(வள்ளுவர் சொல்லமுதம் 14: அ. க. நவநீத கிருட்டிணன்: நன்றி கொன்றவர்க்குக் கழுவாயில்லை- தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம் அத்தியாயம் 10 பொருளும் அருளும் உலகில் மக்கள் எய்தும் உறுதிப் பொருள்கள் மூன்று. அவை அறம், பொருள், இன்பம் என்பன இம் மூன்றனுள் பொருளே அறத்தைப் புரிதற்கும் இன்பத்தை பெறுதற்கும் இன்றியமையாது வேண்டப்படும். “பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்பது நம் பொய்யில் புலவரது பொன்னான மொழி. வடுவிலா வையத்து மன்னிய மூன்றுள்நடுவணது எய்த இருதலையும் எய்தும் என்று நாலடியார் நவிலும். சீரிய வழியில் தேடிய…