளநிலை வேதியியல் பட்டம் பயின்றவர். தற்போது சார்சாவில் உள்ள குவைத்து மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது பணியின் ஒரு பகுதியாக எதிர்பாராத நிலையில் மரணமடைபவர்களின் குடும்பத்தினருடன் இணைந்து பணியாற்றி சார்சாவில் நல்லடக்கம் செய்யவோ சொந்த…

வாழ்க்கை வாழ்வதற்கே! – ஃபாத்திமா அமீது

வாழ்க்கை வாழ்வதற்கே!   துளைக்கப் பட்டோமென்று துவளவில்லை மூங்கில்கள்! மாலையில் வீழ்வோமென்று மலராமல் இல்லைமலர்கள்!   வீழ்ந்து விட்டோமென்று விருட்சம் ஆகாமலில்லை விதைகள்! சிதைக்கப் பட்டோமென்று சிலைகள் ஆகாமலில்லை பாறைகள்!   சேகரிக்கும்தேன் தனக்கில்லையானாலும் சேர்க்காமல் இருப்பதில்லை தேனீக்கள்! விளைந்ததும் வெட்டப்படுவோம் என்றாலும் விளையாமல் இருப்பதில்லை பயிர்கள்!   தோல்விகள், சோதனைகள், ஏமாற்றங்கள், தடங்கல்கள், எதுவாகிலும் தன்னம்பிக்கை கொள்!   மாற்றம்வரும்  மகிழ்ச்சி தரும்,  வழிகள்பல திறக்கும், வாழ்வோம் சிறப்போடு, வாழ்க்கை வாழ்வதற்கே!   காரைக்குடி ஃபாத்திமா அமீது  சார்சா.  தரவு: முதுவை இதாயத்து…

சார்சாவில் ‘என்னைத் தேடி’ நூல் அறிமுக நிகழ்ச்சி

சார்சாவில் ‘என்னைத் தேடி’ நூல் அறிமுக நிகழ்ச்சி   சார்சா இனிய திசைகள் வாசகர் வட்டத்தின் சார்பில் ‘என்னைத் தேடி’ நூல் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத் தலைவர் திருச்சி சாதிக்கு அலி தலைமை வகித்தார். ’என்னைத் தேடி’ என்ற சிறுகதை நூலை இனிய திசைகள் ஆசிரியர் பேராசிரியர் சே.மு.முகமதலி வெளியிட முதல் படியைச் சாதிக்கு அலி பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் இந்த நூலை நசீமா இரசாக்கு திறம்பட வடிவமைத்துள்ளார். அவர், “தியான வாழ்வின் மூலம் வாழ்வில் வசந்தத்தைக்…

துபாய் ஈமான் அமைப்பு : இரத்தத்தான முகாம்

துபாய் ஈமான் அமைப்பு   இரத்தத்தான முகாம் புரட்டாசி 26, 2049 வெள்ளிக்கிழமை  அட்டோபர் 12, 2018 காலை  10.00 முதல் 2.00  வரை திறன் மண்டல(talent zone)நிறுவனம்,  என்.எம்.சி.  மருத்துவமனை பின்புறம் துபாய் அல் நக்தா பகுதி இந்த முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் அமீரக அடையாள அட்டையுடன் வரவேண்டும்.  தொடர்பு எண்கள் 050 51 96 433 / 055 84 22 977 / 055 405 88 95  

துபாயில் உணவின்றித் தவித்து வரும் தமிழகத் தொழிலாளர்கள்

துபாயில் உணவின்றித் தவித்து வரும் தமிழகத் தொழிலாளர்கள்  ஏறத்தாழ நூறாயிரம் உரூபாய் வரை பணத்தை முகவர்களிடம் செலுத்தி துபாயில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வேலைக்குப் பின்வருவோர் வந்தனர். மாரிமுத்து த/பெ காத்தமுத்து – பட்டுக்கோட்டை அருகில் உள்ள புதுப்பட்டிணம் ஆதம் பாவா த/பெ கிருது ஒலி – திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுரண்டை இருவரும் தாங்கள் பார்த்து வந்த நிறுவனத்தில் சம்பளம் சரிவர வழங்காததால் அந்த நிறுவனத்தை விட்டு வெளியில் வந்து விட்டனர். தற்போது தங்க இடமும், உணவும் இல்லாமல்  அல்லல்பட்டு வருகின்றனர்.  இதனால்…

ஓமானில் பாரதி விழா

ஓமானில் பாரதி விழா கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்! என்ற பாரதியின்  கனவை, வள்ளுவர் நிறைவேற்ற பராசக்தி அருள் புரிந்தாள் என்றால், உங்களால் நம்ப முடியுமா?  ஆம்! கடந்த புரட்டாசி 4, 2049  (20-9-2018) வியாழன் மாலை  ‘பாரதி யார்?’ எனும் மேடை நாடகம்,  மசுகட்டு மாமன்னர் மாட்சிமை தங்கிய சுல்தான் கபூசு பின் செய்யது அவர்களின் அருளோடும், வாழ்த்தோடும், அனைத்து மக்களின் ஆதரவோடும், மசுகட்டு நகரில் கோலாகலமாக அரங்கேறியது! எசு.பி.படைப்பாளர்(SB Creations) இயக்குநர் இராமன் குழுவினர் இசைக்கவி இரமணனுடன் னமும்,…

மாணாக்கர் நுழைவுத் தேர்விற்கான சிறப்புக்கருத்தரங்கம், துபாய்

கார்த்திகை 22, 2048  வெள்ளிக்கிழமை  08.12.2017 மாலை 5 மணி நோவோடெல் உறைவகம்   துபாயில் மாணவ, மாணவியர் நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற உதவும் சிறப்புக் கருத்தரங்கம்   இந்த கருத்தரங்கில் பங்கேற்க விரும்புபவர்கள் 04 397 7777 / 058 8 488127 / 0588 488 128 / 0588 488 129 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் cc.resonance@stree.ae என்ற மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம். 5-ஆம் வகுப்பு முதல் படித்து வரும்…

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் இரத்தத்தான முகாம்

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் இரத்தத்தான முகாம் துபாய் : துபாய் ஈமான் அமைப்பு  ஐப்பசி 17, 2048 / 03.11.2017  / வெள்ளிக்கிழமை இரத்தத்தான முகாம் ஒன்றை நடத்துகிறது. இந்த முகாம் காலை 9 மணி முதல்நண்பகல்  1.30 மணி வரை நடைபெறும். துபாய் அல் நக்தா பகுதியில் அமைந்துள்ள என்.எம்.சி.  மருத்துவமனை பின்புறம் உள்ள திறன் மண்டல(talent zone)நிறுவனத்தில் நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் அமீரக அடையாள அட்டையைக் கொண்டு வர வேண்டும். முகாமில் கலந்து கொள்ள…

துபாயில் பேச்சாளர் பயிற்சி முகாம்

துபாயில் பேச்சாளர் பயிற்சி முகாம்   துபாய் ஈமான்  பண்பாட்டு மையத்தின் சார்பில் பேச்சாளர் பயிற்சி முகாம் புரட்டாசி 19, 2048 / 05.10.2017 வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு மக்குதூம் பாலம் அருகில் உள்ள அரேபியா  ஓல்டிங்குசு தலைமையகத்தில் (சலாமியா  கோபுரம்)  நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பயிற்சியாளர் குணா கலந்து கொண்டு பயிற்சியை வழங்க இருக்கிறார்.    பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 050 51 96 433 / 055 800 7909 / 052 777 8341 ஆகிய…

மூலிகை பேசுகிறது : செம்பருத்தி – ப.கண்ணன்சேகர்

மூலிகை பேசுகிறது : செம்பருத்தி   கிழக்காசிய நாடுகளில் தழைத்திடும் தாவரம் கிடைத்தோர்க்கு நலமெனக் கொடுத்திடும் ஓர்வரம் அழகெனப் பூத்திடும் அருமருந்து செம்பருத்தி ஆரோக்கியம் தந்திடும் அன்றாடம் நிலைநிறுத்தி அழகான கூந்தலுக்கு அற்புத மருந்தாகும் அன்புடன் உபசரிக்கும் ஆதிவாசி விருந்தாகும் விழாக்கால வேள்வியிலும் வைத்திடும் பூவாகும் விடியாத நோய்களுக்கும் வெளிச்சமென தீர்வாகும்   விதையில்லாப் பதியத்தால் விளைந்திடும் செடியாகும் வேர்இலை பூக்களால் வரும்நோயும் பொடியாகும் சிதையாமல் பூவிதழை சுடும்பாலில் நனைத்திடு சிவந்திடும் பாலினை  அன்றாடம் அருந்திடு பதைத்திடும் பதற்றத்தைப் பக்குவமாய்க் குறைத்திடும் பலமூட்டி  இரத்தத்தை  …

1 2 5