தகுதியற்றனவற்றையும் ஏற்கும் நீதிமன்றம் – செம்மொழி வழக்கில் தீர்ப்பு இலக்குவனார் திருவள்ளுவன்

தகுதியற்றனவற்றையும் ஏற்கும் நீதிமன்றம்  – செம்மொழி வழக்கில் தீர்ப்பு தமிழுக்குக்  குரல் கொடுக்கும் காந்தி தனித்து விடப்படலாமா?     உலகில் உயர்தனிச்செம்மொழி என்பது தமிழ் மட்டும்தான்! தமிழுக்கான செம்மொழி அறிந்தேற்பு வழங்கியதுடன் அதற்கு முன்னர், அதிகார ஆணையின்றியே அரசின் சலுகைகளைத் துய்த்து வந்த சமற்கிருதத்திற்கும் செம்மொழித் தகுதியேற்பை இந்திய அரசு அளித்தது.  விழா நிகழ்ச்சிகளில் இனிப்பு வழங்கினால், “எனக்கு எனக்கு” என்று குழந்தைகள் ஆளாளுக்குக் கை நீட்டுவதுபோல் பிற மொழியினர் கை நீட்டியுள்ளனர்.  செம்மொழித் தகுதியேற்பு என்பது சிறுவர் சிறுமியருக்கு இனிப்பு வழங்குவது…

தகவல் அறியும் உரிமைச்சட்டமும் தள்ளாடும் அதிகாரிகளும் 6 – வைகை அனீசு

(ஆனி 27,2046 / சூலை 12, 2015 தொடர்ச்சி) 6 சட்டஅறிவு   இல்லாத பொதுத்தகவல் அலுவலர்கள்   தகவல் உரிமைச்சட்டத்தில் அதிகாரமிக்கவர் பொதுத்தகவல் அலுவலர். பொதுத்தகவல் அலுவலருக்குத் தகவல் உரிமை சட்டத்தைப்பற்றிய சட்ட விழிப்புணர்வும் சட்டஞானமும் தெரியவில்லை. தஞ்சாவூர் வணிக வரித்துறை அலுவலகத்தில் கடந்த 6.6.2015 அன்று வணிக வரித்துறையில் பணிபுரியும் அருள் என்பவருடைய அலுவல் தொடர்பாகத் தகவல்களை வேண்டினோம். அதற்கு வணிகவரித்துறை அலுவலகத்தில் இருந்து ந.க.எண்3844-2015-ஆ6 என்ற மறுமொழி மடல் வந்தது.   அம்மடலில், “பிரிவு (8) ஒ. [8.j.] இன்படித் திரு.அருள்…