அறவாணர்களே ஆட்சிக்குத் தேவை! அறவழியிலே தேர்தல் தேவை! – இலக்குவனார் திருவள்ளுவன்

  அறவாணர்களே ஆட்சிக்குத் தேவை! அறவழியிலே தேர்தல் தேவை! தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில். (திருவள்ளுவர், திருக்குறள் 256) உண்பதற்காக உயிரினங்களைக் கொல்ல விரும்புவோர் இல்லாவிட்டால் இறைச்சியை விலைக்குத் தர யாரும் முன்வரமாட்டார்கள் என்கிறார் திருவள்ளுவர். வாக்களிக்கக் கையூட்டு அல்லது அன்பளிப்பு என ஏதும் வாங்குவார் இல்லையெனில், அவ்வாறு தர யாரும் முன்வரமாட்டார்கள் என்று சொல்வதற்கும் பொருந்தும். “நம்மிடம் பறித்த பணத்தைத்தான் நமக்குத் தருகிறார்கள்” “வெற்றிக்குப் பின்னர் பண அறுவடை  செய்யப்போகிறவர்கள் அதில் சிறு பகுதியை நமக்குத் தரும் பொழுது…

தினகரன் வெற்றி பெற்றால் தேர்தல் செல்லாது என்பார்களா? – இலக்குவனார் திருவள்ளுவன்

தினகரன் வெற்றி பெற்றால் தேர்தல் செல்லாது என்பார்களா? நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் தினகரனுக்குச் செல்வாக்கு கூடி வருவதாக நாம் முதலில் குறிப்பிட்டதைத்தான் இப்பொழுது பிற ஊடகங்கள் கூறி வருகின்றன. இதனால் இராதாகிருட்டிணன் தொகுதிக்கான  சட்ட மன்ற இடைத் தேர்தலில் அவர் முதலிடத்தில் இருப்பதாகப் பல இதழ்களிலும்  செய்திகள் வந்துள்ளன. பொதுவாக ‘நக்கீரன்’ இதழ் வாக்கெடுப்பின் மூலமான கணிப்பு மிகச் சரியாகவே இருக்கும். ஆனால், ’நக்கீரன்’ இதழ் வெற்றி வாய்ப்பினைத் தினகரனுக்கு அளிக்கவில்லை. ‘தமிழக அரசியல்’ இதழ் தினகரனே முதலிடத்தில் இருப்பதாகத் தெரிவிக்கிறது. வாக்குப்பதிவை ஒட்டி மறு…

எதிர்காலத்திற்கான பாதை அமைப்பு அன்பளிப்பு

  கிளிநொச்சி  சிறப்புத் தேவைகளுக்குட்பட்டோர் வலையமைப்புக்கு  இலண்டனைச் சேர்ந்த புலம்பெயர் அமைப்பான  எதிர்காலத்திற்கான பாதை(PATH TO THE FUTURE) வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாகப் பல கட்டங்களாக 326,815 உரூபாய் பெறுமதியான பொருட்கள்- நிதி  முதலியன அன்பளிப்பு.    கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரத்தினபுரம்  பகுதியில் சிறப்புத் தேவைக்குரிய மாற்றுவலுவுடைய மற்றும் முற்றிலும் இயங்க முடியாத பிள்ளைகள் எனத் தொடக்கக்கட்டமாக 14 பிள்ளைகளுடன் இவ்வமைப்பு இயங்கி வருகின்றது. இவர்கள் அடிப்படை வசதிகள் இன்றி இல்லப் பிள்ளைகளைப் பேணுவதில் பல  இன்னல்களை எதிர்நோக்கி வருவதாகவும்…

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் மிதிவண்டிகள் அன்பளிப்பு

வட்டுக்கோட்டை இந்து இளைஞர் சங்கத்தினால் மிதிவண்டிகள் அன்பளிப்பு   புலம்பெயர் உறவான பிரான்சைச் சேர்ந்த உதயகுமார் தருசினி  தன் தாயாரான அம்பலவாணர் சொர்ணமலர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு  நாளை முன்னிட்டு இரண்டு மாணவிகளுக்குப் புதிய  மிதிவண்டிகளை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினூடாக வழங்கி வைத்துள்ளார். மேற்படி விண்ணப்பம் அவர்களது பெற்றோர்களால் பாடசாலை அதிபர்களின்  பரிந்துரையின் கீழ் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் விண்ணப்பித்தமைக்கு அமைவாக இன்று சங்கத் தலைமைச்செயலகத்தில் வைத்து நவாலி மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த சி.நிரஞ்சிகா, வட்டு இந்துக் கல்லூரியைச் சேர்ந்த வி.பவானி…