கி.ஆ.பெ.விசுவநாதம் & சி.இலக்குவனார் பிறந்த நாள் விழா
தமிழியக்கம்வே.தொ.நு.(விஐடி)பல்கலைக்கழகம்இணைந்து வழங்கும்முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் 124ஆவது &செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 114 ஆவதுபிறந்த நாள் விழா கார்த்திகை 1, 2053 / வியாழன் / 17.11.2022 காலை 10.00 மணிவே.தொ.நு.(விஐடி)பல்கலைக்கழகம் சென்னை வளாகம்வண்டலூர் கேளம்பாக்கம் சாலை, சென்னை 600 127 தலைமை: கல்விக்கோ கோ.விசுவநாதன்சிறப்புரை: முனைவர் மறைமலை இலக்குவனார்நெகிழ்வுரை: திரு சிறீசாந்து கருனோசு
கா. சுப்பிரமணிய(ப் பிள்ளை) – கிஆ.பெ.
கா. சுப்பிரமணியப் பிள்ளை பேராசிரியர் கா. சுப்பிரமணியப் பிள்ளை எம்.ஏ. எம்.எல். அவர்களைத் தமிழ் உலகம் நன்கறியும். தமிழறிஞர்கள் பலரும் இவரைத் தமிழ்க் காசு என்று கூறுவதுண்டு. அவர் முதன்முதல் எம்.எல். பட்டம் பெற்றதால், திருநெல்வேலிச் சீமையில் உள்ளவர்கள் அவரை ‘எம்.எல். பிள்ளை’ என்றே கூறுவர். தமிழில் ஆழ்ந்த புலமையும் அழுத்தமான சைவப் பற்றும் உடையவர். இதனால் சென்னைப் பகுதியில் உள்ளவர்கள் அவரைத் ‘தமிழச் சைவர்‘ எனக் குறிப்பிடுவர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராயிருந்து புலவர் பெருமக்கள் பலரை உண்டாக்கித் தமிழகத்திற்கு…
நான் கண்ட வ. உ. சி. – கி.ஆ.பெ.2 /2
(நான் கண்ட வ. உ. சி. – கி.ஆ.பெ. 1 /2 தொடர்ச்சி) நான் கண்ட வ. உ. சி. வெள்ளையர் கப்பல்கள் துரத்துக்குடியிலிருந்து கொழும்புக்குச் செல்லும் கட்டணத்தை உயர்த்தித் தமிழ் நாட்டு வணிகத்திற்கே கேடு விளைவித்தன. இதனை யறிந்த பிள்ளை அவர்கள், அவர்களோடு போராடியும் நியாயத்திற்கு இணங்க மறுத்ததனால், அவர்களோடு போட்டியிட்டுத் தானே ஒரு கப்பலை ஓட்டித் தமிழ் நாட்டு வணிகத்திற்குத் தொண்டு செய்தார்கள். அவர் ஒரு தொழிலாளர் தலைவர். தொழிலாளர் போக்கைத் தொடர்ந்து போகும் தலைவராயில்லாமல் தொழிலாளரைத் தன் போக்கில் நடத்திச்…
நான் கண்ட வ. உ. சி. – கி.ஆ.பெ. 1/2
நான் கண்ட வ. உ. சி. 1/2 திருவாளர் வ.உ. சிதம்பரம்(பிள்ளை) அவர்கள் தமிழ் நாட்டுத்தேசபக்தர்களுள் ஒருவர். தேசபக்தர் என்றாலே திரு.பிள்ளை அவர்களைத்தான் குறிக்கும். நாட்டின் மீது அவருக்குள்ள பற்று உள்ளபடியே அளவைக் கடந்தது எனக் கூறலாம். பெரியார் காந்தியடிகளுக்கு முன்பே திரு.பிள்ளை இந்தியாவில் தேசபக்தராக விளங்கியவர். (உ)லோக மான்ய பால கங்காதர திலகர் அவர்களின் அரசியல் மாணவர் ஆவர். காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவில் தொண்டு செய்திருந்த காலத்திலேயே திரு.பிள்ளை அவர்கள் இந்தியாவில் தேசத்தொண்டு செய்தவர்கள். பலமுறை சிறை சென்றவர்கள். அவர் செய்த குற்ற…
தமிழ்த் தென்றல் – 2/2 : கி.ஆ.பெ.
தமிழ்த் தென்றல் 2/2 பெரியாரைக் கொலை செய்யும்படி மறைமலையடிகள் தூண்டினார் என்று அடிகளார்மீது வழக்குத் தொடரப் பட்டிருந்தது. அதைக் கண்டு பெரிதும் கவலைப்பட்டுப் பல்லாவரத்துக்கு என்னை அழைத்துக்கொண்டு போய் மறைமலையடிகளிடம் ஒரு கடிதத்தை வாங்கச் செய்து அதைப் பெரியாரிடம் காட்டி, அவ்வழக்கைத் திரும்பப்பெறச் செய்தற்கு முதற்காரணமாயிருந்து என்னைத் தூண்டியவரும் திரு, வி. க. அவர்களே யாவார். திரு.வி.க. அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள தன்னுடைய வரலாற்று நூலில் என்னைப்பற்றி நீண்ட தொரு கட்டுரை எழுதியிருக்கிறார்கள். அது அவர் உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டுவதுபோல்…
தமிழ்த் தென்றல் – கி.ஆ.பெ. 1/2
தமிழ்த் தென்றல் தமிழ்த் தென்றல் திரு. வி. க. அவர்கள் தமிழ்த். தொண்டு, தொழில் தொண்டு, சமயத்தொண்டு, அரசியல் தொண்டு, சமூகத் தொண்டு ஆகிய ஐவகைத் தொண்டும் தன்னலங் கருதாது செய்து வந்த தமிழகத்தின் தனிப் பெருந்தலைவர். பிற்காலத்தில் இத்தனையிலிருந்தும் ஒய்வு எடுத்துக் கொண்டு, இராயப்பேட்டையிலுள்ள அச்சகத்தில் தன் தமையனார் உலகநாத(முதலியா)ர் அவர்களுடன் இருந்து, எழுத்துப்பணி புரிந்தபொழுது நான் அடிக்கடி அவர்களைச் சந்தித்துப் பேசி மகிழ்வதுண்டு. மாறுபட்ட கட்சியினரிடத்தும், மாறுபட்ட கொள் கையுடையவர்களிடத்தும் சிறிதும் வெறுப்படையாமல் மனம் திறந்து பேசி மகிழ்ச்சியடையும் பெருங்குணத்தை, அவரிடம்…
மறைமலையடிகள் 5/5 – கி.ஆ.பெ.
(மறைமலையடிகள் 4/5 – கி.ஆ.பெ . : தொடர்ச்சி) மறைமலையடிகள் 5/5 ‘நூறாண்டு வாழ்வது எப்படி?’ என்று ஒரு நூலை எழுதி வெளியிட்ட அடிகளார் அவர்கள் 75 ஆண்டுகளில் இயற்கை எய்தினார்கள். அவர்களது உடலை எரியூட்ட ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. அவரது உடலை எரியூட்டாமல் அடக்கம் செய்து ஒரு நினைவுச் சின்னத்தை அங்கு எழுப்ப வேண்டும் என்று அவருடைய மக்கள் மாணிக்கவாசகத்திடமும், திருநாவுக்கரசிடமும் தெரிவித்தேன். அதைக் கேட்டு அவர்கள் வருந்தி “‘அடிகளாரே தமது உடலைப் புதைக்காமல் எரியூட்ட வேண்டுமென்று கட்டளையிட்டிருக் கிறார்கள் அண்ணா” என்று…