கருப்புப் பண மீட்பா? கருப்புப் பணக் காப்பா?- கி. வெங்கடராமன்
கருப்புப் பண மீட்பா? கருப்புப் பணக் காப்பா? தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கடராமன் அறிக்கை! இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி ஐப்பசி 23, 2047 / 08.11.2016 நள்ளிரவு முதல் 500 உரூபாய், 1000 உரூபாய்த்தாள்கள் செல்லா என்று திடீர் அறிவிப்பு வெளியிட்டார். கருப்புப் பணத்தையும், கள்ள உரூபாய்த்தாள்களையும் செயல்படாமல் முடக்குவதற்கே இந்த அறிவிப்பு என்று அவர் காரணம் கூறினார். பாக்கித்தானிலிருந்து பயங்கரவாதிகள் எல்லை கடந்து கள்ள உரூபாய்த்தாள்களைப் புழக்கத்தில்விட்டு, இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களுக்கு…
சட்டமன்றத்தில் அம்மணச் சாமியாரை அமர வைத்து ஆசி பெறுவோர் – கி.வீரமணி கண்டனம்
அம்மணச் சாமியாரைச் சட்டமன்றத்தில் அமர வைத்து ஆசி பெறுவோர் – வெளிநாட்டுப் பெண்களின் உடையைப்பற்றி பேசலாமா? அமைச்சர்களை ஆர்.எசு.எசு.எசு. ஊதுகுழலாக்காமல் நாட்டு வளர்ச்சியின் பக்கம் தலைமையாளர்(தலைமையமைச்சர்) திரும்பச் செய்யட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை வெளிநாட்டிலிருந்து சுற்றுலா வரும் பெண்கள் எத்தகைய உடை அணிந்து வரவேண்டும் என்று பா.ச.க. அமைச்சர் தலையிட்டுப் பேசுவது சரியா? அம்மணச் சாமியாரை அரியானா சட்டப் பேரவையில் அமர்த்தி ஆசி பெற்றுக் கொள்ளும் பா.ச.க., வெளிநாட்டுப் பெண்கள் குட்டைப் பாவாடை அணிவது குறித்தெல்லாம் பேசலாமா? சக அமைச்சர்கள்…
செயா அம்மையாருக்கு நன்றியும் வினாவும் : சொல்வீர்கள்! செய்வீர்களா? – செந்தமிழினி பிரபாகரன்
செயா அம்மையாருக்கு நன்றியும் வினாவும் சொல்வீர்கள்! செய்வீர்களா? செந்தமிழினி பிரபாகரன் மோடியை சந்தித்த செயா அம்மையார் தமிழ் நாட்டில் அகதிகளாக உள்ள ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வலியுறுத்தி உள்ளமைக்கு அம்மாவுக்கு ஈழத் தமிழர்களின் மனமார்ந்த நன்றி. அதே போல் ஈழத்தில் அப்பாவி ஈழத் தமிழர்களை படுகொலை செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனக் கேட்டமைக்கும் நன்றி. சந்தித்தீர்கள் மோடியை. கோரிக்கைகளை வலியுறுத்தினீர்கள். அதற்கு மேல்?? வழமை போல் எதுவும் நடக்காது என்பது எமக்கு நன்கு தெரியும். உங்களுக்கும் தெரியும் என…
இலங்கைத் தேர்தல் – வீழ்ந்தான் பக்சே! தோற்றது பா.ச.க.
இலங்கைத் தேர்தல் – வீழ்ந்தான் பக்சே! தோற்றது பா.ச.க. இலங்கை அதிபர் தேர்தலில் கொலைகார இராசபக்சே மண்ணைக் கவ்வினான். கோவில் கோவிலாகச் சுற்றியும் கடவுள் கருணை காட்டவில்லை. கணியத்தை – சோதிடத்தை – நம்பி ஈராண்டுக்கு முன்பே தேர்தலை நடத்தித் தன் தலையில் தானே மண்ணை வாரிகப் போட்டுக் கொண்டான்! மக்களை நம்பாமல் சோதிடத்தை நம்பினால் இதுதான் கதி என மக்கள் காட்டிவிட்டனர். அவனுக்கு வாழ்த்து தெரிவித்ததன் மூலம் அரசியல் கணிப்பின்மையை வெளிப்படுத்திய பாசக அரசின் தலைவர்…
மோடி சொல்லிவிட்டார் – கட்டியிருக்கும் கோவணத்தையும் உருவிப்போட்டுஇருங்கள்!
“ஒருங்கிணைந்த இலங்கையில் போதிய அதிகாரங்களுடன் தமிழர்கள் வாழ வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பமாக உள்ள நிலையில், நாட்டைப் பிரித்துத் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நாங்கள் கோர முடியாது.” இது எப்படி இருக்கிறது? சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் சம்பந்தன் தெரிவித்த கருத்து இது உங்கள் எல்லோருக்கும் இதில் உடன்பாடு தானா? இப்போது விளங்குகிறதா ஏன் ஈழத்தின் உணர்ச்சிக் கவிஞர் அண்ணன் காசி ஆனந்தன் அவர்கள் ”சுத்த வீணான மனுசர் சம்பந்தன்” என்று ஒருமுறை வெளிப்படையாக மதிப்பிட்டார் என்று? இந்தியா சொல்லும்,” கட்டியிருக்கிற கோவணத்தையும் உருவிப்…
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே! -முனைவர் மறைமலை இலக்குவனார்
’இந்திய இறையாண்மை’ இதுதான் துன்பக் கடலில் தத்தளிக்கும் இந்திய மீனவர்கள் வலைவீசிப் பிடிக்கும் சிங்களப் படையினர் பிடிபட்டால் சிறைவாசம் தப்பிக்கமுயன்றால் துப்பாக்கிச் சூடு வேடிக்கை பார்ப்பதற்குக் கடலோரத்தில் காவற்படை! எதிர்த்துப் பேசாதீர்கள் ’இந்திய இறையாண்மை’ இதுதான் என்று புரிந்துகொள்ளுங்கள்! அரசியற்சட்ட அமைப்பில் அறிந்தேற்புப் பெற்றவை அட்டவணைப் படுத்தப்பட்டவை இருபத்துமூன்று மொழிகள்! அந்த வாய்ப்பும் அற்றவை பல நூறுமொழிகள்! ஆட்சி புரியும் நல்வாய்ப்பு ஒரே ஒரு மொழிக்குத்தான்! தொன்மையான மொழிகள் இரண்டே இரண்டு கொண்டாடுவதற்குச் சமற்கிருதம் திண்டாடுவதற்குத் தமிழ்! எதிர்த்துப் பேசாதீர்கள் ’இந்திய இறையாண்மை’ இதுதான்…
மாண்புமிகு தமிழக முதல்வரை ‘அகரமுதல’ பாராட்டுகிறது.
மாநில முதல்வர், தலைமையாளரைச் சந்திப்பதும் மாநிலநலன்களுக்கான வேண்டுகைகளையும் நிதித் தேவைகளையும் தெரிவிப்பதும் வாதாடிப் பெறுவதும் இயல்பான ஒன்றுதான். அந்த வகையில், நரேந்திரர் தலைமையாளராகப் பதவியேற்றதும் தமிழக முதல்வர் (வைகாசி 20, 2045 / சூன் 3, 2014 அன்று) அவரைச் சந்தித்துள்ளார். தமிழ் மக்களுக்குத் தேவையானவற்றை நிறைவேற்றுவதற்காக ஏறத்தாழ 64 பக்க முறையீட்டை அளித்துள்ளார். தமிழ்நாட்டில் வேண்டப்படுவனவற்றைக் குறிப்பிட்டு அவற்றை நிறைவேற்ற உதவுமாறு வேண்டுவது வாலாயமான ஒன்றுதான். இவைபோல், முல்லை-பெரியாறு, காவிரிநீர் முதலான அண்மை மாநிலத்துடனான சிக்கல்கள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். இவற்றை…
126 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு – நரேந்திரருக்கு பக்சே அறைகூவல்
சிங்களக்கொடுங்கோலர்களுக்கு நண்பர்களாகப் பலர் பா.ச.க. வில் உள்ளனர். இருப்பினும் நரேந்திர(மோடி) ஆட்சியில் தமிழக மீனவர்களுக்கு விடிவு கிடைக்கும்; இதுபோன்ற காரணங்களுக்காகத்தான் நரேந்திரர் பதவியேற்பிற்கு இனப் படுகொலையாளி பக்சே அழைக்கப்பட்டான்; மாபெரும் மாற்றம் நிகழப்போகிறது என்றெல்லாம் நம்பிக்கை விதைகள் விதைக்கப்பட்டன. ஆனால், நரேந்திரர் அழைத்தது தந்திர வினையல்ல; பக்சேவை வழிக்குக் கொண்டுவரும் முயற்சியும் அல்ல. இங்கு வருமாறு அழைக்க வைத்த பக்சேதான் தந்திரவினையில் வல்லவன் என மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு 126 தமிழக மீனவர்கள் சிங்களப் படைத்துறையால் சிறைவைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் படகுகள், வலைகள் வெட்டிச் சிதைக்கப்பட்டுள்ளன….
நரேந்திர மோடி தலைமையாளரானால் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்குப் பாதுகாப்பு இருக்காது-தொல்.திருமாவளவன்
திருவள்ளூர்(தனி) நாடாளுமன்றத் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் இரவிக்குமாரை ஆதரித்து தொல்.திருமாவளவன் திருவள்ளூர், ஈக்காடு, திருப்பாசூர், திருவாலங்காடு போன்ற பகுதிகளில் தேர்தல் பரப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:– “நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் ஒரு சிறப்பான சனநாயக முற்போக்குக் கூட்டணி உருவாக்கப்பட்டு உள்ளது. இங்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் இரவிக்குமாரை வெற்றி பெறச் செய்து மக்கள் பணியாற்ற அவருக்கு நீங்கள் வாய்ப்பளிக்க வேண்டும். நரேந்திரமோடி தலைமையாளரானால் -பிரதமரானால்- தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்குப் பாதுகாப்பு…
யார் காயப்பட்டுக் கிடந்தாலும் ஓடிச்சென்று காப்பாற்றுவேன் – வைகோ
விருதுநகர் தொகுதியில் என்னைத் தேர்ந்தெடுத்தால், யார் காயப்பட்டுக் கிடந்தாலும் ஓடிச்சென்று காப்பாற்றுவேன் என்று தேர்தல் கூட்டத்தில் வைகோ பேசினார். விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் பா.ச.க. கூட்டணியில் ம.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் வைகோ, திருமங்கலம் அடுத்த ஆலம்பட்டியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:– ஆலமரங்களின் கூட்டம் குசராத்து மாநிலத்திற்கு நான் சென்றிருந்த போது, இன்றைய தலைமையாளர் -பிரதமர்- வேட்பாளர் நரேந்திரமோடி என்னை வரவேற்றார். அங்கு நடைபெற்ற அமைதிப்பேரணியில் அவருடன் நானும் நடந்துவர ஏற்பாடு செய்தார். அனைவரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்கக்கூடிய வதோரா என்ற ஊருக்குச் சென்றோம்….
தமிழகம் நீதி பெற நாம் 39 தொகுதிகளிலும் வென்றாக வேண்டும் – வைகோ முழக்கம்
செயலலிதா ஏதேனும் தீவினை விலைக்கு வாங்கி அதற்கப் பிரதமர் ஆகப்போகிறாரா: வைகோ பேச்சு பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் தேசிய சனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய சனநாயகக் கட்சி நிறுவனத் தலைவர் டி.ஆர்.பச்சமுத்துவை ஆதரித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சனிக்கிழமை பரப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி தமிழக வெற்றியின் அவசியமின்றியே பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பார். ஆனால் 39 தொகுதிகளிலும் நாம் வென்றால்தான் நீதி கிடைக்கும். முல்லைப் பெரியாறு, காவிரிச்சிக்கல் இலங்கையுடனான மீனவர் சிக்கல்…
மோடிக்குப் பாராட்டு! – இலக்குவனார் திருவள்ளுவன்
பா.ச.க.வின் தலைமையாளர் வேட்பாளராக அறிவிக்கப் பட்ட குசராத்து முதல்வர் நரேந்திரர் பாராட்டப்பட வேண்டியவர். தேர்தல் வெற்றிக்காகக்கூடப் போலியான வாக்குறுதி தராதவர் என்றால் அவரைப் பாராட்டத்தானே வேண்டும்? வேறு வகையில் என்றால் அரசியல்வாதி என்ற முறையில் பொய்யான வாக்குறுதிகள் தருவதற்குத் தயங்க மாட்டார். ஆசனால், தமிழினம் தொடர்பானதாயிற்றே! எனவே, வி்ழிப்பாக வண்டலூரில் பேசியுள்ளார். தொடக்கத்தில் தமிழன்னைக்கும் தமிழ் மக்களுக்கும் தமிழில் வணக்கம் தெரிவித்தது எல்லா அரசியல்வாதிகளும் செய்யும் செயல்தான். இருப்பினும் தமிழ்மண்ணில் இருந்து கொண்டு தமிழர்களிடம் வாக்கு கேட்கின்றோம்! தமிழினத்திற்காகவும் தமிழ்…