தொல்லியல் ஆய்வாளர் வைகை அனீசு குடும்பத்திற்கு உதவ வேண்டுகோள்!
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்னாற்றுங் கொல்லோ உலகு தொல்லியல் ஆய்வாளர் வைகை அனீசு குடும்பத்திற்கு உதவ வேண்டுகோள்! தொல்லியல், மாந்தரியல், கல்வெட்டியல், முதலான துறைகளின் ஆய்வாளரும் ‘அகரமுதல’ முதலான பல இதழ்கள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றின் செய்தியாளரும் கட்டுரையாளரும் ஆன வைகை அனீசு மறைந்து 3 திங்கள் ஆகின்றது. அவர் பிரிந்ததை இன்னும் உணராச் சூழலில் குடும்பத்தினர் இன்னலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வரும் கல்வியாண்டிற்கு ஐந்தாம் வகுப்பு பயிலப்போகும் மகனுக்கு [செல்வன் அகமது இன்சமாம் உல் அக்கு – Ahmed Inzamam-ul-Haq] உரூபாய் 28.000,…
தொல்லியல் ஆய்வாளர் வைகை அனீசு மறைந்தார்!
அன்னையிடம் சென்றாயோ நண்பா! அகரமுதல இதழின் படைப்பாளரும் செய்தியாளரும், தொல்லியல், மாந்தரியல், கல்வெட்டியல், முதலான துறைகளின் ஆய்வாளரும் நூலாசிரியரும் கட்டுரையாளரும், தொலைக்காட்சிகள், இதழ்கள் ஆகியவற்றின் செய்தியாளருமான வைகை அனீசு (அகவை 44) ஐப்பசி 20, 2046 / நவ.06 வெள்ளியன்று அகால மரணமுற்றார் என்னும் வருத்தமான செய்தியைத் தெரிவிக்கின்றோம். நேற்று (ஐப்பசி 21, 2046 / நவ.07) யாமம் / இன்று (ஐப்பசி 22, 2046 / நவ.08) வைகறை 1.00 மணியளவில் முனைவர் ஆதிரை முல்லையின் முகநூல் வழியாகச் செய்தி…
குடிநீரில் நச்சுத்தன்மை பரவியதால் சிறுநீரகத்தை இழக்கும் மக்கள்
குடிநீரில் நச்சுத்தன்மை பரவியதால் சிறுநீரகத்தை இழக்கும் மக்கள் தேவதானப்பட்டி அருகே உள்ள தே.வாடிப்பட்டியில் உள்ள பொதுமக்களுக்கு ஊராட்சி சார்பில் ஆழ்துளைக் கிணறு அமைத்து அதன் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இதன்மூலம் இப்பகுதி மக்கள் ஊராட்சியில் வரும் தண்ணீரைப் பிடித்து குடிநீருக்குப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தே.வாடிப்பட்டி ஊராட்சிக்குற்பட்ட பகுதியில் வசிப்பவர்களுக்கு கல்அடைப்பு, சிறுநீரகக் கோளாறு முதலான நோவுகள் அடிக்கடி ஏற்பட்டு அதற்கான மருத்துவமும் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தே.வாடிப்பட்டி ஊராட்சியில் ஏறத்தாழ 10க்கும் மேற்பட்டவர்களுக்குச் சிறுநீரகக்கோளாறு ஏற்பட்டு மதுரையில் உள்ள அரசு,…
அரசால் வழங்கப்பட்ட நிலம் விற்பனை!
முதலக்கம்பட்டி ஊராட்சியில் அரசால் வழங்கப்பட்ட 2 காணி(ஏக்கர்) நிலம் விற்பனை தேவதானப்பட்டி அருகே உள்ள முதலக்கம்பட்டி ஊராட்சியில் கடந்த தி.மு.க.ஆட்சியில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட 2 காணி(ஏக்கர்) விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் முறையிடுகின்றனர் முதலக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சங்கரமூர்த்திபட்டி, முதலக்கம்பட்டி மேடு, சருக்கரை ஆலை ஆகிய பகுதிகளில் பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் 2 காணி(ஏக்கர்) நிலம் வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்படும் நிலத்திற்குப் பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு இலவசமாக வழங்கப்பட்ட நிலங்களான 2 காணி(ஏக்கர்) நிலம், பூமிதான நிலம், பஞ்சமி நிலம் போன்றவற்றை விற்பனை செய்யக்கூடாது என விதி…
நாட்டுப்புற நம்பிக்கைகளும் மொட்டைக்கோபுரமும் – வைகை அனீசு
அறிவியலுக்கு அறைகூவலிடும் நாட்டுப்புற நம்பிக்கைகளும் சிதைக்கப்பட்டு வரும் மொட்டைக்கோபுரமும் நாட்டுப்புற மக்களிடம் எண்ணற்ற நம்பிக்கைள் காணப்படுகின்றன. அனைத்தும் அறிவியல் சார்ந்தது எனக்கூறமுடியாது. இருப்பினும் பல நம்பிக்கைகள் அறிவியலின் வெளிப்பாடாக அமைந்துள்ளது. நாட்டுப்புற மக்கள் தாங்கள் அன்றாடம் வாழ்க்கையில் கண்ட சில கூறுகளை வைத்துக் காலத்தையும் நேரத்தையும் திசைகளையும் கணித்தனர். மழை, வெள்ளம், பனி, மின்னல், பூக்கள் பூப்பது, விலங்குகள் கத்துவது, பறவைகளின் ஒலி, முகில், காற்று, புயல் என வானவியல் முதலான அனைத்தையும் ஏதோ ஓர் அடிப்படையில் கணித்திருந்தார்கள். . அந்தக் கணிப்பு…
காட்டைப் பார்த்து வெகு நாளாயிற்று … குமுறும் ஆடுகள் 3
(ஆடி 31, 2046 / ஆக.16, 2016 தொடர்ச்சி) 3 கடந்த காலங்களில் ஊருக்கு ஊர் மேய்க்கால், புறம்போக்கு என்று தனியாக நிலமிருக்கும். அது ஊருக்குப் பொதுவானது. அதில் ஆடு, மாடுகளை மேய்த்திருப்பார்கள். அது மாதிரியான நிலங்களை இப்பொழுது பலரும் கவர்ந்து வைத்திருக்கிறார்கள். அதனால் ஊர் நாட்டில் மேய்க்க முடியாது. காட்டிலும் மேய்க்கத் தடை. இப்படியே இருந்தால் கடலிலும் சந்திரமண்டத்திலத்திலேயும்தான் ஆடுகளை மேய்க்க முடியும். இதன் தொடர்பாகப் பலமுறை மத்திய, மாநில மந்திரிகளிடம் நேரிடையாக மனுக்கொடுத்துள்ளோம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார். இதன் தொடர்பாகத்…
தேவதானப்பட்டிப் பகுதியில் மறைந்து வரும் தொப்புள் கொடி உறவுகள்
தேவதானப்பட்டிப் பகுதியில் மறைந்து வரும் தொப்புள் கொடி உறவுகள் அரசியல் தலைவர்கள் தேர்தலில் வாக்கு திரட்டுவற்காக வாக்காளர்களிடம் என் இனிய தொப்புள் கொடி உறவுகளே என அழைப்பது வழக்கம். தாய்க்கும் மகளுக்கும் அல்லது தாய்க்கும் மகனுக்கும் சண்டை நடந்தால் இன்றோடு உனக்கும் எனக்கும் எந்த உறவும் கிடையாது என்று வசைபாடுவதும் உண்டு. தூய்மையான தொப்புளைக் காண்பித்து நடிகைகள் பாடல்களில் ஆடுவதும், தொப்புளின் மீது பம்பரங்கள் விடுவதும் அதன் மரபைச் சிதைக்கும் ஒருவகை. தொப்புள் பகுதியை இப்பொழுது விளம்பரங்களிலும், திரைப்படப் பாடல்களிலும் பாலுணர்ச்சி தூண்டும்;…
தேவதானப்பட்டியில் விடுதலை நாளன்று மதுவிற்பனை மிகுதி!
தேவதானப்பட்டியில் விடுதலை நாளன்று மதுவிற்பனை மிகுதி! தேவதானப்பட்டியில் விடுதலை நாளன்று மதுவிற்பனை மிகுதியாக நடைபெற்றது. தேனிமாவட்டத்தில் விடுதலை நாளன்று மதுபானக்கடைகள் அனைத்திலும் மது விற்பனை செய்யக்கூடாது என அரசாணைக்கிணங்க மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். மாவட்ட ஆட்சியர் உத்தரவை மீறி தேவதானப்பட்டிப் பகுதியில் உள்ள அரசு- தனியார் மதுபானக்கடைகளில் மதுபான விற்பனை வெகுவாக நடைபெற்றது. தேவதானப்பட்டியில் உள்ள தனியார் மதுபானக்கடை, வடுகப்பட்டியில் உள்ள அரசு மதுபானக்கடை, குள்ளப்புரம் பகுதிகளில் பெட்டிக்கடைகளில் மதுபானம் விற்பனை எனப் பரலாவகவும் மிகுதியாகவும் நடைபெற்றது. ஒரு குப்பிக்கு உரூ.50 வீதம் கூடுதலாக…
தேவதானப்பட்டியில் இலவசக் கண் மருத்துவ முகாம்
தேவதானப்பட்டியில் இலவசக் கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. தேவதானப்பட்டியில் சாவெடு அறக்கட்டளை (SAWED Trust), தேனி அரவிந்து கண்மருத்துவ மனை இணைந்து இலவசக் கண் மருத்துவ முகாம் நடத்தினார்கள். இந்தக் கண்மருத்துவ முகாமில் சாவெடு அறக்கட்டளை நிறுவனர் எம்.எசு.அபுதாகிர், களப்பணியாளர்கள் ஞானசேகர், பிச்சை முத்து, அரவிந்து கண் மருத்துவமனையைச் சேர்ந்த செயராஜ,இராதா மணவாளன் ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். இம்முகாமில் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண்புரை, கண்ணில் நீர் வடிதல் முதலான நோய்களுக்குப் பண்டுவம் அளிக்கப்பட்டது. இம்முகாமில் ஏறத்தாழ 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இம்முகாமில்…
பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த மள்ளர்நாடு கோரிக்கை
பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த மள்ளர்நாடு கோரிக்கை பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று மள்ளர்நாடு அமைப்பின் சார்பாக மாநில கொள்கைப் பரப்புச்செயலாளர் செய்தியாளர்களுக்குச் செவ்வி ஒன்றை அளித்தார். அச்செவ்வியில் பின்வருமாறு கூறினார்: – அறவழிப்போராட்டத்தின் வழியாகப் போராடி வந்த மதிப்பிற்குரிய சசிபெருமாள் மரணம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுபானக் கடைகளின் முன் குடிப்பவர்களின் ஒவ்வொரு காலிலும் மறுபயன் எதிர்பாராமல் விழுந்து குடிக்காதீர்கள் என்று வேண்டிக்கொண்டு கொடூரமான அரக்கனான மதுவுக்கு எதிராகப் போராடி வந்த அவரின் இழப்பு என்பது காந்தியக் கொள்கைகளுக்கு ஒரு கரும்புள்ளியாகவம்…
காட்டைப் பார்த்து வெகு நாளாயிற்று … குமுறும் ஆடுகள் 1 – வைகை அனீசு
வனப்பகுதியில் ஆடுகள் மேய்க்கத் தடை பொதுவாக மக்களை மூவகையாகப் பிரிப்பர். முதலியர், இடையர், கடையர் என்ற பிரிவினர். கால்நடைகளை மேய்த்தவர்களை இடையர் – வேட்டுவ வாழ்வுக்கும் உழவு வாழ்வுக்கும் இடைப்பட்டவர் என்பர். ஆயர், மேய்ப்பர் என்ற சொற்கள் கிறித்தவச் சமயத்துடன் தொடர்புடைய சொற்களாக மாறிவிட்டன. ஆயம் என்பது மந்தை என்ற பொருள் கொண்டது. ஆடுகளை மேய்ப்பவர் ஆயர் எனவும் அழைக்கப்படுவர். இதேபோன்று தொழு, தொறு, தொழுவம், தொழுவர், தொழுதி எனவும் உள்ளன. பட்டினப்பாலையில் 281ஆம் அடியில் வரும் ‘புன்பொதுவர்’ என்னும் தொடருக்குப் ‘புல்லிய…
காசை கொடுத்துக் கருமாந்தரத்தை விலைக்கு வாங்காதீர்கள்!
அன்றாடம் அதிகாலையில் எழுந்து இரவு வரை ஆங்கில வழிக்கல்வி, பள்ளியில் படிப்புச்சுமை அதன் பின்னர் சிறப்பு வகுப்பு; பெற்றோரின் தூண்டுதலால் தற்காப்புக்கலை(கராத்தே), ஒத்தியம்(ஆர்மோனியம்), நாட்டியம், பரதம், காணொளி ஆட்டங்கள் எனக் கசக்கிப்பிழியப்படல்: வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை விட்டால் கூடச் சிறப்புப் பயிற்சி வகுப்பு என மாணவ, மாணவியர்களுக்கு அடுக்கடுக்கான வேலைகள். இதற்கிடையில் என்றாவது ஒரு நாள் விடுமுறை விட்டால் கூடப் பண்டைய காலத்தில் விளையாடிய கோலிக்குண்டு, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கிட்டிப்புள், மணல் விளையாட்டு, சடுகுடு, நீச்சல் போன்ற எந்த…