நாங்கள் அமைத்து இருப்பது வெற்றிக்கூட்டணி: விசயகாந்து முழக்கம்!
மத்திய சென்னை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் சே.கா.இரவீந்திரனை ஆதரித்து, யானைகவுனி, பட்டாளம், வில்லிவாக்கம், முதலான பகுதிகளில் தே.மு.தி.க. தலைவர் விசயகாந்து பரப்புரை மேற்கொண்டார். யானைகவுனியில் திறந்த ஊர்தியில் நின்றபடி, விசயகாந்து பேசியதாவது:- “குசராத்து தமிழ்நாடு மாதிரி முன்னேறவில்லை என்று கூறுகிறார்கள். அது உண்மை தான். தமிழ்நாட்டில் கையூட்டு முன்னேற்றம் அடைந்திருக்கிறது. ஆனால் குசராத்து கையூட்டில் முன்னேற்றம் அடையவில்லை. அதேபோல், தமிழ்நாடு அரசின் மதுபானக்கடை விற்பனையில் முன்னேற்றம் அடைந்து இருக்கிறது. ஆனால் குசராத்து அதில் முன்னேற்றம் அடையாமல்தான் இருக்கிறது. இதுதான் தமிழ்நாட்டின் முன்னேற்றமாகச் சொல்கிறார்கள்….