கணித்தமிழ்ச்சங்கத்தலைவர் ஆனந்தனுக்கு நன்றி.
கணித்தமிழ்ச்சங்கத்தலைவர் ஆனந்தனுக்கு நன்றி. தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் நடத்தும் கணித்தமிழ்ச்சங்கத்தின் முயற்சி பெரிதும் பாராட்டிற்குரியது. என்றாலும் கருத்தரங்கத்தின் முதல் தலைப்பே, ஓலைச் சுவடி முதல் கையகச் சாதனங்கள் வரை – தமிழ் வரிவடிவத்தின் படிநிலை வளர்ச்சி என உள்ளது. நெடுங்கணக்கில் இடம் பெறும் எழுத்துகளை வடிவமைப்புத் தோற்றத்திற்காக வெவ்வேறு வகையில் தரப்படும் எழுத்துருக்களைப் பற்றித்தான் இதன் ஆய்வு இருக்க வேண்டும் . ஆதலின் அதனை நீக்க வேண்டும் எனக் கடந்த வாரம் வேண்டுகோள் விடுத்திருந்தோம். இது குறித்துக் கணித்தமிழ்ச்சங்கத்தலைவருக்கு தமிழ்க்காப்புக்கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம்…
வரிவடிவப் பொருண்மையை நீக்கக் கணித்தமிழ்ச்சங்கத்திற்கு வேண்டுகோள்.
வரிவடிவப் பொருண்மையை நீக்கக் கணித்தமிழ்ச்சங்கத்திற்கு வேண்டுகோள். தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் நடத்தும் கணித்தமிழ்ச்சங்கத்தின் முயற்சி பெரிதும் பாராட்டிற்குரியது. இப்பொருண்மையிலான கருத்தரங்கம், இந்தியத் துணைக்கண்ட மொழிகளுள் முதலில் தமிழில் நடத்துவது மகிழ்ச்சிக்குரியது. ஆனால், நெடுங்கணக்கில் இடம் பெறும் எழுத்துகளை வடிவமைப்புத் தோற்றத்திற்காக வெவ்வேறு வகையில் தரப்படும் எழுத்துருக்களைப் பற்றித்தான் இதன் ஆய்வு இருக்க வேண்டும். முன்னரே உத்தமம், கணித்தமிழ்ச்சங்கம் போன்ற கணிணி சார் அமைப்புகள் தமிழ் மொழி சார் ஆய்வில் ஈடுபட்டுத் தவறான கருத்துகளை ஊன்ற முயல்வது தவறெனச் சுட்டிக்காட்டியுள்ளோம். ஆனால், கருத்தரங்கத்தின் முதல்…
எழுத்தைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! – 3 – இலக்குவனார் திருவள்ளுவன்
(பங்குனி 15, 2045 / மார்ச்சு 29, 2015 தொடர்ச்சி) தாய்நிலமாகிய தமிழ்நிலத்திலேயே தமிழுக்கு மதிப்பில்லாச் சூழல் உள்ளது. கல்வியிலும் பணியிலும் வழிபாட்டிலும் ஆட்சியிலும் என எல்லா இடங்களிலும் தமிழுக்குத் தலைமையை நாம் தரவில்லை. உலகத்தமிழர்களிடையே இன்னல்கள் ஏற்படும் பொழுது குரல்கொடுத்து குறைகளைந்து உதவும் உணர்வு பெரும்பான்மையரிடம் இல்லை. இருந்திருந்தால் ஈழத்தில் இனப்படுகொலையும் நிலப்பறிப்பும் உறுப்புகள் உடைமைகள் இழப்பும் கற்பழிப்பும் வதைவெறியும் ஆகிய பேரவலம் நிகழ்ந்திருக்காதே! இங்கு நாம் தமிழே படிக்காமல் பணியாற்றவும் வணிகத்தில் சிறக்கவும் வாழ்வாங்கு வாழவும் இயலும். எனவே, தேவையில்லாத மொழியைக்…
தமிழ் எழுத்தொலிகளுக்கான ஆங்கில ஒலிபெயர்ப்பு வரையறை – கலந்துரையாடல்
பேரன்புடையீர், வணக்கம். தமிழ்ப்பெயர்ச் சொற்களையும் தமிழ் மேற்கோள்களையும் அவ்வாறே ஆங்கிலத்தில் குறிப்பிடுகையிலும் தமிழ் இலக்கியங்களை ஆங்கில ஒலி பெயர்ப்பில் குறிப்பிடுகையிலும் தமிழ் எழுத்தொலிகளுக்குப் பொருந்தி வரும் வரிவடிவங்களே ஏற்கத்தக்கன. இப்பொழுது வெவ்வேறு வகையாகப் பின்பற்றப்படுகின்றன. சிலர், ஙகர, ஞகர, நகர, ணகர, னகர வேறுபாடுகளோ லகர, ளகர, ழகர வேறுபாடுகளோ ரகர, றகர வேறுபாடுகளோ தேவையில்லை என ஒரே ஆங்கில வரிவடிவத்தையே அனைத்திற்கும் பயன்படுத்துகின்றனர். ஒரு மொழியின் எழுத்தொலிகளைப் பிற மொழியின் வரிவடிவங்களில் அதே ஒலிப்பு முறையில் கொணருவது இயலாத ஒன்றுதான்….
தமிழ் வரிவடிவம் காப்போம்! – 3
– தொகுநர்: சிவ அன்பு & இ.பு.ஞானப்பிரகாசன் (முந்தைய இதழின் தொடர்ச்சி) ஆங்கில வரி வடிவத்தில், எழுத்துரு இல்லாத மலாய் மொழி போலத் தமிழை மாற்றி விடலாம் என்று குறுகிய சின்னப்புத்திக்குச் சொந்தக்காரராக ஏன் இப்படி எழுத்தாளர் மாறிப்போனார் என்று தெரியவில்லை. பொதுவாக, ஆங்கிலத்தில் ‘தமிழ்99’ வகைத் தட்டச்சு முறையில் அடிப்பதை அப்படியே தமிழ் எழுத்துருவை விட்டுவிட்டு எழுதப் படிக்கப் பழகிக்கொள்ளாலம் என்று சொன்னால், அதைவிடப் பைத்தியக்காரத்தனம் எதுவும் இருக்க முடியாது. – அழகு ஒரு மொழியின் மரபே தொன்மையான அதன் எழுத்து…