பாவேந்தரும் பொதுவுடைமையும் 4/4 – முனைவர் நா.இளங்கோ
(பாவேந்தரும் பொதுவுடைமையும் 3/4 – தொடர்ச்சி) பாவேந்தரும் பொதுவுடைமையும் 4/4 1960க்குப் பிறகு பாவேந்தர் நேரடி அரசியலிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்குகிறார். இந்தக் காலக்கட்டங்களில் பழைய சிலப்பதிகாரம், மணிமேகலைக் காப்பியங்களைக் ‘கண்ணகி புரட்சிக் காப்பியம்’ என்ற பெயரிலும் ‘மணிமேகலை வெண்பா’ என்ற பெயரிலும் மறு ஆக்கம் செய்கின்றார். அரசியலில் இருந்து ஒதுங்கும் முயற்சியே இவ்வகை மறு ஆக்கங்கள். திரைப்படம் எடுக்கும் முயற்சியில் முழுதாக ஈடுபட்டுத் தோல்வியடைகின்றார். அரசியலை முற்ற முழுதாக வெறுக்கத் தொடங்குகின்றார். இந்நாள் இருக்கும் கட்சிகள் தாமும் கட்சித் தலைவர் என்று…
பாவேந்தரும் பொதுவுடைமையும் 3/4 – முனைவர் நா.இளங்கோ
(பாவேந்தரும் பொதுவுடைமையும் 2/4 தொடர்ச்சி) பாவேந்தரும் பொதுவுடைமையும் 3/4 1940 தொடங்கிப் பாவேந்தர் தம்மை முழுமையான திராவிட இயக்கக் கவிஞராக, தமிழ்த் தேசியம் நாடும் கவிஞராக, தனித் தமிழ்நாடு அல்லது தனித் திராவிடநாடு கோரும் கவிஞராகத் தம்மை அடையாளப் படுத்திக்கொண்டார். ஆனாலும் தாம் சார்ந்த தன்மதிப்பு(சுயமரியாதை) இயக்கம் காண விரும்பும் குமுகாயமாக அவர் சமத்துவக் குமுகாயத்தைக் காட்டத் தவறியதே இல்லை. பாவேந்தர் பாடல்கள் வழி ஊற்றம் பெற்ற திராவிட இயக்கத்தினர் அனைவரும் பொதுவுடைமைச் சமூகமே, திராவிட இயக்கத்தின் குறிக்கோள் என்பதாக உணர்ந்தார்கள். ஆனால்…
பாவேந்தரும் பொதுவுடைமையும் 2/4 – முனைவர் நா.இளங்கோ
(பாவேந்தரும் பொதுவுடைமையும் 1/4 தொடர்ச்சி) பாவேந்தரும் பொதுவுடைமையும் 2/4 மானிடத்தின் மகத்துவம் பேசும் கவிஞன், சமத்துவத்தின் தேவையை, உயர்வைப் பேசும் கவிஞன், உழைக்கும் மக்களின் உன்னதத்தைப் பேசும் கவிஞன் என்பதோடு நில்லாமல், புதியதோர் உலகம் செய்வோம்- கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் பொதுவுடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம் புனிதமோடு அதை எங்கள் உயிரென்று காப்போம் என்று புதிய உலகம் அதுவும் பொதுவுடைமை உலகம் அமைக்க விரும்புகிறார் பாவேந்தர். மேலும் உலகப்பன் பாடலில் ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர் உதையப்பராகி விட்டால் ஓர் நொடிக்குள்…
பாவேந்தரும் பொதுவுடைமையும் 1/4 – முனைவர் நா.இளங்கோ
பாவேந்தரும் பொதுவுடைமையும் 1/4 உலகம் உண்ண உண், உடுக்க உடுப்பாய் என்று உலகு தழுவிய பார்வையால் மானிட சமுத்திரம் நானென்று கூவிய புதுவைக் குயில் பாவேந்தர் பாரதிதாசன் இருபதாம் நூற்றாண்டு தந்த பாவலர்களில் தலைசிறந்தவர். பாவேந்தரின் கவிதை வீச்சு தனித்தன்மை வாய்ந்தது. செம்மாந்த மொழிநடையும் செழுமையுடைய சொல்லழகும் பொருளழகும் ஒரு சேர இணைந்து அவரின் பாடல்களுக்குத் தனியழகையும் மெருகையும் ஊட்டவல்லன. தமிழ்க் கவிஞர்களில் மட்டுமில்லாது இந்தியக் கவிஞர்களிலும் கூட வேறு எவரோடும் இணைவைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அவருடைய கவிதைகள் தமிழ், தமிழர்…
ஆறு தலைமுறையினரின்அரிய சந்திப்பு, தாகூர் கலைக்கல்லூரி, தமிழ்த்துறை
சித்திரை 19, 2047 / மே 02, 2016 காலை 10.00 புதுச்சேரி தாகூர் கலைக் கல்லூரித் தமிழ்த்துறையில் ஆறு தலைமுறைத் தமிழ்ப் பேராசிரியர்கள் சந்திக்கும் அரிய கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் புதுச்சேரி அரசுக் கலைக் கல்லூரிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள தமிழ்ப் பேராசிரியர்கள் அனைவரும் ஒன்றுகூடி இன்றைய இளம் தலைமுறைத் தமிழ்ப் பேராசிரியர்களோடு கலந்துரையாடும் நிகழ்வு இது. இந்நிகழ்வில் ஆறு தலைமுறை ஆசிரிய மாணவப் பரம்பரைப் பேராசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு- தலைமை:…
க.இராமகிருட்டிணன் – பாஞ்சாலி அம்மாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு
மார்கழி 01, 2046 / திசம்பர் 17, 2015 முற்பகல் 10.00 புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் நூல் வெளியீடு கருத்தரங்கம் புதுவை முரசு இதழின் இலக்கியப் பணிகள்