வெருளி அறிவியல் – 3 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி அறிவியல் 2 இன் தொடர்ச்சி) வெருளி அறிவியல் – 3 ‘தெனாலி’ படம் பார்த்தவர்களுக்குப் பின்வரும் பயங்கள்பற்றிய பேச்சு நினைவிருக்கும்: “எனக்கு எல்லாம் பயமயம். … காலால் உதைத்தால் காலில் அடிபடும் என்ற பயம் எனக்கு; கவிதை பயம் எனக்கு; கதை பயம் எனக்கு; பீமனின் கதைக்கும், அனுமனின் கதைக்கும் பயம்; உதைக்கும் பயம்; சிதைக்கும் பயம்; கதவு பயம் எனக்கு; கொஞ்சம் திறந்த கதவும் பயம், முழுதாக மூடின கதவும் பயம், பூட்டு போட்ட கதவென்றாலும் பயம் எனக்கு; காடு பயம்…
வெருளி அறிவியல் – 2 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி அறிவியல் 1 இன் தொடர்ச்சி) வெருளி அறிவியல் – 2 (Science of fear or Phobia) (அச்ச நோய் வகைகள் எனப்படும் வெருளி வகைகள்) ஒரேவகை வெருளி ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்களாலும் குறிப்பிடப்படுகின்றது. ஒரே நேரத்தில் வெவ்வேறு சூழலில் வெவ்வேறு வல்லுநர்கள் ஆராய்வதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அவற்றை எல்லாம் ஒரே வகையாகக் குறித்துள்ளேன். நான் இதற்கு முன்பு வெருளி வகைகளைக் குறிப்பிட்டுப் பட்டியல் அளித்துள்ளேன். எனினும் இப் பொழுது அவற்றில் சிலவற்றை வேறு சிலவற்றில் சேர்த்து மாற்றியுள்ளேன். ஆங்கிலத்தில், மருத்துவர்கள்…
வெருளி அறிவியல் – 1 : இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் – 1 (Science of fear or Phobia) (அச்ச நோய் வகைகள் எனப்படும் வெருளி வகைகள்) (http://thiru-science.blogspot.com/2012/08/blog-post.html விரிவு) முன்னுரை ஒன்றைப் பற்றிய அச்சத்தினால் ஏற்படும் அச்ச நோய் பல வகைப்படும். ஒன்றின் மீதான கடும் அச்சம், அல்லது விருப்பமின்மை, அல்லது வெறுப்பு, ‘போபியா(phobia)’ எனப்படுகிறது. ஒருவர் மீது, அல்லது ஒரு சூழல் பற்றி, அல்லது ஓர் அமைப்பு மீது, அல்லது அமைப்பினர், நாட்டினர், அவர்கள் தொடர்பானவை என்பனவற்றின் மீது, அல்லது இவை போன்றவற்றின்மீது, எவ்வகைப் பேரிடருக்கும் வாய்ப்பு இல்லாத…
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 21: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 20 தொடர்ச்சி) 21 குற்றமற்ற அறநெறியாம் மக்களாட்சி நெறி முறையைப் பின்பற்றிக் மிகப்பெரிய இயக்கமாகத் திராவிட முனனேற்ற கழகத்தை அமைத்து மக்களைக் கவர்ந்தார். மக்களின் மிகப்பெரிய ஆதரவுடன் 6.3.1967 ஆம் நாளன்று தமிழகத்தின் முதலமைச்சராய் அரியணையில் அமர்ந்தார். பேச்சுத் திறன் கொண்டு மக்கள் உள்ளம் கவர்ந்து தலைவரானார். இத் தரணியில் இவர் போல் வேறு எவரேனும் உண்டோ? சொல்வீர். இதனை, சொல்லுந்திறன் கொண்டே தோமில் நெறியில் மக்களைக் கவர்ந்த மாபே ரியக்கம் அமைத்து முதல்வராய்…
கலைச்சொல் தெளிவோம்! 164.பதின்மூன்றாம் நாள் வெள்ளிவெருளி
கலைச்சொல் 164. பதின்மூன்றாம் நாள் வெள்ளிவெருளி – araskavedekatriaphobia/Paraskevidekatriaphobia/Friggatriskaidekaphobia வெள்ளி என்னும் சொல் சங்க இலக்கியங்களில் 29 இடங்களில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், பெரும்பாலும் வெள்ளி மாழையையும், சிறுபான்மை வெள்ளிக் கோளையும் குறிக்கும் வகையிலேயே காணலாம். வெள்ளிக் கோளால் அமைந்த நாளே வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமை அன்று பதின்மூன்றாம் நாள் அமையும் பொழுது வரும் பேரச்சமும், பிற கிழமையில் வரும் பதின்மூன்றாம் நாள் குறித்த பேரச்சமும் உள்ளன. அவை வருமாறு: பதின்மூன்றாம் நாள் வெள்ளிவெருளி- Paraskavedekatriaphobia/Paraskevidekatriaphobia/Friggatriskaidekaphobia . இலக்குவனார் திருவள்ளுவன்
கலைச்சொல் தெளிவோம்! 162. வெகுள்பு வெருளி-Angrophobia; 163. வெள்ள வெருளி-Antlophobia
கலைச்சொல் 162. வெகுள்பு வெருளி-Angrophobia வெகுண்டனள்(1), வெகுண்டு(6), வெகுள்(1)வெகுள்வர்(1), வெகுள்வாய்(1), வெகுள்வோள்(1), வெகுளி(4), வெகுளும்(1) என்பன வெகுள்வதை அடிப்படையாகக் கொண்ட சங்கச் சொற்கள் உள்ளன. வெகுளி பற்றிய இயல்பு மீறிய பேரச்சம் வெகுள்பு வெருளி–Angrophobia கலைச்சொல் 163. வெள்ள வெருளி-Antlophobia சங்க இலக்கியங்களில் வெள்ளம் என்பதுசில இடங்களில் பேரெண்ணைக் குறிக்கும் வகையில் வந்துள்ளது. வெள்ளப்பெருக்கு குறித்து ஏற்படும் இயல்பிற்கு மீறிய பேரச்சம் வெள்ள வெருளி-Antlophobia – இலக்குவனார் திருவள்ளுவன்
கலைச்சொல் தெளிவோம்! 160. விலங்கு வெருளி-Zoophobia; 161. வீழ்பு வெருளி-Basophobia/Basiphobia
கலைச்சொல் 160. விலங்கு வெருளி-Zoophobia விலங்கு என்றால் குறுக்காக அமைதல் என்று பொருள். மக்கள் இனம் போல் நேராக இல்லாமல் குறுக்காக அமைந்த உயிரினமே விலங்கு எனப்பட்டது. விலங்கு என்பதன் மூலப் பொருளிலும் விலங்கினம் என்னும் பொருளிலும் ஆக 38 இடங்களில் விலங்கு என்னும் சொல்லைச் சங்கப்புலவர்கள் கையாண்டுள்ளனர். விலங்குகள், பறவைகள் கண்டு ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய விலங்கு வெருளி-Zoophobia கலைச்சொல் 161. வீழ்பு வெருளி-Basophobia/Basiphobia சங்கப்பாடல்களில் விழு(85) சிறப்பினைக் குறித்தாலும், வீழ்வதையும் குறிக்கின்றது. விழுந்த மாரிப் பெருந் தண் சாரல…
கலைச்சொல் தெளிவோம்! 157. மெலிவுவெருளி-Blennophobia; 158.வம்பலர் வெருளி-Katikomindicaphobia;159. வானிலை வெருளி-Astraphobia
கலைச்சொல் தெளிவோம்! 157. மெலிவுவெருளி-Blennophobia/Myxophobia மெலி(1), மெலிக்கும்(2), மெலிகோல்(1), மெலிந்த(2), மெலிந்தார்(1), மெலிந்திட்ட(1), மெலிந்திலள் (1), மெலிந்து(9), மெலிய(3), மெலியர்(2), மெலியா(2), மெலியாது(1), மெலியும்(1), மெலிவு(5) என மெலிவு தொடர்பான சொற்கள் சங்கப் பாடல்களில் வருகின்றன. மெலிவு பற்றிய இயல்பு மீறிய தேவையற்ற பேரச்சம் மெலிவுவெருளி-Blennophobia/Myxophobia கலைச்சொல் தெளிவோம்! 158. வம்பலர் வெருளி-Katikomindicaphobia வம்பலன்(1), வம்பலர்(33), வம்ப மாக்கள், வம்ப மாந்தர் ஆகியன அயல்நாட்டில் இருந்து வந்து தங்கும் புதியோரைக் குறிக்கின்றது. அயல் வாழ்நர் (அயல்நாட்டில் இருந்து இங்கு வந்து வாழ்நர்) மீதான…
கலைச்சொல் தெளிவோம்! 155. மாலைமாற்று வெருளி-Aibohphobia; 156. மாப்பொருள் வெருளி-Carbophobia
கலைச்சொல் தெளிவோம்! 155. மாலைமாற்று வெருளி-Aibohphobia ஒரு சொல்லைத் திருப்பிக் கடைசி எழுத்தில் இருந்து வாசித்தாலும் அதே சொல் வருதலை இருவழிச் சொல் என்பர். இதனை அவ்வாறு சொல்வதைவிடத் தமிழிலக்கணவியலில் உள்ள மாலைமாற்று என்னும் கலைச்சொல் பொருத்தமாக அமைகிறது. பிற மொழிகளில் அத்தகைய சொற்களைத்தான் பார்க்க முடியும். தமிழில் தொடர்களும் பாடல்களுமே உள்ளன. அத்தகைய பாடலுக்கு மாலை மாற்று எனப் பெயர். அதுவே இரு வழியாகவும் அமையும் சொல்லிற்கான பெயராக இங்குக் குறிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய இயல்பு மீறிய பேரச்சம் மாலைமாற்று வெருளி-Aibohphobia கலைச்சொல்…
கலைச்சொல் தெளிவோம்! 150. பூண்டு வெருளி-Alliumphobia; 1 51. பெண் வெருளி-Gynephobia/Gynophobia;152. மகவு வெருளி-Kiddophobia
கலைச்சொல் தெளிவோம்! 150. பூண்டு வெருளி-Alliumphobia பூண்டு(7) வகை பற்றி ஏற்படும் தேவையற்ற பேரச்சம் பூண்டு வெருளி-Alliumphobia கலைச்சொல் தெளிவோம்!1 51. பெண் வெருளி-Gynephobia/Gynophobia பெண்(18), பெண்கோள்(1), பெண்டிர்(63), பெண்டிரேம்(1), பெண்டினை(1), பெண்டு (18), பெண்மை(6) எனப் பெண் என்னும் சொல்லைப் புலவர்கள் 108 இடங்களில் கையாண்டுள்ளனர். பெண்களைக் கண்டால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய பெண் வெருளி-Gynephobia/Gynophobia கலைச்சொல் தெளிவோம்! 152. மகவு வெருளி-Kiddophobia குழவி என்னும் சொல் 41 இடங்களில் வந்திருந்தாலும், இளங்குழந்தையரையே பெரிதும் குறிப்பதால் பொதுவான சொல்லாகக்…
கலைச்சொல் தெளிவோம்! 149 புற்றுநோய் வெருளி-Cancero Phobia/Carcinophobia
புற்றுநோய் வெருளி-Cancero Phobia/Carcinophobia புற்று என்பது குறித்துப் பின்வருவனபோல் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த (அகநானூறு : 8:1) செம் புற்று ஈயல் போல (புறநானூறு : 51: 10) புற்று அடங்கு அரவின் ஒடுங்கிய அம்பின் (பதிற்றுப்பத்து : 45:2) நெடுங் கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி (நற்றிணை :59:2) பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும் (பெரும்பாண் ஆற்றுப்படை : 277) புற்று போன்ற தன்மையில் உடலில் ஏற்படும் நோய்தான் புற்று நோய். வேளாணியல்,…
கலைச்சொல் தெளிவோம்! 148 புதைவு வெருளி-Taphephobia
புதைவு வெருளி-Taphephobia அடி புதை அரணம் எய்தி, படம் புக்கு (பெரும்பாண் ஆற்றுப்படை : 69) வரைத் தேன் புரையும் கவைக் கடைப் புதையொடு (பெரும்பாண் ஆற்றுப்படை : 123) முகம் புதை கதுப்பினள், இறைஞ்சி நின்றோளே (ஐங்குறுநூறு : 197.2) மயிர் புதை மாக் கண் கடிய கழற (பதிற்றுப்பத்து : 29.12) தாமரைக்கண் புதைத்து, அஞ்சித் தளர்ந்து, அதனோடு ஒழுகலான் (கலித்தொகை : 39.2) முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப (அகநானூறு : 86.23) நிலம் புதைப் பழுனிய மட்டின்…
