(தோழர் தியாகு எழுதுகிறார்- “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் ! (3)-தொடர்ச்சி) பொதுக் குடியியல் சட்டம் இந்துச் சட்டம் இந்தியச் சட்டமானது எப்படி? இந்தியாவில், முதலாண்மைப் பெருங்குழுமங்களுக்கும் இந்துக் கூட்டுக் குடும்பத்துக்குமான பிணைப்புச் சொத்தின் மீதும் மூலமுதலின் மீதும் குடும்பத்தின் கட்டுப்பாட்டைப் பேணுவதில் தனித்தன்மையதாக உள்ளது எனக் கண்டோம். ஒரு சட்டமுறை நிறுவனமாக இந்தச் சலுகை இந்துக்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது, இது இந்துத் தனியாள், குடும்பச் சட்ட நெறிகளில் வரை யறுக்கப்பட்டுப் புனிதமாக்கப்படுகிறது. அரசமைப்பில் கூறியுள்ளபடி முசுலிம், கிறித்தவர், பார்சி அல்லது…