இனமானமும், மொழிமானமும் இலக்குவனாரின் குருதியோட்டம் – மயிலாடன்

இனமானமும், மொழிமானமும் இலக்குவனாரின் குருதியோட்டம்   தந்தை பெரியார் மறைவிற்கு 21 நாள்களுக்கு முன்பாகவே கண் மூடினார் நமது பேராசிரியர் சி.இலக்குவனார் (மறைவு 3.9.1973) அவரைப்பற்றி எவ்வளவோ சொல்லலாம், எழுதலாம். திராவிடர் கழகத்திலிருந்து தி.மு.க. பிரிந்த அந்தக் காலகட்டத்தில் தந்தை பெரியார் அவர் களுக்குத் துணையாக இருந்து, தந்தை பெரியார் சுற்றுப் பயணம் முழுவதும் அவருடன் அகலாது தொடர்ந்து பயணித்து, தந்தை பெரியார் உரையாற்றுவதற்கு முன்னதாகப் பேராசிரியர் இலக்குவனாரின் உரை அமைந்துவிடும். இது எத்தகைய பெரும் பேறு அந்தப் பெருமகனாருக்கு. தமிழ்ப் புலமை, ஆங்கிலப்…

மொழிமானக் காவலர் தமிழமல்லன் – மு.பாலசுப்பிரமணியன்

  மொழிமானக் காவலர் தமிழமல்லன் தமிழுணர்வு குன்றாத தகையாளர் தன்மானம் நின்றோங்கும் நெறியாளர் உமியாக அயற்சொற்கள் கலப்பதையே உரக்க எதிர்க்கின்ற வீராளர் மல்லனுடை பாக்கள் என்றால் அனல்பறக்கும் நல்லொழுக்கம் கருத்துவளம் அணிவகுக்கும் கன்னலென தேன்பாக்கள் கரும்பினிக்கும் நன்னெறியில் பிறழ்வோரை சுட்டெரிக்கும் மின்சாரம் பாய்ந்ததுபோல் வீச்சிருக்கும் தென்னிலங்கை மண்பெருமை மூச்சிருக்கும் மண்மானம் மொழிமானம் காத்திருக்கும் எதுகையும் மோனையும் எழுந்துநிற்கும் எழுதென்று உவமையெலாம் ஏங்கிநிற்கும் தொடைவந்து தோள்சாய்ந்து காத்திருக்கும் தோதான இடம்கேட்டு பார்த்திருக்கும் படையெடுத்துச் சொல்லெலாம் படியிருக்கும் மடைதிறந்த வெள்ளம்போல் கவிசிறக்கும் பாவேந்தர் புகழ்பரப்பும் பண்பாளர் பாடாற்றி…