வைகை அணைப்பகுதியில் தரமற்ற பாலங்கள்
வைகை அணைப்பகுதியில் தரமற்ற பாலங்கள் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தேவதானப்பட்டி அருகே உள்ள எருமலைநாயக்கன்பட்டி, வைகை அணை, செயமங்கல் ஆகிய பகுதிகளில் தரைப்பாலங்களை உடைத்துவிட்டு புதிய பாலங்களைக் கட்டுகின்றனர். இவ்வாறு கட்டப்படும் பாலங்கள் தரமற்றவையாக உள்ளன என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். தரைப்பாலங்களில் பைஞ்சுதைக் குழாய்களை(சிமிண்ட்டு) வைத்து அதன்மேல் எந்த விதக் கலவையும் போடாமல் வெறும் சல்லித்தூசிகளைக் கொட்டிவிட்டு அதன்மேல் செம்மண்ணை வைத்து வேலையை முடித்துவிடுகின்றனர். இவ்வாறு அமைக்கப்படும் தரைப்பாலங்களில் சுமையூர்திகள், கனவகை இயந்திரங்கள் செல்லும் போது பாலங்கள் உடைந்து விடுகின்றன….
எச்சரிக்கைப் பலகை அமைக்கப்படாததால் நேர்ச்சிப் பேரிடர்!
வைகை அணைப்பகுதிச் சாலையில் எச்சரிக்கைப் பலகை அமைக்கப்படாததால் நேர்ச்சி(விபத்து) ஏற்படும் பேரிடர் தேவதானப்பட்டியிலிருந்து வைகை அணை வரை செல்லும் சாலையில் எச்சரிக்கைப் பலகை அமைக்கப்படாமல் வேலைகள் நடைபெறுவதால் நேர்ச்சிகள் நிகழும் பேரிடர் ஏற்பட்டுள்ளது. தேவதானப்பட்டியிலிருந்து செயமங்கலம், வைகை அணை, முதலக்கம்பட்டி பகுதிகளில் சாலைகள் வேலை பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் ஆங்காங்கே சாலைகள் தோண்டப்பட்டு வருகின்றன. வைகை அணைப்பகுதியில் பாலங்கள் அமைக்கும் பணியும், எருமலைநாயக்கன்பட்டி, செயமங்கலம் பகுதியில் சாலையின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன. இதனால் ஆங்காங்கே…
வைகை அணையில் பேணப்படாமல் உள்ள பூங்காக்கள்-வைகை அனிசு
வைகை அணையில் பேணப்படாமல் உள்ள பூங்காக்கள் தேனிமாவட்டத்தில் உள்ள வைகை அணையில் பூங்காக்கள் பேணப்படாமல் உள்ளதால் சிறுவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வைகை அணையில் பொழுது போக்குவதற்காகப் பூங்காக்கள், சிறுவர்கள் விளையாட்டுத்திடல், இராட்டினம், சறுக்கி விளையாடும் இடம், தொடரி(இரயில்வண்டி), பாரஉந்து போன்ற பொழுது போக்குவாய்ப்புகள் நிறைய உள்ளன. மேலும் சிறுவர்கள் தனியாக விளையாடுவதற்குத் தனியாக சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது சிறுவர்கள் விளையாடும் பூங்காக்களுக்குத் தனியாக நுழைவுக்கட்டணம் பெறப்படுகிறது. கட்டணம் வாங்கியும் எந்த வித அடிப்படை வசதியும் பொதுப்பணித்துறை சார்பில் செய்துதரப்படவில்லை. இதனால் இப்பகுதியில் விளையாடும்…