திருக்குறளில் உருவகம் 6 – பேராசிரியர் வீ.ஒப்பிலி
(பங்குனி 30, தி.ஆ.2045 / ஏப்பிரல் 13, 2014 இதழின் தொடர்ச்சி) வெள்ளத்தைப் போல் நீருக்கடியில் உள்ள பாறையும் தீங்கின் சின்னமாகிறது. உள்ளதை மறைப்பாரின் ‘இல்லை’ என்ற சொல் நீரினுள் பாறையாகிறது. இரவென்னும் ஏமாப்புஇல் தோணி கரவென்னும் பார்தாக்கப்பக்கு விடும். ஊர்நடுவேயுள்ள குளத்து நீர் ஈவாரின் செல்வத்திற்கு உருவகமாகிறது. ஈயாது செல்வத்தைச் சேர்ப்போரின் உள்ளம் இக்குறளில் பாறையாக மாறிவிடுகிறது. இரத்தல் உடைந்த மரக்கலம்; இரந்து வாழ்பவன் இறைவனின் திருவடியைப் பற்றாது, உடையும் மரக்கலத்தைத் துணை கொண்டு, பிறவிப் பெருங்கடலைக் கடக்க…
திருக்குறளில் உருவகம் – 5: பேராசிரியர் வீ. ஒப்பிலி
(பங்குனி 23, தி.பி.2045 / 06 ஏப்பிரல் 2014 இதழின் தொடர்ச்சி) இனி நீர் உருவகமாகப் பயன்படும் மற்ற குறட்பாக்களை எடுத்துக் கொள்வோம். நீர் தூய்மையை உண்டாக்கும் தன்மையுடையது. புறத்தே தோன்றும் அழுக்கை நீக்கும் நீர் அகத்தே தோன்றும் வாய்மையின் உருவகமாகிறது. புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும் (298) வாய்மையின்மையால் நேரும் கேட்டினையும், அப்போது நீர் பயன்படாது போவதையும் ‘மாக்பெத்து’ என்ற நாடகத்தில் சேக்சுபியர் எடுத்துக் காட்டுகிறார். அகத் தூய்மையைக் குறிக்கும் போதெல்லாம் அக்கவிஞரும் நீரை…
திருக்குறளில் உருவகம் 3 – ஆங்கிலப் பேராசிரியர் வீ.ஒப்பிலி
(23 மார்ச்சு 2014 இதழின் தொடர்ச்சி) இவ்வாறு முட்களும், அடிமரத்தை வெட்டி வீழ்த்தும் கோடரியும் துன்பத்தில் உருவாகின்றன. மரத்தை வெட்டுதலும், வீழ்த்துதலும் அழிவின் சின்னமாகின்றன. இவ்வாறே பிணக்கினால் வாடிய காதலி வாடிய கொடியாகிறாள்; அவளது ஊடலை நீக்காது, கூடாது செல்லும் காதலன் அக்கொடியை அறுக்கும் கொடியவனாகிறான். முள் மரம் இளையதாக இருக்கையிலே அழிக்கப்பட வேண்டும்; ஆனால் பழம் பெரும் அடிமரமும், வாடிய கொடியும் காக்கப்பட வேண்டும். பெருங்குடி காப்பவன் முதலில் இல்லாளின் வாட்டத்தை நீக்கிக் காப்பவனாக இருக்க வேண்டுமல்லவா? கயவரை எண்ணிய…
திருக்குறளில் உருவகம் 2 – ஆங்கிலப் பேராசிரியர் வீ.ஒப்பிலி
(16.03.14 இதழின் தொடர்ச்சி) ஓரறிவின்: ஓரறிவுள்ள உயிரினத்தை – சிறப்பாக மரத்தை, பயனுள்ளது, பயனற்றது என இரு வகையாகக் காண்கிறார் கவிஞர். உலகில் வாழும் மக்களும் அதற்கேற்ப இருவகையாகத் தோற்றமளிக்கின்றனர். இதுவன்றிப் பொதுவாக ஆரறிவு படைத்த மனிதனோடு ஒப்பிட்டுப் பார்த்தால், மரம் தாழ்ந்ததே. ஆதலால் மனித குண நலன்களில் குன்றிய யாவரும் பெரும்பாலும் மரமாகக் காட்சியளிக்கின்றனர். அன்பு இல்லாதோர் பாலை நிலத்துப் பட்ட மரமாகின்றனர். இங்கு குளிர்ந்த நீரும் நிழலும் அன்பிற்கும், இவை இரண்டும் அறவே தோன்றாத பாலை நிலம்…