தோழர் தியாகு எழுதுகிறார் 87 – வாலாசா வல்லவன் பகிரும்  திருக்குறளைப் போற்றும் பெரியார் 2/2

(தோழர் தியாகு எழுதுகிறார் 86 தொடர்ச்சி) பெரியாரும் திருக்குறளும் 2/2 அன்பர் வாலாசா வல்லவன் எழுதுகிறார் ஆனால், குறளில் அப்படிப்பட்ட அதிசயம் ஒன்றையுங் கூறாவிட்டாலும் திருவள்ளுவரைத் தெய்வீகப் பிறவியாக ஆக்கா விட்டாலும் – அவருடைய பிறப்புப் பற்றி இழித்துக் கூறிவிட்டார்கள்.  வள்ளுவரின் தாயை ஒரு விபச்சாரியாகக் கற்பனை செய்து விட்டான். வள்ளுவர் பிறப்பைப் பற்றி எழுதும் போது பறைச்சிக்கும் பார்ப்பானுக்கும் வள்ளுவர் பிறந்தார் என்று எழுதுகிறான். இதில் புத்திசாலித்தனம் என்னவென்றால் – குறளைப் போன்ற நீதி நெறிகளை, மக்களின் உயர் ஒழுக்கத்திற்கு வேண்டிய பண்புகளைப் போதிக்கத்தக்க தகுதியும்…

தோழர் தியாகு எழுதுகிறார் 86: வாலாசா வல்லவன் பகிரும்  திருக்குறளைப் போற்றும் பெரியார்

(தோழர் தியாகு எழுதுகிறார் 85 தொடர்ச்சி) பெரியாரும் திருக்குறளும் 1/2 அன்பர் வாலாசா வல்லவன் எழுதுகிறார் இன்று காலை பெ.ம.வின் அடிப்பொடி கதிர்நிலவன் “பெரியார் திருக்குறளை மலம் என்று சொன்னார், இதோ பார் ஆதாரம் என்று காட்டுவதற்காக ஒரே ஒரு பத்தியை மட்டும் எடுத்துப் பதிவிட்டிருந்தார். முழுமையாகப்  பதிவிடும்படி கேட்டேன். அவர் பதியவில்லை. ஆனைமுத்து ஐயா தொகுத்த பெரியார் சிந்தனைகள் நூலிலிருந்து முழுமையாகப் பதிவிட்டுள்ளேன். “குறளும் – நானும்” பேரன்பு படைத்த தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே! வணக்கம்.  வள்ளுவர் குறளையும், அந்தப்படியே, அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும்…

தமிழ்வழிக் கல்வி இயக்கம் நடத்தும் பாவேந்தர் விழா – பாவரங்கம், கருத்தரங்கம்

வைகாசி 14, 2050 சனி 27.04.2019 மாலை 04.30. முத்தமிழ் மன்றம், கோயில் பதாகை, ஆவடி, சென்னை-62  தலைமை:  த.மணிசேரன் பங்கேற்பு: தொடக்கவுரை: அ.சி.சின்னப்பத்தமிழர்  முழக்கம் எழுப்பல்  – தமிழ்நேயன் சிறப்புரைகள்: பாவேந்தரும் தமிழும் – மறை தி.தாயுமானவன் வ.சுப.மாணிக்கனார் – செந்தமிழ்வாணன் பெரியாரும் திருக்குறளும் – வாலாசா  வல்லவன் பரிமேலழகர் முதல் நாகசாமி வரை  – இலக்குவனார் திருவள்ளுவன் கருத்துரை – அன்பு, சோம.பொன்னுச்சாமி, க.ச.கலையரசன், சேகர், ச.அழகுஒளி 

இந்திக்கு வால்பிடித்த ம.மொ.சி. – வாலாசா வல்லவன்

இந்திக்கு வால்பிடித்த ம.மொ.சி.     1955 ஆம் ஆண்டு இந்திய அரசு இந்தி மொழியை எப்படி எல்லாம் வளர்த்து எடுக்க வேண்டும் என்பதைக் கண்டறிய பி.சி.கெர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அக்குழு இந்தியா முழுவதும் முழுவதும் சென்று கருத்துகளைக் கேட்டறிந்தது.   மார்கழி 27, 1986 / 1956 சனவரி 11ஆம் நாள் அக்குழு முன்பு ம.பொ.சி.  கருத்துரைத்தார் இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி என்பதைத் தமிழரசு கழகம் ஏற்றுக் கொள்ளுகிறது. மத்திய அரசின் நிருவாக மொழியாகவும், மாநிலங்களின் தொடர்பு மொழியாகவும், உச்ச…

பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? 3/3 – வாலாசா வல்லவன்

(பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? 2/3 தொடர்ச்சி) 3/3   15-2-1953 சென்னை மாவட்டத் திராவிடர் கழகச் செயற்குழு 22-2-1953 அன்று சென்னைக்கு வரும் குடியரசுத் தலைவர் இராசேந்திரப் பிரசாத்துக்குக் கருப்புக் கொடி காட்டத் தீர்மானித்தது.(விடுதலை 16-2-1953). அன்றே திராவிடர் கழக நடுவண் செயற்குழு கூடி இந்தியக் குடிஅரசுத் தலைவர் இராசேந்திரப் பிரசாத்து சென்னைக்கு வரும் அன்றே ‘தமிழக உரிமைப் பாதுகாப்பு நாள்’ தமிழகமெங்கும் கொண்டாடும்படித் தீர்மானம் நிறைவேற்றியது. (விடுதலை 16-2-1953).   திட்டமிட்டபடி இராசேந்திரப் பிரசாத்துக்குக் குத்தூசி குருசாமி தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள்…

பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? 2/3 – வாலாசா வல்லவன்

(பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? 1/3 தொடர்ச்சி) 2/3 ஆந்திராச் சிக்கல் குறித்து திராவிடர் கழக நடுவண் மேலாண்மைக்குழு 11-1-1953இல் நிறைவேற்றிய தீர்மானம்: (அ) ஆந்திர நாடு பிரிவினையில் ஆந்திரர்கள் பிடிவாதமாக இருப்பதால் ஆந்திரநாட்டைப் பிரிப்பதில் காலதாமதம் செய்யாமல் உடனடியாகப் பிரித்து விடவேண்டுமென்று இக்குழு தெரிவித்துக் கொள்ளுகிறது.   அப்படிப் பிரிப்பதில் ஆந்திரநாட்டினரிலேயே சிலர் பிரிவினைக்கு முட்டுக்கட்டை போடுகிற மாதிரியில் தாங்கள் பிரிந்துபோன பின்பும் எஞ்சியுள்ள சென்னை நாட்டில் தங்களுக்குச் சில உரிமையோ சலுகையோ அதாவது பொது நீதிமன்றம், பொது ஆளுநர் முதலியவை சென்னையிலிருக்க…

பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? 1/3 – வாலாசா வல்லவன்

1/3   வழக்கறிஞர் பா.குப்பன் என்பவர் ‘தமிழரின் இனப்பகை ஈ.வெ.ரா’ என்கிற ஒரு நூலை எழுதியுள்ளார். அந்நூலில் வரலாற்றுப் பொய்கள் பலவற்றையும் வரலாற்றுத் திரிபுகள் பலவற்றையும் செய்துள்ளார், அவர். அண்மைக் காலமாக ம.பொ.சி-யின் அடியாராக மாறியுள்ளதால், ம.பொ.சி.யின் வரலாற்றுப் புரட்டல்களை அவரது மாணவக் கோடிகள் இன்றும் செய்து வருவதில் வியப்பொன்றுமில்லை.   தமிழ் மக்களுக்கு உண்மை வரலாறுகள் தெரிய வேண்டும். தமிழினத்திற்கு உண்மையான எதிரிகள் யார், உண்மையான தோழர்கள் யார் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டால்தான் நாம் மேற்கொண்டிருக்கும் பயணத்தின் இறுதியில் வெற்றி கொள்ள…