தமிழரை வலிமை கொள்ளச் செய்குவாய்! – நாமக்கல் கவிஞர்

5,6/6 இளந்தமிழனுக்கு ஓடி ஓடி நாட்டி லெங்கும் உண்மை யைப்ப ரப்புவாய்; ஊன மான அடிமை வாழ்வை உதறித் தள்ள ஓதுவாய்; வாடி வாடி அறம்ம றந்து வறுமைப் பட்ட தமிழரை வாய்மை யோடு தூய்மை காட்டும் வலிமை கொள்ளச் செய்குவாய்; கூடிக் கூடிக் கதைகள் பேசிச் செய்கை யற்ற யாரையும் குப்பை யோடு தள்ளி விட்டுக் கொள்கை யோடு நின்றுநீ பாடிப் பாடித் தமிழின் ஓசை உலக மெங்கும் பரவவே பார்த்த யாரும் வார்த்தை கேட்டுப் பணியு மாறு சேவைசெய்.       5 தமிழ னென்ற…

தமிழகம் அடிமைப் பட்டு மதிமயங்கி நிற்பதேன்? – நாமக்கல் கவிஞர்

1,2/6 இளந்தமிழனுக்கு இளந்த மிழா! உன்னைக் காண இன்ப மிகவும் பெருகுது! இதுவ ரைக்கும் எனக்கிருந்த துன்பம் சற்றுக் குறையுது! வளந்தி கழ்ந்த வடிவி னோடும் வலிமை பேசி வந்தனை. வறுமை மிக்க அடிமை நிற்கு வந்த ஊக்கம் கண்டுநான் தளர்ந்தி ருந்த சோகம் விட்டுத் தைரி யங்கொண் டேனடா! தமிழர் நாட்டின் மேன்மை மீளத் தக்க காலம் வந்ததோ! குளிர்ந்த என்றன் உள்ளம் போலக் குறைவி லாது நின்றுநீ குற்ற மற்ற சேவை செய்து கொற்ற மோங்கி வாழ்குவாய்!       1 பண்டி ருந்தார் சேர…

திருக்குறள்போல் ஒருநூல் வேறு எந்த மொழியிலும் இல்லை – நாமக்கல் கவிஞர்

  உலகத்திற்கு தலைசிறந்த இலக்கியங்களுள் ஒன்று நம்முடைய திருக்குறள். காலம் இடம் நிறம் மதம் என்று வேறுபாடுகளைக் கடந்து எங்கெங்கும் உள்ள எல்லா மனிதருக்கும் எக்காலத்திலும் பயன்தரக்கூடிய அறிவுரை நிரம்பிய அறநூல் திருக்குறள். மனித வருக்கத்தின் இயற்கையமைப்பில் எந்தக் காலத்திலும் மாறுதல் இல்லாதனவாகிய தத்துவங்களையே அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருப்பதால், திருக்குறள் என்றென்றும் அழிவில்லா திருக்கும். அதுமட்டுமன்றி எப்போதும் இளமையும் புதுமையும் உள்ளதாகவே இருக்கும். மனித சமூகத்துக்கு இன்றியமையாத எல்லா நல்லறிவையும் இப்படித் தொகுத்து வகுத்துத் தந்துள்ள ஒருநூல் வேறு எந்த மொழியிலும் இல்லையென்று உலகத்தின்…

என்றும் உள்ள தென்றமிழ்- நாமக்கல் கவிஞர்

  அமிழ்தம் எங்கள் தமிழ்மொழி        அன்னை வாழ்க வாழ்கவே. வைய கத்தில் இணையி லாத               வாழ்வு கண்ட தமிழ் மொழி        வான கத்தை நானி லத்தில்               வரவ ழைக்கும் தமிழ்மொழி பொய்அ கந்தை புன்மை யாவும்               போக்க வல்ல தமிழ்மொழி        புண்ணி யத்தை இடைவி டாமல்               எண்ண வைக்கும் தமிழ்மொழி மெய்வ குத்த வழியி லன்றி               மேலும் எந்தச் செல்வமும்        வேண்டி டாத தூய வாழ்வைத்               தூண்டு கின்ற தமிழ்மொழி…