செயலலிதா வழியில் பணியாற்றுவேன்! – சசிகலா

செயலலிதா வழியில் பணியாற்றுவேன்! – பொதுச்செயலர் பொறுப்பேற்று சசிகலா பேச்சு   அ.தி.மு.க. பொதுச் செயலாளராகச் சசிகலா  ( மார்கழி 16, 2047 / திசம்பர் 31, 2016 அன்று) பொறுப்பு ஏற்றார்.   இராயப்பேட்டை தலைமைக் கழகத்தில் எம்ஞ்சியார், செயலலிதா படங்களைத் தொட்டு வணங்கி விட்டுப் பொதுச்செயலாளர் இருக்கையில் அமர்ந்த அவர் அ.தி.மு.க. மூத்த தலைவர்களுடன்  நெறியாடல் நடத்தினார். பின்னர் முதல்மாடியில் உள்ள அரங்குக்குச் சென்று அ.தி.மு.க.  பொறுப்பாளர்கள் மத்தியில் பேசினார். ‘‘தலைமைக் கழகப் பொறுப்பாளர்களே, அமைச்சர் பெருமக்களே, மாவட்டக் கழகச் செயலாளர்களே,…

எங்கே நீ இருக்கின்றாய் அம்மா? – கவிஞர் சீனி நைனா முகம்மது

அனைத்துயிர்க்கும் நேரில் வந்து கருணை செய்ய ஆண்டவனுக் கியலாத காரணத்தால் தனித்தனியே தாய் படைத்தான் என்று மக்கள் தாய்க்குலத்தைப் புகழ்ந்துரைக்கக் கேட்டேன், ஆனால் எனக்கு மட்டும் கருணைசெய்யக் குப்பைத் தொட்டி ஏற்றதென ஏன்விடுத்துப் போனாய் அம்மா? தனக்கெனவே வாழாத தாய்மை என்னைத் தண்டிக்க என்ன பிழை நான் புரிந்தேன்?

நீதான் கண்ணே அழகு! – அன்பு

  அம்மா!    நான் ஏம்மா அழகாய் இல்லை! யாரம்மா சொன்னது அப்படி? நீ அழகுதானே! போங்கம்மா! நான் சிவப்பாகவே இல்லையே! சிவப்பு நிறம் அழகு என்று யாரம்மா உன்னிடம் சொன்னது? எல்லா நிறமும் அழகுதான். காலச்சூழலுக்கேற்ப மக்கள் நிறம் மாறுபடுகிறது. சில நாடுகளில் மக்கள் அனைவருமே கருப்பாகத்தான் இருக்கின்றார்கள்! அப்படி என்றால் அந்த நாட்டில் அனைவரும் அழகற்றவர்கள் என்று ஆகுமா? இல்லைம்மா! என் முகம் கூட உருண்டையாக அழகாக இல்லையே! உருண்டையான முகம்தான் அழகு என்று யார் சொன்னது? எலும்பு அமைப்பிற்கேற்ப  முகவடிவமும் மாறும்….

என் தாய்

–    திருக்குறள் பாவலன் தமிழ்மகிழ்நன் 92802 53329     தாயுனைத் தொழுதுன் திருவடி பணிவேன்  தன்னலச் சேற்றினில் மாயேன்! கோயிலில் உறையும் கொற்றவை போலே   குடியினைக் காப்பவள் நீயே! சேயெமைக் காக்க சீரலொ மிழந்தாய்!   செல்வமே பிள்ளைக ளென்றாய்! ஓயுத லின்றி உழைப்பினைத் தந்தாய்!  உனக்கிலை ஒருவரு மீடே!   பற்பல தெய்வம் படைத்தன ரெனினும்  பண்புடை தாய்முதற்  தெய்வம் நற்றவம் செய்தேன் நானுனைத் தாயாய்  நல்லறப் பேற்றினால் பெற்றேன்!   வெற்றுரை யில்லை வெடித்தெழும் நெஞ்சின்   விழைவது அம்மையே…