இருமொழிக் கொள்கை தமிழைக் காப்பாற்றியதா? தேவை நமக்கு ஒரு மொழிக் கொள்கையே! தமிழ் நாட்டில் இருமொழிக் கல்வியைப் பா.ச.க தவிர்த்த அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்கின்றன. ஆனால், இங்கு இருமொழிக் கொள்கையே உயிர்மூச்சு என்ற பெயரில் ஒரு மொழியான ஆங்கிலம் தான் கோலோச்சுகிறது. தமிழ் வளர்ச்சி பெரிதும் தடைபட்டுள்ளது. தாய்மொழியாம் தமிழை அறியாத் தலைமுறைகள் உருவாகியுள்ளன. இதைத் தடுக்க நாம் செய்ய வேண்டியது என்ன? என அலசுகிறார், தமிழறிஞர், இலக்குவனார் திருவள்ளுவன் 1967-இல் மத்திய நாடாளுமன்றத்தில்  ‘ஆட்சி மொழிகள் திருத்தச் சட்டம்’,  1968-இல் மும்மொழிக் கொள்கைக்கான…