(தோழர் தியாகு எழுதுகிறார் : இசுரேல் எதிர்ப்பும் இசுலாமியக் குறுநெறியும் – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! “ஆறு முதல் கடல் வரை பாலத்தீனத்துக்கு விடுதலை!” அட்டோபர் 7 இசுரேல் மீது ஃகாமாசு தாக்குதலுக்குப் பின் நூறு நாட்களுக்கும் மேலாயிற்று. இசுரேல் அரசு காசா மீது தரை வழிப் படையெடுப்புத் தொடங்கி 75 நாட்களுக்கு மேலாயிற்று. சற்றொப்ப 1,500 இசுரேலியர்களும் 20,000 பாலத்தீனியர்களும் கொல்லப்பட்டிருப்பதாகக் கணக்கிடபப்டுகிறது. கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலார் போருக்குத் தொடர்பில்லாத குழந்தைகள், பெண்கள், முதியவர்கள்! ஃகாமாசு பிடித்துச் சென்ற பிணைக் கைதிகளில் 130 பேர்…