(ஊரும் பேரும் 64 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – அருங்குன்றம் – தொடர்ச்சி) ஊரும் பேரும்6. தமிழகம் – அன்றும் இன்றும் முன்னொரு காலத்தில் இமயம் முதல் குமரிவரை தமிழ் மொழியே பரவியிருந்த தென்பது தக்கோர் கருத்து. அப் பழம்பெருமையை நினைந்து, “சதுர்மறை ஆரியம் வருமுன்சகமுழுதும் நினதானால்முதுமொழி நீ அனாதியெனமொழிகுவதும் வியப்பாமே” என்று மனோன்மணியம் பாடிற்று. அந்நாளில் கங்கை நாட்டிலும்,காவிரிநாட்டிலும் தாளாண்மை யுடைய தமிழர் வேளாண்மை செய்தனர்; வளம் பெருக்கினர்; அறம் வளர்த்தனர். கங்கைத் திரு நாட்டில் பயிர்த் தொழில் செய்த வேளாளர் இன்றும் தமிழகத்தில்…