மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  49

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  48 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 18 “இப்போதைக்கு என்னை விட்டுவிடு அரவிந்தன். இராத்திரி ஒன்பது மணிக்கு மேல் அச்சகத்துக்கு வந்து அடி முதல் நுனி வரையில் எல்லா விவரமும் நானே சொல்லிவிடுகிறேன். திலகர் திடலில் ஆறரை மணிக்குப் பொதுக்கூட்டம். நான் அதில் பேசுகிறேன்” என்று பரபரப்பைக் காட்டிக் கொண்டு அரவிந்தனிடமிருந்து நழுவினான் முருகானந்தம். “இந்தப் பொதுக்கூட்டம், தொழிற்சங்கம், சமூகத்தொண்டு, ஏழைகளின் உதவி நிதிகள் – இவையெல்லாம் இனி என்ன கதியடையப் போகின்றனவோ? நீ காதல் வலையில் நன்றாகச் சிக்கிக் கொண்டு…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  48

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  47 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்18 பரபரப்பினோடே பலபல செய்தாங்(கு)இரவு பகல் பாழுக்(கு) இறைப்ப – ஒருவாற்றான்நல்லாற்றின் ஊக்கிற் பதறிக் குலைகுலைபஎவ்வாற்றான் உய்வார் இவர்.      — குமரகுருபரர் மேற்கு வானத்திலிருந்து தங்க ஊசிகள் நீளம் நீளமாக இறங்குகிறாற் போல் மாலை வெயில் பொற்பூச்சுப் பூசிக் கொண்டிருந்தது. கண்களுக்கு நேரே மஞ்சள் நிறக் கண்ணாடிக் காகிதத்தைப் பிடித்துக் கொண்டுப் பார்க்கிற மாதிரி தெருக்களும், வீடுகளும், மரங்களும் மஞ்சள் கவிந்து எத்தனை எழில் மிகுந்து தோன்றுகின்றன! கோடானுகோடி நெருஞ்சிப் பூக்களை வாரிக்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 2.

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 1. தொடர்ச்சி)   குறிஞ்சி மலர் அத்தியாயம் 1 மெய்யாய் இருந்தது நாட்செல வெட்ட வெறும்பொய்யாய்ப் பழங்கதையாய்க் கற்பனையாய்மெல்லப் போனதுவே! பேரண்டப் பூச்செடியில் மறுபடியும் ஒருநாள் மலர் பூத்துக் கொண்டிருந்தது. மார்கழி மாதத்து வைகறை! உலகம் முழுவதுமே பனித்துளி நீங்காத (உ)ரோசாப் பூக்களால் கட்டிய பூ மண்டபம் போல் புனிதமானதொரு குளிர் பரவியிருந்தது. மலரின் மென்மையில் கலந்து இழையோடும் மணம் போல் அந்தக் குளிரோடு கலந்து வீசும் இதமான மண்காற்று புலர்ந்தும் புலராமலும் இருக்கிற பேரரும்பு போல் விடிந்தும்…