(ஊரும் பேரும் 39 : மலையும்குன்றும் – தொடர்ச்சி) ஆறும் குளமும்      ஆண்டவன் கோயில் கொண்டுள்ள ஆற்றுப் பதிகளை ஒரு பாட்டிலே அடுக்கிக் கூறினார் திருநாவுக்கரசர்.       “நள்ளாறும் பழையாறும் கோட்டாற் றோடு       நலந்திகழும் நாலாறும் திருவையாறும்      தெள்ளாறும்” என்று அப் பெரியார் எடுத்த திருப்பாசுரத்தில் ஆறு பதிகள் குறிக்கப்படுகின்றன. அவற்றின் தன்மையை முறையாகக் காண்போம். திருநள்ளாறு      காரைக்காலுக்கு அண்மையில் உள்ளது திரு நள்ளாறு. நளன் என்னும் மன்னவன் ஈசனை வழிபட்டுக் கலி நீங்கப் பெற்ற இடம் நள்ளாறென்பர்….