திருக்குறள் அறுசொல் உரை – 068. வினை செயல் வகை : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 067. வினைத் திட்பம் தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 068. வினை செயல் வகை தூய செயலை, மனஉறுதியுடன் செய்தற்கு உரிய வழிமுறைகள் சூழ்ச்சி முடிவு துணி(வு)எய்தல்; அத்துணிவு, தாழ்ச்சியுள் தங்குதல் தீது. ஆழ்ந்தாய்ந்து எடுத்த நல்முடிவைக், காலம் தாழ்த்தாது, துணிந்துசெய். தூங்குக, தூங்கிச் செயல்பால; தூங்கற்க, தூங்காது செய்யும் வினை. செயல்களைப் பொறுத்துக் காலம் தாழ்த்தியும், தாழ்த்தாதும் செய்க. ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே; ஒல்லாக்கால்,…