தொகுநர்: சிவ அன்பு & இ.பு.ஞானப்பிரகாசன்

(முந்தைய இதழின் தொடர்ச்சி)

ஆங்கில வரி வடிவத்தில், எழுத்துரு இல்லாத மலாய் மொழி போலத் தமிழை மாற்றி விடலாம் என்று குறுகிய சின்னப்புத்திக்குச் சொந்தக்காரராக ஏன் இப்படி எழுத்தாளர் மாறிப்போனார் என்று தெரியவில்லை. பொதுவாக, ஆங்கிலத்தில் ‘தமிழ்99’ வகைத் தட்டச்சு முறையில் அடிப்பதை அப்படியே தமிழ் எழுத்துருவை விட்டுவிட்டு எழுதப் படிக்கப் பழகிக்கொள்ளாலம் என்று சொன்னால், அதைவிடப் பைத்தியக்காரத்தனம் எதுவும் இருக்க முடியாது.

–          அழகு

 

ஒரு மொழியின்  மரபே தொன்மையான அதன் எழுத்து வடிவில்தான் உள்ளது. பலமொழிகள் அழிந்து ஒழிந்ததன் காரணம் அதற்கெனத் தனி எழுத்துவடிவம் இல்லாததே. தமிழ் ஒழியவேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்ட கட்டுரை.

–          சகுபெர் சாதிக்கு(Jahufer Sadik)

 

பிழைப்புக்காகத் தமிழைப் படித்து, தமிழர்களை ஏமாற்றிச் சுரண்டிப் பிழைத்து வரும் பிற மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும், இயல்பாகவே தமிழ்ப் பகை உணர்வுடைய ஆரியச் சார்பினரும் காலந்தோறும் புதிது புதிதாகத் தமிழ் அழிப்புக்காகக் காய் நகர்த்தி வருகின்றனர்.

 அம்முயற்சிகளில் ஒன்றே தமிழுக்குத் தனியே எழுத்து வேண்டாவென்பது. இந்தக் கழிசடைகள் முதலில் தம் தாய்மொழியிலும் சமற்கிருதத்திலும் தனி எழுத்தைத் தவிர்த்துவிட்டு ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தி முடிக்கட்டும்! பிறகு இங்கு வந்து வாய் திறக்கட்டும்! அப்போது தக்க விடை தரலாம்.

–          தமிழ நம்பி

 

முட்டாள்தனமான அறிக்கை!!!!

 

–          இராசேந்திரன் இராமசாமி (Rajendran Ramasamy)

‘அபத்தம்’. தமிழ் எழுத்துகள் மட்டுமே இருக்கும். மொழி, சொல், பொருள் அழிந்துபோகும்.

–          கருப்பன் நாராயணன் (Karuppan Narayanan)

 

அன்னைத் தமிழ் செம்மொழியாகும். முயன்று படிக்க வேண்டுமே தவிர, முடியாது என்று சொல்வது பிழை. கைப்பேசிகளில் நாம் சாவா நிரல் (java script) மூலம் பதிவிறக்கம் செய்திட வேண்டும். மொழிக்குடும்பம் மொத்தமே பத்துதான். மூத்தமொழியே தமிழ்தானே!

 

–          அலி அக்பர் (Ali Akhbar)

அவருடைய கட்டுரையைப் படித்தேன். அவருடைய சோம்பேறித்தனத்திற்கு நம்மையும் துணைக்குக் கூப்பிடுகிறார், அவ்வளவுதான்.

. . . .இவ்வாறு செய்தால் வருங்காலத்தில் தமிழ் பேசத் தெரிந்தவர்கள் இருப்பார்களே தவிர, எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் பத்து சதவிகிதம்கூட இருக்கமாட்டார்கள்.

–          செயவேல் கோபாலசாமி (Jayavel Gopalswamy Jvg)

 

தமிழை முழுமையாகப் படித்து இருக்க மாட்டார். அவர் அறிக்கை வெறும் குப்பை. அப்படியே தூக்கி எறிவோம்!

–          கலீசு காலீசுவரன்(Kaleesh Kaleeshvaran)

 

 

மிகவும் மோசமான கருத்து.

–          தீபா மகேசுவரன்

 

 செயமொகன் மலையாளி (நாயர்), இந்து நாளேடும்தாம் அவர் பின்புலம். அவர் இந்தக் கருத்தைத் தன் தாய் மொழியான மலையாளத்திற்குக் கூறட்டும். தமிழ் என்ன கிள்ளுக் கீரையா ஆளாளுக்குக் கைவைக்க? தமிழின் வரிவடிவம் மாற்றப்பட்டதால்தான் அது தமிழல்ல, பிராமி என்று கூறக் கிளம்பியது ஒருகூட்டம். பல அறிஞர்களின் குட்டுக்குப் பிறகு இப்போது தமிழ்ப் பிராமி என்கின்றனர். மொழிப் பற்றுள்ளவர்களை மொழிவெறியர்கள் என்று அடையாளம் காட்டுவது தமிழர்களை மட்டுமே. மலையாளமும் கன்னடமும் கட்டாயம் படிக்கவேண்டும் என்று அவ்வம் மாநில முதல்வர்கள் கூறுவது அவர்களின் மொழிவெறியா பற்றா? தத்தம் தாய்மொழி மீது பற்று வைப்பது இயற்கை. அதற்கு எதிவினையாற்றுவது தமிழ்நாட்டில் மட்டுமே நடக்கும் கொடுமை.

 

–          தமிழொலி ஏகாம்பரம்(Thamizholi Ekambaram)

ஆங்கில எழுத்துக்களில் தமிழைக் கற்றுக் கொடுப்பதாம். ஆங்கிலம் தமிழுக்கு நிகரா???????????? என்ன தரங்கெட்ட சிந்தனை!

 

–          சிவநேசன் அரங்கநாதன் (Sivanesan Ranganathan)

ஆங்கில 26 எழுத்துக்களில் இருந்து

மெல்லினம், வல்லினம், இடையினம் ஆகிய
மூன்று வகைகளை அடையாளம் காட்டுங்கள்.

மற்றதெல்லாம் பிறகு பேசலாம்.

தமிழ் உயிர் மொழி ஐயா!!

 

–          முத்து மணி (Muthu Mani)

 

(தொடரும்)