1. மனத்துக்கண் மாசிலன் ஆதல் ‘அனைத்தறன்’ ஆகுல நீர பிற. 2. அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான். 3. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் பிறவாழி நீந்தல் அரிது.   உலகின் பல்வேறு மொழிகளிலும் எழுதப்பட்டுள்ள நூல்களுக்கெல்லாம் முதன்மையாக இருப்பது திருவள்ளுவர் அருளிய திருக்குறளாகும். காலத்தினால் சொல்லுவதென்பதல்லாமல், கருத்தினாலும் சொல்லப்படுவதாகின்றது.   உலகில் காணப்படுகின்ற நூல்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு துறையினையே கருத்துட்கொண்டு எழுதப்பட்டுள்ளன. தெய்வீகம், பொருளாதாரம், அரசியல், காதல் வாழ்க்கை, இல்லறம், துறவறம் இவ்வாறாக ஒவ்வொன்றில் நின்று எழுந்த…